சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர்கள் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 20 பேரை தொடுகிறது.இத்தனை அவலநிலை போக்குவதற்காகவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியும் சேலம் மாவட்ட தலைநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வரும் 9 ஆம் தேதி நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவகைகள் மீது எவ்வித அக்கறை செலுத்தாமல் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நுற்றாண்டு விழாவினை நடத்திக்கொண்டே போகுகிறது […]
சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் பரோல் வழங்கியதை அடுத்து, 5 நாட்கள் பரோலில் வெளிவந்தார் சசிகலா. சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் உயிருக்குப் போராடிவந்த நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு காப்பாற்றப்பட்டார். ஆனாலு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவரைக் காண்பதற்காக சிறையில் இருக்கும் சசிகலா, 15 நாட்கள் பரோல் கேட்டு பெங்களூரு பரப்பன […]
சைவ உணவை சாப்பிட்டால் தான் இளைத்த உடலை பெற முடியும் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீன்கள் இனப்பெருக்கத்தால் வைகையில் நீர் மட்டம் குறைவு – அமைச்சர் செல்லூர் ராஜி டெல்லியிலிருந்து வந்த AC பஸ்களில் இருந்த கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவுகிறது – அமைச்சர் காமராஜ் மக்கள் போட்டுக் குளிக்கும் சோப்புகளால் தான் நொய்யலாற்றில் நுரை – அமைச்சர் கருப்பண்ணன் சிவாஜி சிலை மீது காக்கை எச்சம் படாமலிருக்கவே அதிமுக அரசு மணிமண்டபம் […]
சென்னை : தமிழகத்தின் 20வது கவர்னரான பன்வாரிலால் புரோஹித் இன்று(அக்.,6) பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் காலை 9.30 மணியளவில் நடந்த விழாவில், ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கவர்னர் மாளிகையில் உள்ள கார்டனில் மேடை அமைக்கப்பட்டு, பதவியேற்பு விழா நடைபெற்றது.இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் […]
கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் மீண்டும்பயணிகள் கப்பல் சேவை துவங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.இலங்கை அமைச்சரவையில் துறைமுகங்கள் மற்றும்கப்பல் சேவைகள் அமைச்சர்மகிந்த சமரசிங்க இந்தசேவையை ஆரம்பிக்க அனுமதி கோரும் ஆவணங்களை முன்வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை – இந்திய சுற்றுலாப் பயணிகள் நலன் கருதிஏற்கெனவே மும்பையைச்சேர்ந்த நிறுவனமொன்றினால் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை 2011 ஜூன்மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.1200 பயணிகள் பயணிக்க கூடிய அக்கப்பல் வாரத்தில் இரு நாட்கள் சேவையில் ஈடுபட்டது. எதிர்பார்த்தவாறு […]
சின்னமனூர்: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் சங்கர் (27). இவரது நண்பர் தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த ராஜா (24). இருவரும் அடிக்கடி பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் சென்று வந்துள்ளனர். அப்படி செல்லும் போது உத்தமபாளையம் கோம்பையை சேர்ந்த மகாலெட்சுமியிடம் (47) சங்கருக்கு தொடர்பு ஏற்பட்டது. கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியைச் சேர்ந்த வசந்தி (47) கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் வீடு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். அவரும், மகாலெட்சுமியும் தோழிகள். தொழிலில் […]
தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டதையடுத்து , இது வரை தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக இருந்து வந்த வித்யாசாகர் ராவ் இன்று பிரியா விடை பெற்றார். தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார். தமிழக கவர்னராக பன்வாரிலால் நாளை பதவியேற்க உள்ளார். இதற்காக இன்று பிற்பகலில் அவர் சென்னை வர உள்ளார். இதனையடுத்து தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ், இன்று […]
மதுரையில் RSS பேரணி நடத்த மாநில அதிமுக அரசும்,மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது.அந்த பேரணியை அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு துவங்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது …. இதனை அனுமதிக்க கூடாது என்று கூறி அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் இன்று மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளது…
தூத்துக்குடி-கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கழுதைகளை விட்டுபோராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவில்பட்டி அண்ணா பேருந்துநிலையத்தில் போதிய மின்விளக்குகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்,புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் பேருந்து நிலையத்திற்குள் கழுதைகளை அடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கழுதைகளை அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு […]
மதுரையில் ஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைப்பார் என்கிறது அவர்களது சுவரொட்டி. மதவெறியை தூண்டிவிடும் அந்த அமைப்பின் பேரணியை ஓர் அமைச்சரே துவக்கி வைப்பது காலக் கொடுமை. பதவியை தக்கவைக்க எத்தகைய அக்கிரமத்திற்கும் இவர்கள் துணைபோவார்கள் என்பது உறுதியாகிறது. தமிழகத்தில் மக்கள் ஒற்று மையைப் பேண அரசை நம்பி பயனில்லை. மனிதநேய சக்திகள்தாம் அதை காக்க களம் காண வேண்டும். அதற்குத்தான் நேற்று துவக்கப்பட்டிருக்கிறது தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்கிறார் பேராசிரியர்,எழுத்தாளர் அருணன்.
கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 MLA க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. இதனால் தினகரன் ஆதரவு MLA தகுதி நீக்கம் அரசியல் களத்தில் மேலும் சூடுபிடித்துள்ளது.
அடுத்த மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண், ரத்த வகை அடங்கிய விவரங்களுடன் ‘ஸ்மார்ட்’ கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “பள்ளிக் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றிய ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத் திட்டத்தை மாற்றுவது, தமிழ் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மையை […]
கல்வி உதவித் தொகையை குறைக்காமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான மாணவ, மாணவிகள் படையெடுத்து வந்தனர். அவர்களுக்கு அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க மாநில அமைப்பாளர் பரதன் தலைமைத் தாங்கினார். முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் பகுதிக்கு வந்தனர். பின்னர் நுழைவு வாசல் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை […]