உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிரடி சலுகை! மானியம் அறிவித்தார் முதல்வர்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு உபகரணங்கள் தயாரிக்கின்ற சிறு, குறு, பெரு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவைத் தடுக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் துறைகளின் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு உபகரணங்களை உற்பத்தி தொடர்பான சலுகை அறிவிப்புகளை தற்போது முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில் ‘கொரோனா நோய் தடுப்புக்கான கீழ்க்காணும் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்களின் உற்பத்திக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர்
- உள் நுழைவு செயற்கை சுவாச கருவிகள் (Invasive Ventilators),
- N-95 முகக் கவசங்கள் (N95 Masks),
- பல்வகை பண்பளவு கணினி திரைகள் (Multi Parameter ICU Monitors),
- கொரோனா நோய் தடுப்புக்கான வைரஸ் எதிர்ப்பு, மலேரியா எதிர்ப்பு மருந்துகள்,
- ஹைட்ராக்சிக் குளோரோ குவினோன், அசித்ரோமைசின் வைட்டமின்-சி (மாத்திரை, திரவ வடிவில்),
- தனி நபர் பாதுகாப்பு கவச உடை (Personal Protection Equipments as per applicable National standards)மேற்படி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களோ அல்லது புதிய நிறுவனங்களோ தமிழ்நாட்டில் ஜூலை 31, 2020-க்குள் புதிதாக உற்பத்தி செய்யத் துவங்கி இருந்தால் அவர்களுக்கும் இச்சலுகைகள் வழங்கப்படும்.
- குறு, சிறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் இச்சலுகைகள் பொருந்தும்.தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு அதன் மொத்த மூலதனத்தில் 30% மூலதன மானியமாக ரூ.20 கோடி உச்சவரம்பாக கொண்டு 5 ஆண்டு காலத்திற்கு சம தவணைகளாக பிரித்து வழங்கப்படும்.
மேலும் தெரிவித்துள்ள முதல்வர் கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சிறப்பு தொழில் நிறுவனங்களாக கருதப்பட்டு அவ்வாறு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சலுகைகளும் வழங்கப்படும். மேற்படி பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து நிறுவனங்களும் திட்ட அனுமதி உட்பட அனைத்துவித அனுமதிகளும் பெறுவதற்காக காத்திராமல் உடனடியாக உற்பத்தியை துவக்கலாம் என்று உத்தரவு பிறபித்த முதல்வர் உற்பத்தி துவக்கிய பின்னர் அரசின் அனுமதிகளை பெற்றுக் கொள்ளலாம். இவை அனைத்திற்கும் ஒற்றைச்சாளர அனுமதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப குறுகிய, நீண்ட கால குத்தகை அடிப்படையிலான சிப்காட், சிட்கோ நிறுவனங்கள் மூலமாக முன்னுரிமை அடிப்படையில் நிலம் / கூடாரங்கள் வழங்கப்படும். 100 % முத்திரைத்தாள் கட்டணத்திற்கு விலக்கு உண்டு.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் செயல்பாட்டு மூலதனக் கடனிற்கான (Working capital) வட்டியில் 6 %த்தை 3 காலாண்டுகளில் (31.12.2020 வரை) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் அரசு மானியமாக வழங்கும்.
அடுத்த 4 மாதங்களில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளில், குறைந்தபட்சம் 50%த்தை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கொள்முதல் (Purchase Guarantee) செய்யும். இதற்கென திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
பெரு நிறுவனங்களுக்கு சிப்காட் நிறுவனமும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வணிக ஆணையரகமும் இச்சலுகைகளை வழங்குவதற்கான முகமை நிறுவனங்களாக செயல்படும் என்று தெரிவித்த முதல்வர் இத்திட்டத்தின்படி உற்பத்தி துவக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் சலுகைகள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025
12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
March 3, 2025
2025 ஆஸ்கார் விருதுகள்! 5 விருதுகளை தட்டி தூக்கிய அனோரா!
March 3, 2025