தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை முதல் தமிழகத்தின் கடலோர பகுதியில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு பருவமழை இது குறித்து வானிலை மையம் தெரிவித்தது, `அந்தமானை ஒட்டியுள்ள மலேசிய கடல்பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட […]
கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னால் மாணாவர் ஒருவர் இயற்கையாக கிடைக்கும் உரங்களை பயன்படுத்தி வெண்டை செடியை வளர்த்துள்ளார். அதில் வளர்ந்த வெண்டைக்காய் கின்னஸ் சாதனைக்கு அனுப்பும் அளவில் வளர்ந்துள்ளது இதை அனுப்புவது குறித்து அந்த குழு ஆராய்ந்து வருகின்றனர் .முதலில் இயற்கை உரத்தை பயன்படுத்தி அதை வளர செய்ததே பெரும் சாதனை ஆகும்.இந்த வெண்டைக்காய் 40.2 சென்டி மீட்டர் நீளம் ஆகும் .
தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது.இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது , தாழ்வான பகுதிகளில் வீடு கட்டியதால் தான் மழை வெள்ளம் சென்னையில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தங்குவதாக கூறியுள்ளார்.இது குறித்து மத்திய அரசிடம் 1500 கோடி […]
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் , திருவாரூர் , திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விழுப்புரம் , கடலூர், காரைக்கால், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
திருநெல்வேலி: கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளுக்கும், மனித உரிமை வழக்குகளுக்கும் ஆஜராகிவரும் வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி அவர்களை பனகுடி காவல்நிலைய ஆய்வாளர்,வள்ளியூர் டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையை சார்ந்தவர்கள் சட்டவிரோதமாக கடத்திச்சென்று ஒருநாள் முழுவதும் ரகசிய இடத்தில் அடைத்து வைத்து கொடூரமாக அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர். மனித மான்புகளுக்கு இழிவுதரக்கூடிய வகையில் நடந்துள்ளனர்.கடைசியாக ஒரு பொய்வழக்கும் ஜோடித்துள்ளனர். சட்டம் கற்ற ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரன சமான்யர்களின் நிலைமை……… ?
மழைக்காலத்தில் மக்களுக்கு ஏற்ப்படும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 200 நடமாடும் மருத்துவக்குழு சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ குழுக்கள் மக்களை தேடி சென்று நோய்கள் பரவாமல் இருக்க மருத்துவ சேவை அளிக்கும். ஒவ்வொரு வாகனத்திலும் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருக்கும்.
நேற்று ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழகத் தேர்வுகள் வருகின்ற நவம்பர் 12 தேதி நடைபெறும் என அறிவிப்பு.சென்னையில் பெய்த கனமழை காரணமாக நேற்று நடை பெறவிருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைகழகம் தேர்வை ரத்து செய்திருந்தது . எனவே தேர்வுக்கான மற்று தேதியை அறிவித்தது.
நடிகர் கமலஹாசன் அண்மை காலமாக மக்கள் மீதான அக்கறையும், அரசு மீதான எதிர்பையும் வலுவாக தெரிவித்து வருகிறார். தற்போது மழை வெள்ளத்தால் சென்னை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்துள்ளது. அதனை வெளியேற்ற மக்களும் அரசும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன. இதனால் சென்னை புறநகர் பகுதி மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர். நடிகர் கமலஹாசன் டிவிட்டர் பக்கத்தில் ‘ இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக் கால உதவி செய்யுங்கள். அரசு பணியாளர்களுக்கு இடைஞ்சலோ, […]