பழனி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம் உயிரிழப்பு.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நரிக்கல்பட்டி சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு அப்பர் தெருவில் 12 செண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பழனியில் தியேட்டர் நடத்திவரும் நடராஜன் என்பவர், தனக்கு சொந்தமான இடம் என கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, இளங்கோவின் உறவினர்களான பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோரும் நடராஜனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில், பழனிசாமியின் வயிற்றிலும், சுப்பிரமணியின் தொடையிலும், குண்டுகள் பாய்ந்து உள்ளது. இதனையடுத்து, போலீசார் நடராஜனை கைது செய்தனர்.
மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியின் உடலில் இருந்து 3 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின், அவரது உடலில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது. ஆனால், குண்டு பாய்ந்ததால் இவரது இரத்த நாளங்கள் ஏற்கனவே பாதிப்படைந்துள்ளது. இதனால், இவருக்கு சிகிச்சை அளிப்பது, மருத்துவர்களுக்கு சவாலாக இருந்தது. இருப்பினும், இவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால், நடராஜன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…