முத்துராமலிங்கதேவர் அவர்களின் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ந்தேதி தொடங்கப்பட்டது. முதல் நாள் ஆன்மீக விழாவாகவும், 2-ஆம் நாள் அரசியல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. 3-வது நாளான இன்று (30-அக்டோபர்), தேவரின் குருபூஜை நடைபெற்றது. நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பழனி, தங்கவேல், ராமச்சந்திரன் […]
தஞ்சாவூர்;தமிழகத்தின் மிகச்சிறந்த மாமன்னர் என்று போற்றப்படும் ராஜராஜ சோழரின் 1032-வது ஆண்டு சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல அரசியல்தலைவர்கள்,பொதுமக்களும் ராஜராஜ சோழரின் சிலைக்கு மரியாதை செய்தார்.இவர் தஞ்சை பெரியக்கோவிலை கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் தஞ்சை பெரிய கோவிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் மிகவும் பழமையாக உள்ளது .அதனால் அதை புதியதாக கட்ட தேவை வந்துள்ளது. இந்நிலையில் அதற்க்கு அடிக்கள் நாட்டப்பட்டது ஸ்ரீவைகுண்டத்தில் தற்போது தாலுகா அலுவலகம் செயல்படும் இடம்,அரசு மருத்துவமனையின் விரிவாக்கத்திற்குதேவைப்படுகிறது. இதனால், புதிய வசதிகளுடன்நெல்லை திருச்செந்துார் சாலையில் ஆதிச்சநல்லுார் அருகே தாலுகா அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், எம்.எல்.ஏ.,சண்முககநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு தளங்களுடன் […]
பொறியியல் பட்டதாரிகள் தமிழகத்தில் எண்ண முடியாத அளவில் உள்ளனர்.வேலை இல்லாமல் 90% மேல் உள்ளனர்.சமீபத்தில் உயர்நீதிமன்றம் கூட இது பற்றி தீர்ப்பு வழங்கி இருந்தது .இன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர்பேசியதாவது பொறியியல் பட்டதாரிகள் 40 % பேர் வேலை கிடைக்காமல் அவதிபட்டுவருகின்றனர்.இது மிகவும் கவலையாக உள்ளது என்றும் கூறி உள்ளார் .அதே சமயம் பொறியியல் துறையில் புகுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பட்டதாரிகளுக்கு புதிய […]
துறைமுகங்களை கார்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்க்க சட்டத் திருத்தம் செய்திருக்கிறது மத்திய பிஜேபி அரசு.இதனால் நாட்டின் பொருளாதார சுயசார்பு, பாதுகாப்பு தொடர்பானது என்பதால் மக்கள் கறமிறங்க வேண்டும் என்று கூறி தூத்துக்குடி மாவட்ட வ.உ.சி துறைமுக தொழிற்சங்கங்களான மார்க்சிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யூ, காங்கிரஸ் கட்சியின் INTUC,DMK தொழிற்சங்கம் , கம்யூனிஸ்ட் கட்சியின் AITUC ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் துறைமுக தொழிலாளர் ட்ரஸ்டி கதிர்வேல் ( INTUC),துறைமுக தொழிலாளர் மற்றொரு ட்ரஸ்டியான ரசல் (CITU) ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது! சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
தமிழகத்தை ஆட்டிபடைக்கும் ஒரு நோய்தான் டெங்கு .இது ஒரு வகையான காய்ச்சல் ஆகும்.நாளுக்கு நாள் இது உயிர் பலி வாங்கி கொண்டு தான் இருக்கிறது.ஆனால் இன்று ஒரு நாள் மட்டும் இது வரை மூன்று பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .இதற்கு தீர்வு எப்போது தான் கிடைக்கும் நாளுக்கு நாள் உயிர் மட்டும் பலியாகி கொண்டே இருக்கிறது.தமிழக அரசு என்னதான் செய்கிறது ?
தமிழகத்தில் காலநிலை மாறி மாறி வரும் நிலையில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .இன்று அல்லது நாளையாவது வடகிழக்கு கனமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா ,ராயலசீமா,தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவ மலை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சிமையம் தகவல்.
திருநெல்வேலி: நேற்று மாலை பாளை மார்க்கெட் மைதானத்தில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிம் (எம்)) மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த ஆர்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜகுரு உட்பட பலர் கலந்து கொன்றனர். மேலும் இன்று அனைத்து கட்சி கூட்டம் காலை சிபிஐ(எம் ) அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.
அக்டோபர் 24, 1801. மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் […]