நீங்கள் தான் ‘காவிரி காப்பளான்’…முதல்வரை கௌரவித்த விவசாயிகள்

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அன்மையில் அறிவித்தார் இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.அவ் விழாவில் முதலமைச்சருக்கு “காவிரி காப்பாளன்” என்ற விருதை விவசாயிகள் வழங்கி கவுரவித்தனர்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொருளாதார ரீதியில் விவசாயிகள் முன்னேற தேவைப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் அவர் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது வழக்குப்பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் அரசு திரும்ப பெறுவது குறித்து பரிசீலித்து வருவதாக உடன் தெரிவித்தார்.
காவிரி -டூ-கோதாவரி இணைப்பு திட்டம் நிச்சயமாக நிறைவேறும் என்று உறுதி அளித்த முதலமைச்சர் நீடாமங்கலத்தில் நெல் ஜெயராமன் பெயரில்,பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் ஒன்று அமைக்கப்படும் என்று இந்நிகழ்ச்சியிலேயே அறிவித்தார். டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இலக்கு செய்யப்பட்டுள்ளதாகவும், கும்பகோணத்தில் வெற்றிலைக்கான சிறப்பு மையம் என்பன பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சாலையில் மாட்டு வண்டி ஓட்டி வர, சாலையின் இருபுறமும் விவசாயிகளும் பொதுமக்களும் கூடி அவரை உற்சாகமாக வரவேற்றனர்.மாட்டு வண்டியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025