உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், நரசோதிப்பட்டியில் நேற்று மின்கசிவினால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சேட்டு என்பவரின் மகன் கார்த்திக், அன்பழகன் என்பவரின் மனைவி புஷ்பா, கார்த்திக் என்பவரின் மனைவி மகேஸ்வரி, மகன்கள் சர்வேஷ் மற்றும் முகேஷ் ஆகிய ஐந்து நபர்கள் பலத்த தீக்காயமடைந்தனர், மேலும் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியது “சேலம் மாவட்டம், நரசோதிப்பட்டியில் நேற்று மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் திருமதி. புஷ்பா,திரு.கார்த்திக், திரு.மகேஸ்வரி, திரு.சர்வேஷ் மற்றும் திரு.முகேஷ் ஆகிய ஐந்து நபர்கள் தீக்காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட…