ஜெயலலிதாவை விமர்சித்த ராமதாசுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார்- தினகரன்
- அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஜெயலலிதாவை விமர்சித்த ராமதாசுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஜெயலலிதாவை விமர்சித்த ராமதாசுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார். ஒருமையில் திட்டும் அன்புமணி ராமதாசுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளீர்கள்? என்றும் அதிமுக கூட்டணியை ஜெயலலிதாவின் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என தெரியவில்லை.
அதேபோல் முகிலன் காணாமல் போனதற்கு முதலமைச்சரே பொறுப்பு ஆவார் . ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.