மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகத்தான் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதாக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் கருப்பூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, அரசின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசினார். அரசின் மீது களங்கம் கற்பித்து ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்பதற்காக இல்லாத விஷயத்தை தேடி கண்டுபிடித்து குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றனர். அரசை விமர்சிப்பதற்கு எந்த வகையிலும் வாய்ப்பு இல்லாத நிலையில், ஏதாவது ஒன்றை தேடி எடுத்து, தவறாக விமர்சித்து […]
சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முரசொலி விழாவில் தற்காப்பு முக்கியமல்ல, தன்மானம் முக்கியம் என்று நடிகர் கமல் பேசியிருந்தார். இது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் மறைமுக விமர்சனம் செய்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் சிவாஜி மணிமண்டப விழாவில் கமல் உட்பட பலரது முன்னிலையில் இன்று பேசிய ரஜினி, அரசியலில் வெற்றியடைய சினிமா புகழ் மட்டும் போதாது என்றார்.தமக்கு அரசியல் தெரியாது என்று கூறிய ரஜினி, கமலுக்கு தெரிந்திருக்கலாம் என்றார். சிவாஜி அரசியல் கட்சி […]
தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் காரைக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அந்த கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த், இன்னும் நான்கு நாள்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அதிரடியாக கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிஎல்பி திருமண மண்டபத்தில் நேற்று பொதுக்குழுவில் பேசிய விஜயகாந்த், நாடு முழுவதும் சமச்சீர் கல்வியைக் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்தார். மாயவரத்தில் நீராடி பாவத்தைக் கழிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கெலவரப்பள்ளி அணை நிரம்பிவரும் ஆற்றில் குளிக்க வேண்டியதுதானே. அவர் […]
காங்கிரஸ் கட்சியில் தற்போது அங்கீகாரம் கொடுக்காமல் ஓரங்கட்டப்பட்டதால் அதிலிருந்து விலகி கமல் ஆரம்பிக்க இருக்கும் கட்சியில் இணைய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவிலிருந்து விலகிய குஷ்பு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு தேசிய செய்தித்தொடர்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவனின் ஆதரவாளரான குஷ்பு, அவர் தலைவராக இருந்தவரை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு அடிக்கடி சென்று கட்சி பணியாற்றி வந்தார். ஆனால் […]
மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என்று அதிமுகவின் அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும். ஆதரவு எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியம், கட்சி நிதி ரூ. 5 லட்சம் சேர்த்து ரூ. 15 லட்சம் வழங்கப்படும். அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வினால் எம்.பி.பி.எஸ். […]
காரைக்குடி : தேமுதிகவின் நிரந்தரப் பொதுச் செயலராக, கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைப் பொதுச் செயலராக, எல்.கே. சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்குடியில் நடைபெறும் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேமுதிக தலைவராக இருக்கும் விஜயகாந்த், பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிகவில் இதுவரை பொதுச் செயலர் பதவி இல்லை. தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்சியில் எத்தகைய […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலேவை விசாரிக்கும் என அதிமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் மரணம் மர்மம் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை கமிஷனில் யார் எல்லாம் விசாரிக்கப்படுவார்கள். […]
நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையின், இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டது என்று தனியார் தொலைக்காட்சியின் வள்ளியூர் செய்தியாளர் ராஜு கிருஷ்ணா மற்றும் நெல்லை செய்தியாளர் நாகராஜன் ,தினகரன் பணகுடி செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்தி அனுப்ப அது […]
இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள பத்ம பிரபா தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற நர்சிங் மாணவி தயாட்சினி மருத்துவமனை டாக்டர் காந்திராஜின் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்து கொண்டார்….. மருத்துவமனை சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து வயிற்றுவலி என்று பொய் FIR பதிந்துள்ளனர் என மாணவர் சங்கத்தினரும் பெற்றோரும் கூறுகின்றன்ர்…. மாணவி தயாட்சினியைப் போல இதுவரை 8 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த டாக்டர் காந்திராஜை […]