ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தேர்தல் ஆணையம் மிக சிறப்பாக செயல்பட்டது – அமைச்சர் உதயகுமார் . ஜெயலலிதாவை நாங்கள் தெய்வமாக நினைக்கிறோம், ஆனால் அவர்கள் அப்படி நினைக்கவில்லை – அமைச்சர் உதயகுமார்.. source: www.dinasuvadu.com
கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 128 கன அடியிலிருந்து 149 கன அடியாக அதிகரித்துள்ளது.இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 71.70 அடியாகவும் உள்ளது.அணையின் மொத்த நீர் இருப்பு 34.17 டிஎம்சி, வெளியேற்றம் 7,000 கன அடியாகவும் உள்ளது.
ஆய்வாளர் முனிசேகர் தனது துப்பாக்கியால் சுட்டதால் தான் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்ததாக, நாதுராமின் மனைவி மஞ்சுவிடம் நடத்திய விசாரணையின் போது, தெரியவந்துள்ளதாக ராஜஸ்தான் போலீசார் கூறியுள்ளனர். இருப்பினும் தடயவியல் ஆய்வின் அறிக்கை வந்த பிறகே ஆய்வாளர் முனிசேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவித்துள்ளனர். சென்னை கொளத்தூரில் கடந்த மாதம் நகைக்கடையின் மேற்கூரையில் துளைப்போட்டு நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, ராஜஸ்தான் சென்ற மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், கடந்த 13 ஆம் தேதி கொள்ளையர்களுடன் நிகழ்ந்த மோதலில் […]
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.12 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.17 காசுகள் உள்ளன.ஆனால் நேற்றையதினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.03 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.05 காசுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றையத்தினத்தை விட இன்றைய பெட்ரோல் விலையானது 9 காசுகளும்,டீசல் 12 காசுகளும் குறைந்துள்ளன.
அரசு தேர்வாணையத்தில் விடைத்தாள் வெளியான விவகாரத்தில் தமிழக தேர்வாணையத்தின் ஊழியர் பெருமாள் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.ஏற்கனவே விடைத்தாள் வெளியான விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கான கால அவகாசத்தை 6 மாதத்திற்கு நீட்டிக்க போவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் மத்திய குழு வரும் டிசம்பர் 26-ம் தேதி தமிழகம் வருகிறது என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.அதே போன்று அந்த மத்திய குழுவானது ஓகி புயல் பாதித்த கேரளா, லட்சத்தீவுகளிலும் மத்திய குழு ஆய்வு செய்யவுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்புக் குழுவை தமிழகத்துக்கு 3ம் கேரளாவிற்கு 4 ம் புயலால் பாதிக்கப்படாத குஜராத்திற்கு 7 குழுவும் அனுப்பப் […]
ஜெயலலிதா சிகிச்சை பெரும் வீடியோவினை வெற்றிவேல் அண்மையில் வெளியிட்டதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் முன்ஜாமின் கோரி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “தேர்தல் நோக்கத்திற்காக வீடியோவை வெளியிடவில்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, பல்வேறு தரப்பினரால் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதாலேயே அந்த விடீயோவினை வெளியிட்டேன்” என்று கூறியுள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தாம் வீடியோவை வெளியிடவில்லை என்றும், தமது செயல் தேர்தல் […]
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை கிராமத்தில் திருச்சி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் பூதலூரில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி வேன் புறப்பட்டது. உத்தமர்சீலி அருகே எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்ட போது கல்லூரி வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஓரம் கவிழ்ந்தது.இந்த விபத்தில் 20 மாணவர்கள் காயமடைந்தனர், இதில் காயமடைந்த மாணவ மற்றும் மாணவிகளை , திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்… sources; […]
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜெயிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – சென்னை விமான நிலையத்தில் தினகரன் பேட்டி * ஆர்.கே.நகர் தேர்தலில் நல்ல முடிவு வரும் – தினகரன் source: www.dinasuvadu.com
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுற்று புறத்தில் உள்ள மண்டப மேற்புறசுவர் இடிந்து விழுந்து, ஒரு பெண்மணி உயிரிழந்தார். சிலர் காயமுற்றனர். இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இடிந்து விழுந்த மேற்புற சுவர் மற்றும் சுற்று சுவர் முழுவதும் இடிக்கப்பட்டு கல்மண்டபம் கட்ட கோயில் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதனால், தற்போது அதனை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டெல்லியில் இருந்து திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆ.ராசா எழுதியுள்ள கடிதத்தில், நிலைகொள்ளாத இந்த நடுநிசியில், தலைநகரின் கடுங்குளிரில் தங்கள் வார்த்தைகளின் ஒலிக்காக தனது செவிகள் உண்ணா நோன்பிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல்களை எதிர்கொண்டு இந்த அலைவரிசைப் பயணத்தில் தான் கரைந்துவிடாமல் இருக்க பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் கருணாநிதி என்று குறிப்பிட்டுள்ள ஆ.ராசா, 2ஜி தீர்ப்பை நன்றியுணர்ச்சியோடு கருணாநிதியின் காலடியில் வைத்து வணங்குவதாகக் கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினை வீழ்த்திட நடத்தப்பட்ட சதியில் அலைவரிசை அகப்பட்டுக் கொண்டதை […]
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 30-வது ஆண்டு நினைவுதினம், வரும் 24ம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளதாகவும், மதுசூதனன் மாபெரும் வெற்றி பெறுவார் என்றும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் […]
மன்னார்குடி அருகே ஆவிக்கோட்டை என்ற ஊரில் தனியார் பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…
ஆர்கே நகர் இடைதேர்தல் பரபரப்பாக நடந்து வருகிறது. மதியம் 3 மணி வரை நிலவரப்படி 57.16% வாக்குகள் பதிவாகிவுள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு; ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய அம்ருதா கோரிக்கை அம்ருதாவின் முறையீட்டை ஏற்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். source: www.dinasuvadu.com
ஒகி புயலால் உயிரிழந்த அனைவருக்கும் பாகுபாடின்றி ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கு . தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.. source: www.dinasuvadu.com
ஆர்கே நகர் இடைதேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 11 மணி வரை நிலவரப்படி 24.01% வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்று காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் தங்கி தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதனை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டையே உலுக்கிய 2ஜி வழக்கில் இன்று தீரர்ப்பு வெளியானது. இதில் குற்றவாளிகள் என குறிப்பிடபட்டிருந்த கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் நிரபராதி என கூறி இன்று தீர்ப்பு வெளியானது. இதுகுறித்து, பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அது குறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானபடுத்தி அழிக்க போடப்பட்ட வழக்கு தான் 2ஜி. இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.’ என்று கூறினார். […]
மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் அளித்த பெட்டியில், நேற்று தெர்த்சல் விதிமுறைகளை மீறியதாக சிலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டதாகவும், இன்று காலையில் பணபட்டுவாடா நடந்ததாக புகார் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆர்கே நகர் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக பணம் கொடுக்க வாக்காளர்களுக்கு 20 ருபாய் டோக்கேன் கொடுத்து பணபட்டுவாடா செய்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.