சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட சம்மனில் சீமான் ஆஜராகாததால் இன்று, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அந்த சம்மனை யாரோ ஒருவர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்மனை கிழித்தது தொடர்பாக போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் விசாரிக்க சென்ற போது அங்குள்ள […]
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பட்ட சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீமான் இன்று விசாரணைக்காக ஆஜராகவில்லை, இதையடுத்து நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் வழக்கில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் […]
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல தெரிவித்துள்ளது. மேலும், நாளை (28-02-2025) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி கொள்கை மூலம், மும்மொழி கொள்கை, அதன் மூலம் மறைமுகமாக இந்தி மொழி திணிப்பை மத்திய அரசு மேற்கொள்கிறது என தமிழ்நாட்டில் ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி அதிமுக, நாதக, தவெக என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தமிழ்நாடு […]
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “பெரியார், அண்ணா, கலைஞர் வழியிலான திராவிட இயக்கம், ஆதிக்க மொழியின் படையெடுப்பை முறியடித்து தமிழைப் பாதுகாக்கும் அரண் எனவும், இந்தி திணிப்பால் தமிழ் அழியாது ஆனால் தமிழர் பண்பாடு அழியும் என்பதால் தான் நாங்கள் எதிர்க்கிறோம் எனவும் கூறியுள்ளார். நேற்று (பிப்ரவரி 26) மகா சிவராத்திரி 2025, உலகம் முழுவதும் சிவபக்தர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்நாளில், பக்தர்கள் விரதம் இருந்து, […]
சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின் குடும்பத்தினரை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் நேற்று ஆறுதல் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார். அதன்பிறகு அங்கு பேசிய அவர், விஜயை மறைமுகமாக விமர்சித்ததாக தெரிகிறது. அங்கு பேசிய திருமாவளவன் ” 10 வருடங்கள் தேர்தல் அரசியல் வராமல் மொத்தத்தில் 35 ஆண்டுகள் ஒரு மாநில […]
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான ஒரு விஷயமாக மாறியுள்ளது . நிகழ்ச்சியில் பேசிய இந்நிலையில், விஜயின் பேச்சு குறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த CPI மாநில செயலாளர் முத்தரசனிடம் செய்தியாளர்கள் விஜய் திமுக குறித்து பேசியது […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. இந்த விழாவில் த.வெ.க தலைவர் விஜய், வெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியின் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பல விஷயங்களை பேசியது அரசியல் […]
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி தலைவர் விஜய் ” கல்வி நிதி விவகாரத்தில் எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டையிடுகிறார்கள். “இங்கே எவ்வளவு சீரியஸாக ஒரு பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது.? இவங்க ரெண்டு பேரும், அதாங்க ஃபாசிஸமும் பாயாசமும் – நம்ம கொள்கை எதிரியும் அரசியல் எதிரியும் பேசி செட்டிங் செய்துகொண்டு சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு […]
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் , ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் உள்ளிட்ட கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். பிரபல தேர்தல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்தும், தவெகவின் அடுத்தகட்ட வேலைகள் […]
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்தும், தவெகவின் அடுத்தகட்ட வேலைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார். மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளார். மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து பேசிய விஜய், “புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே கல்வித்துறைக்கான நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இந்த கையெழுத்து இயக்கத்தை தவெக கையில் எடுத்துள்ளது. விழா மேடையில் ‘நிரந்தர தலைவர் விஜய்’ என குறிப்பிட்டு பேச தொடங்கிய தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ” பிறப்பால் ஒரு தலைவர் உருவாகக்கூடாது, மன்னராட்சி நீடிக்கக்கூடாது என பேசியதற்காக பல […]
காஞ்சிபுரம் : இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்று வருகிறது. இதில் தவெக தலைவர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு அழைப்பாளராக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பிரசாந்த் கிஷோர் பேசுகையில், ” நிறைய பேர் நினைக்கிறார்கள், நான் (பிரசாந்த் கிஷோர்) தவெக-வுடன் சேர்ந்துவிட்டேன். அதனால் […]
சென்னை : மும்மொழிக் கொள்கை மற்றும் திராவிடம் மீதான பாஜகவின் எதிர்ப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம் பாஜக மாநில நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் அறிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று பாஜகவிலிருந்து விலகிய நடிகையும், மாநில கலை, பண்பாட்டுப் பிரிவு செயலாளருமான ரஞ்சனா நாச்சியார் தவெகவில் இணைவதாக அறிவித்துள்ளார். பாஜக மாநில பொறுப்பில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தவெகவில் இணைவதாக தகவல் வெளியாகிய நிலையில், இப்போது மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தவெகவின் 2ஆம் […]
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் தவெக கட்சித் தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக தேசிய அளவில் அறியப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டுள்ளார். இந்த […]
காஞ்சிபுரம் : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. இதனை குறிப்பிடும் வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது. இதில் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவுக்கு தேசிய அளவில் அறியப்பட்ட பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வருகை புரிந்துள்ளார். ஒரே மேடையில் தவெக தலைவர் […]
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதாவது, மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தீவிரமாக ஈடுபட்ட தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தற்போது மறுசீரமைப்பு செய்தால் தொகுதிகள் குறையும் வாய்ப்பு இருக்கிறது என்றும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் 31 தொகுதிகளாக […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை நடைபெறவுள்ளது. தவெக 2ஆம் ஆண்டு விழாவையொட்டி தலைவர் விஜய் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார். தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக விஜய் உரையாற்ற வாய்ப்புள்ளது. மேலும், இரண்டு நாள் பயணமாக, தமிழ்நாடு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மாவட்ட அலுவலகத்தை இன்று காலை திறந்துவைக்கிறார். மேலும், கோவை […]
சென்னை : பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் திடீரென குழந்தை அணியக்கூடிய செருப்பை விஜயின் வீட்டிற்குள் வீசினார். பின்னர், உடனடியாக அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். செருப்பை வீசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது, மாமல்லபுரத்தில் விஜய் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் விஜய் […]
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நேற்று மாலை 6 மணியளவில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த பிரம்மாண்ட திருமண விழாவில் ஜி.கே.மணியின் மகனும் லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவன முக்கிய நபருமான ஜி.கே.எம்.தமிழ்குமரனும் வருகை தந்தனர். அதேபோல நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட திரை பிரபலங்களும் வந்துள்ளனர். குறிப்பாக, நடிகரும், தவெக கட்சித்தலைவருமான விஜயின் […]