தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் காரைக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அந்த கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த், இன்னும் நான்கு நாள்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அதிரடியாக கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிஎல்பி திருமண மண்டபத்தில் நேற்று பொதுக்குழுவில் பேசிய விஜயகாந்த், நாடு முழுவதும் சமச்சீர் கல்வியைக் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்தார். மாயவரத்தில் நீராடி பாவத்தைக் கழிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கெலவரப்பள்ளி அணை நிரம்பிவரும் ஆற்றில் குளிக்க வேண்டியதுதானே. அவர் […]
காங்கிரஸ் கட்சியில் தற்போது அங்கீகாரம் கொடுக்காமல் ஓரங்கட்டப்பட்டதால் அதிலிருந்து விலகி கமல் ஆரம்பிக்க இருக்கும் கட்சியில் இணைய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவிலிருந்து விலகிய குஷ்பு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு தேசிய செய்தித்தொடர்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவனின் ஆதரவாளரான குஷ்பு, அவர் தலைவராக இருந்தவரை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு அடிக்கடி சென்று கட்சி பணியாற்றி வந்தார். ஆனால் […]
மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என்று அதிமுகவின் அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும். ஆதரவு எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியம், கட்சி நிதி ரூ. 5 லட்சம் சேர்த்து ரூ. 15 லட்சம் வழங்கப்படும். அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வினால் எம்.பி.பி.எஸ். […]
காரைக்குடி : தேமுதிகவின் நிரந்தரப் பொதுச் செயலராக, கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைப் பொதுச் செயலராக, எல்.கே. சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்குடியில் நடைபெறும் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேமுதிக தலைவராக இருக்கும் விஜயகாந்த், பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிகவில் இதுவரை பொதுச் செயலர் பதவி இல்லை. தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்சியில் எத்தகைய […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலேவை விசாரிக்கும் என அதிமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் மரணம் மர்மம் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை கமிஷனில் யார் எல்லாம் விசாரிக்கப்படுவார்கள். […]
நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையின், இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டது என்று தனியார் தொலைக்காட்சியின் வள்ளியூர் செய்தியாளர் ராஜு கிருஷ்ணா மற்றும் நெல்லை செய்தியாளர் நாகராஜன் ,தினகரன் பணகுடி செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்தி அனுப்ப அது […]
இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள பத்ம பிரபா தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற நர்சிங் மாணவி தயாட்சினி மருத்துவமனை டாக்டர் காந்திராஜின் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்து கொண்டார்….. மருத்துவமனை சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து வயிற்றுவலி என்று பொய் FIR பதிந்துள்ளனர் என மாணவர் சங்கத்தினரும் பெற்றோரும் கூறுகின்றன்ர்…. மாணவி தயாட்சினியைப் போல இதுவரை 8 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த டாக்டர் காந்திராஜை […]
இலங்கை மக்களுக்கு ஆதரவாக ஐ.நா. சபையில் பேசிய மதிமுக தலைவர் வைகோவை தாக்க முற்பட்ட இலங்கை சிங்களவர்களை கண்டித்து இன்று தமிழ் புலிகள் கட்சி மற்றும் மே 17 இயக்கம் சார்பில் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொது அந்தந்த இயக்கங்களை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். சென்னை, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கைது செய்ப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியுடன் தமிழ் புலிகளின் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் தங்கமீன்கள் திரைப்பட இயக்குநர் […]
இன்று காலை முதலே ஏராளமானோர் கடைகள், அலுவலகங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தும், அலங்காரம் செய்தும் ஆயுத பூஜை கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். வீடுகளிலும், பனைஒலை தோரணங்கள், வாழை மர கன்றுகளை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆயுத பூஜை பண்டிகையின் போது வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் பொரி, அவல், பழங்கள், பூக்கள், வாழை மரக்கன்றுகள் ஆகியவற்றை விற்பனை நேற்று மாலை முதலே களைகட்டி வருகிறது.ஆயுத பூஜையையொட்டி, தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு, ஒத்துழைக்க இலங்கை அரசு தொடர்ந்துப் பிடிவாதமாக மறுத்து வருவது கவலைக்கு உரியதாகவும், கண்டிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமை கவுன்சில் […]
தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் நேற்று சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்த தகுதி நீக்கம் செய்தார். இது தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வரம்பி மீறி சரசியல் சாசன அமர்வு பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டிருப்பதாக பலரும் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த எம்எல்ஏக்கள் நீக்கம் செல்லாது என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படலாம் […]
சென்னை: முதல்வர் பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை; அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று, அ.தி.மு.க.,வின் 19 எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அதன் பின், புதுச்சேரியிலும், கர்நாடக மாநிலம் குடகு பகுதியிலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டு, முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை வைத்தனர்.இதையடுத்து, அ.தி.மு.க., சட்டசபை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குறிப்பிட்ட 19 பேர் மீதும், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]
டிடிவி தினகரனை அக்.4-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேபோல் நடிகர் செந்திலையும் கைது செய்ய தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக திருச்சி எம்.பி. குமாரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கிற்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட் கிளையில் செந்தில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.