திருச்சி : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் PM Shri திட்டத்தின் கீழ் தமிழகம் சேராதது வரையில் தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்பது போல மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேசியது தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிக்கிறது என தமிழகத்தில் திமுக, அதிமுக , விசிக, காங்கிரஸ், நாதக, தவெக என அனைத்து கட்சியினருமே எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகின்றனர். அன்பில் […]
சென்னை : கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தான் அரசியல் செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் கல்வியை அரசியலாக்கக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிய கல்விக் கொள்கை மீதான தமிழக அரசின் […]
சென்னை : இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) ஏற்பாட்டில், ‘FICCI மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ மாநாடு இன்று, பிப்ரவரி 21, 2025, சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தொடங்குகிறது. (பிப் 21-22) இரண்டு நாள் நடைபெறும் இந்நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு தொடங்கி வைக்கஉள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன் தலைமை வழிகாட்டியாக பங்கேற்கிறார். மாநாட்டின் […]
சென்னை : நேற்று திமுக டிவிட்டரில் #GetOutModi என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டிருந்த நிலையில், நாளை நான் காலை 6 மணிக்கு #GETOUTSTALIN என பதிவிடுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். அதைப்போலவே, இன்று காலை அந்த ஹேஷ்டேக்கை வெளியிட்டுள்ள நிலையில், பாஜக ஆதரவாளர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மற்றோரு பக்கம் திமுக ஆதரவாளர்கள் #GetOutModi என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதனால் டிவிட்டரில் டேக் வார் அனல் பறந்து கொண்டு […]
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ (UNESCO) 1999ல் இந்த நாளை மொழிவழி உரிமைகளுக்காக உயிரிழந்தவர்களை நினைவுகூர அறிவித்த நிலையில், அப்போதிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தாய்மொழி தினம் என்பதால் சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ” எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் […]
சென்னை : நேற்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்த ஹேஷ்டேக்குகளில் ஒன்று #GetOutModi. இந்த டேக் நேற்று உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்த நிலையில், தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “GET OUT MODI” என பதிவிட்டது தொடர்பாக பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர் ” நீங்கள் GET OUT MODI என போடுங்கள்.. அதற்கு நான் நாளை என்னுடைய டிவிட்டரில் காலை 6 மணிக்கு GET OUT STALIN […]
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 பேரை கைது செய்திருந்தது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், இலங்கை கடற்படையால் 10 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அக்கட்சியின் கொள்கை தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் சிலைகளை திறந்து வைத்தார். இந்த நிலையில், இன்று நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவருமான விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, தவெக தலைவர் […]
சென்னை : பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் இனி Go Back மோடி என சொல்ல மாட்டோம் Get Out மோடி என்று தான் சொல்வோம் என மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னதாக ஒரு கூட்டத்தில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு நேற்று கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். Get Out மோடி : […]
சென்னை : நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தவெக தலைவர் விஜய் தனது கனவில் வந்ததாக சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய், அதில் ஓராண்டை தாண்டயது. விஜய் அரசியலில் முழுமையாக இறங்கி, தனது அடுதடுத்த நகர்வுகளும் ஒட்டுமொத்த அரசியல் களமும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். இந்நிலையில், விஜய் அரசியல் கட்சி துவங்கியது குறித்து மீடியாக்கள் பேசுவதை தாண்டி, நடிகர் நடிகைகளும் தங்களது கருத்துக்களை பாஸிடிவாக கூறுவது மற்றுமின்றி, […]
சென்னை : தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச கோயில்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோது பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலைத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என பேசியிருந்தார். அது மட்டுமின்றி, கோயில்களுக்கு வரும் வருமானங்களை வைத்து, அந்த பகுதியில் கல்வி நிறுவனங்கள் நிறுவலாம் எனவும் பேசியிருந்தார். இந்த சூழலில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு அண்ணாமலை பேச்சுக்கு பதிலடி கொடுத்ததுடன் அவருக்கு சவால் விடும் வகையிலும் […]
வாரணாசி : புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி இருந்த சூழலில், இன்னும் பரபரப்பை கிளப்பும் வகையில் ரயில்களில் இடமின்றி, பயணிகள் சிலர் ரயிலின் ஏசி பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைய முயன்ற […]
சென்னை : தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமீபத்தில் வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்றிருந்தார்கள், இப்போது போட்டிகள் முடிந்த நிலையில், அவர்கள் சென்னை திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். ஏனென்றால், கும்பமேளாவுக்கு சென்றவர்கள் முன்பதிவு செய்த ரயில் பெட்டியில் ஏறியதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி வீரர்கள் ரயிலில் ஏற முடியாததால் வாரணாசி ரயில் நிலையத்திலேயே காத்திருக்கிறார்கள். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையும் முன் வைத்துள்ளனர். டெல்லியில் 28-ஆண்டுகளுக்கு […]
சென்னை : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக திமுக குறித்து விமர்சனம் செய்வதும் அதற்கு அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பதிலடி கொடுத்ததும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி சமீபகாலமாக தமிழகத்தில் நடக்கும் பாலியல் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து திமுக ஆட்சி சரியில்லை என்கிற வகையில் பேசியிருந்தார். இதனையடுத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் வலைதள பாலியல் புகார்க்கு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கிறது எனவும் பழனிசாமி பாஜகவுக்கு தனது ராஜ விசுவாசத்தைக் காட்டுகிறார் […]
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன, இதுபோன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது வருத்தம் மற்றும் கண்டனத்திற்கு உரியது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது பதவிவில், “தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம். சங்க […]
கோவை : முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக பற்றியும் , எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைவது பற்றிய கருத்துக்களுக்கும் பதில் அளித்து பேசியிருந்தார். அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான முந்தைய சந்திப்பு பற்றியும் அவர்கள் கூறியது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ” அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) நானும், எடப்பாடி பழனிசாமியும் அங்கம் வகித்தோம். அப்போது கூட்டணி […]
சென்னை : கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியினர் சிலர் அதிருப்தி தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இன்று நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அம்பத்தூர் கோ. தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் ஆரம்பம் முதல் நாம் தமிழர் கட்சியுடைய மாநில கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். இது தொடர்பாக தமிழரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபாகரனிசத்தை சிதைத்து, சீமானிசத்தை விதைத்து கட்சியை […]
சென்னை : தமிழகத்தில் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமீபகாலமாக தொடர்ச்சியாக வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், பள்ளி உதவித் தலைமையாசிரியர் மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கு புகார் தெரிவித்த நிலையில், உடனடியாக விசாரணை மேற்கொண்டார்கள். விசாரணையில் மாணவிகள் தங்களுடைய புகார்களை தனி தனியாக தெரிவித்த நிலையில், […]
திருப்பூர் : ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண் கணவர் மற்றும் குழந்தையுடன் வேலை தேடி தமிழகத்திற்கு வந்துள்ளார். அங்கு வேலை கிடைக்காததால், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்து, திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, பீகாரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள்—முகமது நதீம் (24), முகமது டேனிஷ் (25), மற்றும் முகமது முர்ஷித் (19)—அவர்களை சந்தித்து, வேலை வாய்ப்பு […]