காவல்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் பணி புரியும் காவல்த்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கினார்.
இந்தியாவில் கொரோனா பரவுவது அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில், நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இந்த கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் பணி புரியும் காவல்த்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கினார்.