பல முறை போராடியும் தீர்வு கிடைக்காத மலைவாழ் மக்கள் வினோத போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்…!!
நாமக்கல் மாவட்டம் கொள்ளியூரை அடுத்த அரியூர் காஸ்மா கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 40 ஆண்டுகளாக தங்களுக்கு தார் சாலை தரும்படி போராடி வருகின்றனர். ஆனால் இதற்க்கு அரசாங்கம் எந்த தீர்வும் அளிக்கவில்லை.
இந்த கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நடந்தே பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து மலைவாழ் மக்கள் அரசிடம் ரேஷன் மற்றும் ஆதார்காட்டை ஒப்படைத்து போராட்டம் நடத்த போவதாக கூறியுள்ளனர்.