பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரபாகரன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியானது காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
இதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரபாகரன் என்பவர் ஏழு சுற்றுகள் முடிவில் இருபத்தி ஏழு காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார். இவர், 2020, 2021 ஆம் ஆண்டிலும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
11 காளைகளை அடக்கி 2-வது இடம் பிடித்த கார்த்திக் ராஜாவுக்கு டிவி பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான பரிசை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சூலிவளி என்பவரது காளை பெற்ற நிலையில், அந்த காரின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…