சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று (16-12-2024) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால் தமிழகத்தில் இன்று (17) மற்றும் நாளை (18 ஆகிய தேதிகளில் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு […]
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாளை (டிச.,17) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை கியா 4 மாவட்டங்களில் கன முதல் மிக […]
கோவை : கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியன்று கோவை நகரில் 12 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் இதுவரை 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை பெற்று வருகின்றனர். அதில், அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பாஷா என்பவர் முக்கிய குற்றவாளிகளில் ஒருவாராக பார்க்கப்படுகிறார். கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த 72 வயதான எஸ்.ஏ.பாஷா, உடல்நல குறைவு காரணமாக […]
தூத்துக்குடி : கடந்த வாரம் நெல்லை , தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் தேங்கிய மழைநீரை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியேற்றி வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. பல இடங்களில் தேங்கியிருந்த […]
சென்னை: மார்கழி மாத பிறப்பையொட்டி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலுக்கு நேற்றைய தினம் (டிசம்பர் 15) இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்பொழுது, அர்த்த மண்டபத்திற்குள் சென்ற இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்ற செய்தி பேசுபொருளாக மாறியது. அதாவது, ஜீயர்களுடன் கருவறை வரை சென்ற இளையராஜா, அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி பரவியது மட்டும் இல்லாமல், […]
சென்னை : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு நேற்று இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது அங்குள்ள அர்த்த மண்டபத்தின் வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்து, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அர்த்த மண்டபத்தில் இளையராஜா அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி பேசுபொருளாக மாறியது. இது குறித்து இந்து அறநிலையத்துறை விளக்கம் ஒன்றையும் அளித்து இருந்தது. அதில், அர்த்த மண்டபத்த்தில் அர்ச்சகர்கள், மடாதிபதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். என்று விளக்கம் அளித்து இருந்தது. இச்சம்பவம் […]
சென்னை : நேற்று (டிசம்பர் 15) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது அவரை அர்த்த மண்டபத்திற்குள் உள்ளே அனுமதிக்கவில்லை என்றும், அவர் அர்த்த மண்டபத்தின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அறநிலையத்துறையின் (மதுரை) இணை ஆணையர் செல்லத்துரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு […]
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக விமர்சித்தும், தவெகவுக்கு மறைமுகமாக ஆதரவாக பேசியிருந்தார். கூட்டணி கட்சியில் இருந்து கொண்டே திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்ததன் காரணத்தால், ஆதவ் அர்ஜுனாவை விசிகவிலிருந்து 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்தார். இதனை தொடர்ந்து, தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி, ‘நான் என்றும் மதிக்கும் அன்பு தலைவர் என திருமாவளவனை’ குறிப்பிட்டு […]
கோவை : குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம், கல்லிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர்.மடம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை , பூண்டி, செம்மேடு , தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம் பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார், சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்டபுதூர், கெண்டபாளையம், தொட்டாசனூர், தேவனாபுரம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், […]
சென்னை : மார்கழி மாதப் பிறப்பானது டிசம்பர் 16ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. எனவே, இதனைமுன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்றிரவு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை பார்த்துவிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக இளையராஜா கோவிலுக்கு வருகை தந்திருந்தார். அப்போது, இளையராஜா வந்தவுடன் அவருடன் ஜீயர்கள் சிலர் பேசிக்கொண்டு அவரை முதலில் கோயில் கருவறைக்குள் அழைத்து சென்றார்கள்.அப்போது, அங்கு வருகை தந்திருந்த பக்தர்கள் சிலர் முகம் சுழித்து கொண்டு அவர் […]
சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனென்றால், மத்திய அரசு நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு […]
சென்னை : உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட தமிழக வீரர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி வெற்றிபெற்றார். பரபரப்பாக சென்ற 14-வது சுற்றில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். இதனையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், […]
சென்னை : வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்பதால் தமிழகத்தில் வரும் டிசம்பர் 17மற்றும் 18 தேதிகளில் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செமீ வரை கனமழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, […]
சென்னை : தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு 12 முதல் 20 செமீ வரை கனமழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது, பக்கதர்கள் சிலர் அவர் உள்ளே செல்லக்கூடாது என கரகோஷமிட்ட நிலையில், விதிமீறல்கள் இருப்பதாக வெளியே செல்லும்படி கூறிய ஜீயர்கள் கூறிய […]
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக விமர்சித்து பேசியிருந்தார். கட்சியில் இருந்துகொண்டே கூட்டணி கட்சி பற்றி அவர் பேசிய காரணத்தால் விசிக கட்சியிலிருந்து அவரை 6 மாத கால சஸ்பெண்ட் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என சமீபத்தில் ஆதவ் அர்ஜுனாவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில், அவர் கட்சியில் இருந்து விலகியது குறித்தும் […]
சென்னை : நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் திமுகவை விமர்சனம் செய்து பேசியிருந்தார். அதில் அவர் பேசியதாவது “மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கொள்ளை புறம் வழியாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான். கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா?மன்னர் ஆட்சியில் தான் மன்னருக்கு பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். […]
கும்பகோணம் : சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜய் இந்த விழாவிற்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை வருகை தராததற்கு கூட்டணி கட்சி (திமுக) அழுத்தம் கொடுப்பதாக விமர்சித்து பேசியிருந்தார். அதைப்போல, ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக விமர்சித்து பேசியிருந்ததால் விசிக கட்சியிலிருந்து அவரை 6 மாத கால சஸ்பெண்ட் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என […]
சென்னை : தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, 17-12-2024: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், […]
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக விமர்சித்து பேசியிருந்ததால் விசிக கட்சியிலிருந்து அவரை 6 மாத கால சஸ்பெண்ட் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டிகளில் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட பிறகும் எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்கிறார் எனவும், அவர் பேசுவதைப் பார்த்தால் ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதுபோல […]