இறந்த மருத்துவர் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி போனில் ஆறுதல்.!
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் சைமன் அவர்களின் மனைவி ஆனந்தி சைமனிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முதல்வர் ஆறுதல் கூறியுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தியிடம் தொலைபேசியில் முதல்வர் பழனிசாமி ஆறுதல் கூறினார். சைமனின் மகன், மகளின் எதிர்கால நலன் கருது தைரியமாக இருக்க ஆனந்தியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கீழ்பாக்கம் கல்லறையில் தனது கணவரின் உடலை மறுஅடக்கம் செய்ய வலியுறுத்தியிருந்தார் ஆனந்தி சைமன் என்பது குறிப்பிடப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் பழனிச்சாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், இன்று சுமார் 12:30 மணியளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் சைமன் அவர்களின் மனைவி ஆனந்தி சைமனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன் என்றும் அவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோரின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.
இன்று சுமார் 12:30 மணியளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் திரு.சைமன் அவர்களின் துணைவியார் திருமதி.ஆனந்தி சைமன் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.
அவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோரின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 22, 2020