எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். நேற்று வீரமரணமடைந்த பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.
இதன் பின்னர் பழனியின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூருக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு உயிர் தியாகம் செய்த பழனிக்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். பழனியின் உடலுக்கு ஆட்சியர் வீர ராகவராவ், தமிழக காவல் உயர் அதிகாரிகளும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.இறுதியாக வீரமரணம் அடைந்த பழனியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…
சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…