தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டதையடுத்து , இது வரை தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக இருந்து வந்த வித்யாசாகர் ராவ் இன்று பிரியா விடை பெற்றார். தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார். தமிழக கவர்னராக பன்வாரிலால் நாளை பதவியேற்க உள்ளார். இதற்காக இன்று பிற்பகலில் அவர் சென்னை வர உள்ளார். இதனையடுத்து தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ், இன்று […]
மதுரையில் RSS பேரணி நடத்த மாநில அதிமுக அரசும்,மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது.அந்த பேரணியை அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு துவங்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது …. இதனை அனுமதிக்க கூடாது என்று கூறி அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் இன்று மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளது…
தூத்துக்குடி-கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கழுதைகளை விட்டுபோராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவில்பட்டி அண்ணா பேருந்துநிலையத்தில் போதிய மின்விளக்குகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்,புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் பேருந்து நிலையத்திற்குள் கழுதைகளை அடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கழுதைகளை அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு […]
மதுரையில் ஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைப்பார் என்கிறது அவர்களது சுவரொட்டி. மதவெறியை தூண்டிவிடும் அந்த அமைப்பின் பேரணியை ஓர் அமைச்சரே துவக்கி வைப்பது காலக் கொடுமை. பதவியை தக்கவைக்க எத்தகைய அக்கிரமத்திற்கும் இவர்கள் துணைபோவார்கள் என்பது உறுதியாகிறது. தமிழகத்தில் மக்கள் ஒற்று மையைப் பேண அரசை நம்பி பயனில்லை. மனிதநேய சக்திகள்தாம் அதை காக்க களம் காண வேண்டும். அதற்குத்தான் நேற்று துவக்கப்பட்டிருக்கிறது தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்கிறார் பேராசிரியர்,எழுத்தாளர் அருணன்.
கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 MLA க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. இதனால் தினகரன் ஆதரவு MLA தகுதி நீக்கம் அரசியல் களத்தில் மேலும் சூடுபிடித்துள்ளது.
அடுத்த மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண், ரத்த வகை அடங்கிய விவரங்களுடன் ‘ஸ்மார்ட்’ கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “பள்ளிக் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றிய ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத் திட்டத்தை மாற்றுவது, தமிழ் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மையை […]
கல்வி உதவித் தொகையை குறைக்காமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான மாணவ, மாணவிகள் படையெடுத்து வந்தனர். அவர்களுக்கு அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க மாநில அமைப்பாளர் பரதன் தலைமைத் தாங்கினார். முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் பகுதிக்கு வந்தனர். பின்னர் நுழைவு வாசல் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை […]
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 174 நாள்களாக நடந்துவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், எரிவாயு எடுக்க முயற்சித்தால், போராட்டம் வேறு வடிவில் மீண்டும் தொடங்கும் என்று எச்சரித்தனர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு பிப்ரவரி 15-ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, பிப்ரவரி 16-ஆம் தேதி இந்தத் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு, […]
தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் எதிராகவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தினகரன் ஆதரவாளர்கள் சேலத்தில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விநாயகம் அளித்த புகாரின் அடிப்படையில் தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம், பகுதி செயலாளர் சரவணன் உள்ளிட்ட 10 பேரை சேலம் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததற்காக தினகரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 30 பேர் மீது தேசதுரோகம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சேலம் […]
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கீழமானங்கரை கிராமத்தில் அமரர் சின்னார் என்ற விவசாயி ஒரு புதிய நெல்ரகத்தை அதே கிராமத்தில் உள்ள புஷ்பம் என்பவர் உதவியுடன் உருவாக்கியுள்ளார். இந்த நெல் 110-115 நாட்கள் வயதுடையது. நெல் கத்தரி ஊதா கலரில், சாயாத நெல் வகையைச் சேர்ந்தது. புதிய நெல் ரகம் உருவான வரலாறு: 7 வருடங்களுக்கு முன்னர் புஷ்பம் என்ற விவசாயி முதுகுளத்தூர் பஞ்சாயத்து யூனியனில் எடிடி 36 என்ற நெல் ரக விதையை வாங்கிக் கொணர்ந்து […]