அரசியல், சினிமா,எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்டவர் பழ. கருப்பையா.இவர் முன்னாள் சட்ட மன்ற உ றுப்பினர் ஆவார். அதிமுக சார்பாக சென்னை மாவட்டத்தின் ஒரு பகுதியான துறைமுகம் தொகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் . இவர் அங்காடித் தெரு ,சர்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பட்டினத்தார் ஒரு பார்வை, அரசியல் சதிராட்டங்கள், காலம் கிழித்த கோடுகள், கண்ணதாசன், காலத்தின் வெளிப்பாடு, எல்லைகள் நீத்த ராம கதை, கருணாநிதி என்ன கடவுளா? என்ற நாவல்களை எழுதியவர் ஆவார்.
கடந்த 2016 -ஆம் ஆண்டு கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு அதிமுகவின் அப்போதைய பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இதனால் தன்னுடைய துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்பு அதிமுகவை விமர்சனம் செய்யத் தொடங்கினார்.பின்னர் அதிமுகவில் இருந்து கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.இந்தநிலையில் இன்று திமுகவில் இருந்து விலகுவதாக பழ. கருப்பையா அறிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…