ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே சுமார் ரூ.550 கோடி செலவில், 2.08 கி.மீ நீளத்துக்கு இந்த புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர், சாலை பாலத்தில் இருந்து ஒரு ரயிலையும், கப்பலையும், புதிய பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் […]
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது […]
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில் சென்ற போது, சாலையோரம் திரண்டுள்ள பொதுமக்களை பார்த்து கையசைத்தார். தமிழகம் வந்தைடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நவாஸ்கனி எம்.பி., ராமநாதபுரம் ஆட்சியர் ஆகியோரும் வரவேற்றனர். பாரம்பரிய உடையான பட்டு […]
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் 1,703 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர், 15,634 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் (ஊட்டி) பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுகாதார உள்கட்டமைப்பு திட்டமாகும். இந்தியாவில் சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்ட இரண்டாவது மருத்துவக் கல்லூரி […]
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், நண்பகல் 12 மணியளவில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த பாலம், நூற்றாண்டு கால பழமையான பாம்பன் ரயில்வே பாலத்திற்கு மாற்றாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடனும் கட்டப்பட்டுள்ளது. மேலும், ரயில், கப்பல் போக்குவரத்தையும் கொடியசைத்து […]
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும் அரசியல் தளத்தில் தனது இருப்பை காட்டி கொள்கிறார். அவர் தற்போது தவெக தலைவர் விஜயை டார்கெட் செய்து தனது அரசியல் கருத்துக்களை தெரிவித்துள்ளார். முன்னதாக ஒரு செய்தியாளர் சந்திப்பில் , மேடையில் வீரபாண்டிய கட்டபொம்மன் போல வீர வசனம் பேசுகிறார். களத்திற்கு வர வேண்டும். விஜய் 2026-ல் எந்த தொகுதியில் நின்றாலும் நான் எதிர்த்து நிற்பேன். […]
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு தொடர்பாக தூத்துக்குடி விஏஓ தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில், காவல்துறை விசாரணையில் வின்சென்ட் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு உயிரிழந்தார் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதனை அடுத்து. அப்போது பணியில் இருந்து தற்போதைய தூத்துக்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணன், தென்காசி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் […]
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்க்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் மாநில சுய ஆட்சி பறிக்கப்படும் என்று குற்றம் சாட்டி வருகின்றன. இன்று சென்னை காட்டாங்குளத்தூரில் ஒரு தனியார் கல்லூரியில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். ஒரே […]
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்த வளர்ச்சியாகும். 2023-24 நிதியாண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) ரூ.15,71,368 கோடியாக இருந்தது, இது 2024-25 நிதியாண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த தகவல் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation) முன்கூட்டிய மதிப்பீடுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு […]
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. 05-04-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், […]
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று வருகிறது. அப்படி தான் நேற்று நடைபெற்றபோது மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து பேசிய மதிமுக (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்) பொதுச்செயலாளர் வைகோவுக்கும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே நடந்த காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாதத்தின் போது, வைகோ “தமிழ்நாட்டில் […]
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் போராட்டம் நடைபெற்றது. சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்புவதோடு, மத்திய அரசுக்கு தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்கின்றனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]
திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள வக்பு சட்டதிருத்தத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வக்பு வாரிய சொத்துக்களை அடையாளம் காணும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கும் திருத்தம், வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத பிரதிநிதிகள் இடம்பெறுவது உள்ளிட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்ட திருத்தத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வக்பு வாரிய சட்டதிருத்தத்திற்கு […]
சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி இலங்கைப் பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், இலங்கை செல்லும் பிரதமர் மோடி, ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் […]
சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு வந்துள்ளது. விஜய் தனது அரசியல் பயணத்தை 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரப்படுத்தி வருவதால், அவரது பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அவர் பொது நிகழ்ச்சிகளில் தனியார் பாதுகாவலர்களை (பவுன்சர்கள்) பயன்படுத்தி வந்தார், ஆனால் இப்போது மத்திய அரசின் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அவர் செல்லும் இடங்களில் […]
கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அதில் முக்கியமாக தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவில் நாள் தோறும் ஏதேனும் ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. இதில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் போல மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி இருக்கும் என கூறப்பட்டது. அதற்கேற்றாற் போல அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லியில் பாஜக தேசிய தலைமையை சந்தித்து பேசினர். […]
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்றும், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இதனை இன்னும் சரியான கவனத்தில் அரசு எடுத்துக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியும் வருகிறார்கள். இந்த சூழலில், இன்று […]
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம்தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காலை 10 மணி முதல் தொடங்கிய […]
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 6 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது ஏராளமான பெண்களும், ஆண்களும் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். கோவையிலும் தவெகவினர் […]
சென்னை :காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தாலுகாவில் 933 பணியிடங்கள், ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 1299 பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்த 20 – 30 வயதுக்குள் இருப்பவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த […]