பழனி துப்பாக்கி சூடு! காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலி!

Default Image

பழனி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம் உயிரிழப்பு.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நரிக்கல்பட்டி சேர்ந்தவர் இளங்கோ.  இவருக்கு அப்பர் தெருவில் 12  செண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பழனியில் தியேட்டர் நடத்திவரும் நடராஜன் என்பவர், தனக்கு சொந்தமான இடம் என கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, இளங்கோவின் உறவினர்களான பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோரும் நடராஜனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  இந்த தகராறில் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த  துப்பாக்கி சூட்டில், பழனிசாமியின் வயிற்றிலும், சுப்பிரமணியின் தொடையிலும், குண்டுகள் பாய்ந்து உள்ளது. இதனையடுத்து, போலீசார் நடராஜனை கைது செய்தனர்.

மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியின் உடலில் இருந்து 3 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின், அவரது உடலில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது. ஆனால், குண்டு பாய்ந்ததால் இவரது இரத்த நாளங்கள் ஏற்கனவே பாதிப்படைந்துள்ளது. இதனால், இவருக்கு சிகிச்சை அளிப்பது, மருத்துவர்களுக்கு சவாலாக இருந்தது. இருப்பினும், இவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால், நடராஜன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament
Protest against Amit shah speech