சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தந்தை குமரி அனந்தன் போட்டோவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குமரி அனந்தன், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 8ம் தேதி அன்று சென்னையில் காலமானார். தமிழிசை பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர், மேலும் அவரது தந்தையின் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இந்த நிலையில், […]
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார். அதில், சைவம் , வைணவம் , உடலுறவு என மறைமுகமாக மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறியது. இதற்கு மாற்று கட்சியினர் மத்தியில் மட்டுமல்ல, சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. திமுக எம்பி கனிமொழி தனது கடும் கண்டனத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை […]
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள் தற்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதனை மாற்று கட்சியினர் தவிர்த்து சொந்த திமுக கட்சியினரே வெறுக்கும் அளவுக்கு அவரது கொச்சை பேச்சுக்கள் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. சமீபத்திய நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாது பற்றி கதை கூறினார். அதில், சைவம் , வைணவம், உடலுறுவு பற்றி மறைமுகமாக மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவரை இறுதி செய்வது, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றை அமித் ஷா மேற்கொள்ள உள்ளார். மேலும், பங்குனி உத்திர திருவிழா, தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான மற்றும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். இது தமிழ் மாதமான பங்குனியில் (மார்ச்-ஏப்ரல்) […]
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, கரணம்பேட்டை பகுதியில் உள்ள திருப்பூர்-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்ததாக தெரிகிறது. ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி முருகன் – கல்யாணி என்ற தம்பதியினர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். மேலும், ஆம்புலன்ஸ் […]
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30 மணியளவில் சென்னை வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், நேற்றிரவு சென்னை வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அவர், இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் […]
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார். தமிழக அரசியலில் அடுத்த பெரிய போட்டியாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன், கட்சி தனது அமைப்பு மற்றும் கொள்கைகளை வலுப்படுத்தி வருகிறது. கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் முடிவடைந்த நிலையில், மேல்நிலை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கட்சியின் கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. பேரவை தேர்தலில் முக்கிய பங்காற்றும் பூத் கமிட்டியின் […]
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற செய்திகள் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகி இந்த விஷயமானது ட்ரென்டிங் டாப்பிக்காக மாறியுள்ளது. அதில், பாஜக கட்சியின் அமைப்பு பருவ தேர்தல் காலம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதில், கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான […]
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க ஆரம்பித்துவிட்டது. முன்னதாக அதிமுக தலைவர்கள் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து பேசினர். அப்போதே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகும் என பேசப்பட்டது. அதிமுக – பாஜக கூட்டணிக்காக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை , அப்பதவியில் இருந்து மாற்றப்படுகிறார் என்றும், அவருக்கு பதிலாக புதிய தலைவரை பாஜக தேசியத் தலைமை தேர்வு செய்து வருகிறது […]
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய நிலையில், முழு ஆண்டு தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால், மாதவிடாய் காரணத்தை காட்டி, அவரை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வகுப்பறையை பூட்டிவிட்டு, வெளியே குறிப்பாக படிக்கட்டில் அமர வைத்து தேர்வு எழுதுமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மாணவியின் தாயால் செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, அது […]
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற செய்திகள் உலா வந்தன. அதனை அண்ணாமலையும் மறைமுகமாக உறுதிப்படுத்தி வந்தார். தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக மாநிலத் தலைமை அறிவித்துள்ளது. அதில், பாஜக கட்சியின் அமைப்பு பருவ தேர்தல் காலம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதில், கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் […]
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் விலக்கு குறித்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஈடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், அதிமுக புறக்கணித்த நிலையில், பாஜகவும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தது. இந்த நிலையில், பாஜகவினர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும் பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவும் நீட்டுக்கு எதிரான கூட்டத்தை புறக்கணித்து, தங்கள் எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளனர் என்று அதிமுக நிலைப்பாடு […]
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், தற்போது பாமக தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தானே தலைவர் பொறுப்பை எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், ” 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, பல்வேறு செயல் திட்டங்கள் உள்ளன. அதனை செயல்படுத்த கட்சி அமைப்பில் சில மாற்றங்கள் செய்ய […]
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதப்படுத்துகிறார் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருந்தது. இதற்கு கடந்த 8-ம் தேதி, “10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக […]
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக டாக்டர் ராமதாஸ் இருந்தாலும், கட்சியை வழிநடத்தும் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இப்படியான சூழலில், ” கட்சியின் நிறுவனர் எனும் பொறுப்பில் இருக்கும் நானே, கட்சித் தலைவராக பொறுப்பேற்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். இனி அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டும் செயல்படுவார். அடுத்தடுத்த […]
சென்னை : அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல் விடாமுயற்சி வெளியானது, இதை தொடர்ந்து இரண்டு மாத இடைவெளியில் அஜித்திற்கு மேலும் ஒரு படம் (குட் பேட் அக்லி) வெளியான நிலையில், அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125 சதவீதமாக உயர்த்தியதோடு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பரஸ்பர வரிவிதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படவதாக அதிபர் […]
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று பரவலாக கனமழையும், நாளை முதல் 15ஆம் தேதி வரை மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் மிதமான மழையும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் […]
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட் விலக்கு கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, த.வெ.க தலைவர் விஜய் திமுகவை விமர்சனம் செய்து நீட் தேர்வு விவகாரத்தில் நாடகமாடுவதாகவும் விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் ” மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி: தி.மு.க. […]
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” அதிமுக இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அவர்கள் விலகி நிற்கிறார்கள். அவர்களே அவர்களுக்கான சரிவை நோக்கி சென்று […]
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி ஆர்ட் செய்யும் ஏதேனும் ஒரு செயலி அல்லது இணையதள பக்கத்தில் பதிவிட்டால் அது அவர்களது புகைப்படத்தை கார்ட்டூன் ஜிப்லி சித்திரம் போல மாற்றி கொடுத்து விடுகிறது. இது ஒரு கலைத்திருட்டு, ஒருவர் உருவாக்கிய கார்ட்டூன் கலையை, AI தொழில்நுட்ப உதவியுடன் செய்வது தவறு என்றும் பலரும் இதற்கு எதிர்கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். இருந்தும், பலரும் இந்த […]