#BREAKING: வீடு தேடி வரும் பழநி பஞ்சாமிர்தம்- அமைச்சர் அறிவிப்பு..!
இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வெளிமாநிலத்தவர்கள் மற்றும் திருக்கோவிலுக்கு வர இயலாத சூழ்நிலையில் உள்ள பக்தர்கள் பயனடையும் வகையில் பிரசாத்தினை பக்தர்களின் இல்லத்தில் கொண்டு செல்லும் நடைமுறை அறிமுகப்படுத்தும் விதமாக பழனி கோவிலின் பிரசித்திபெற்ற பிரசாதமான அரை கிலோ எடை கொண்ட லேமினேட்டட் பஞ்சாமிர்தம், திருக்கோவில் மூலம் இயற்கையாக தயார் செய்யும் விபூதி 10 கிராம் மற்றும் 6″X 4″ அளவிலான தண்டாயுதபாணி சுவாமியை இராஜா அலங்கார லேமினேட்டட் படம் ஓன்றும் அஞ்சல் துறை மூலம் ரூ.250 கட்டணம் செலுத்தினால் பக்தர்கள் இல்லத்திற்கு சென்றடையும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.