துரோகம் இழைத்திருக்கிறது பழனிசாமி அரசு – மு.க.ஸ்டாலின் அறிக்கை
போராடிப்பெற்ற சமூகநீதியின் பயன் இந்த ஆண்டே அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்காத வகையில் – கூட்டணியாகத் துரோகம் இழைத்த முதலமைச்சர் பழனிசாமிக்கும் – பாஜக அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மேற்படிப்புகளில் இந்தாண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு கடுமையாக வாதிட்டதன் காரணமாக இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போராடிப் பெற்ற சமூகநீதியின் பயன் இந்த ஆண்டே அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்காமல் போகும் வகையில், கூட்டணியாகத் துரோகம் செய்த முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மருத்துவர்களுக்கு, உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் 50% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடி பாழ்படுத்தியுள்ளது பாஜக அரசு.
கலந்தாய்வைக் கால தாமதம் செய்து அவர்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறது @CMOTamilNadu அரசு.
கடும் கண்டனங்கள்!#ReservationIsOurRight pic.twitter.com/9REBSyo13d
— M.K.Stalin (@mkstalin) November 27, 2020