தமிழ்நாடு

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி புகார்

புதுடில்லி: இரட்டைஇலை விவகாரத்தில் சசிகலா தரப்பு தேர்தல் ஆணையத்தில் போலி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும், இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ்., தரப்பினர் புகார் கூறியுள்ளனர்.இது குறித்து ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறியதாவது: இரட்டை இலை குறித்து சசிகலா தரப்பினர் போலி கையெழுத்திட்ட பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாக கூறினார். போலி ஆவணங்கள் தந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோஜ் பாண்டியன் கூறினார்.

india 2 Min Read
Default Image

அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் தங்க உத்தரவு

சென்னை : அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் சனி,ஞாயிறு கிழமைகளில் தங்கியிருக்க தலைமை உத்தரவிட்டுள்ளது. திங்கட்கிழமை குடியரசு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையில் தங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுலையும் ஏதோ உள்குத்து இருக்குமோ…….

1 Min Read
Default Image

மாமா சேனலுக்கு விசுவாசம்:சப்பைக்கட்டும் கமல்

கமல் ஹாஸன் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர், முற்போக்குவாதி என்றெல்லாம் புளகாங்கிதமடைந்திருந்தவர்கள் கூட நேற்றைய அவரது பேட்டியைப் பார்த்து கொந்தளித்துப் போய்விட்டார்கள். காரணம் கமல் பேசியவை, அக்கிரமமான பல விஷயங்களுக்கு சப்பைக் கட்டு கட்டிய விதம் எல்லாமே, கமல் ஹாஸன் மீது பக்கெட் நிறைய கருப்பு மையைக் கொட்டியிருக்கிறது. ‘என்னாச்சு இந்த கமலுக்கு… என்னதான் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கோடிகளில் சம்பளம் வாங்கியிருந்தாலும், அவரை இந்த நிலைக்கு உயர்த்தி வெகுஜனங்களுக்கு விரோதமாக வார்த்தைகளை உதிர்க்கலாமா? என்பது பலரது கேள்வி. […]

5 Min Read

காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியில் பள்ளத்தில் விழுந்த சிறுவன் பலி: பள்ளி முதல்வர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியில் பள்ளத்தில் விழுந்த சிறுவன் பலியான விவகாரத்தில் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். லயோலா பள்ளி முதல்வர் ராபர்ட், உடற்பயிற்சி ஆசிரியர் அசோக்குமார் ஆகியோரயைும் கைது செய்துள்ளனர். குப்பைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த மழை நீரில் விழுந்து சிறுவன் சபரி நேற்று உயிரிழந்தது குறிப்பிட்டத்தக்கது. 

1 Min Read
Default Image

துணை ஜனாதிபதி வேட்பாளர் காந்தி திமுக தலைவருடன் திடீர் சந்திப்பு..!

. துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று மாலையே தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் உள்பட 18 எதிர்கட்சிகள் சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு […]

3 Min Read

சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட வேண்டும்- நீதிமன்றம் அதிரடி

நெல்லையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரில், இன்றே மூடப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நெல்லை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  இதை விசாரித்த நீதிமன்றம், நெல்லையில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் இன்று மதியம் 2.30 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டது. என்னதான் விதிமுறை மீறி கட்டிடம் […]

2 Min Read

இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளாவுக்கு டும் டும் டும்… காதலரை கரம் பிடிக்கிறார்

திண்டுக்கல்: மணிப்பூரில் இரும்புப் பெண்மணியாக பல ஆண்டுகள் போராடிய இரோம் சர்மிளா மிக விரைவில் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறார். கொடைக்கானல் சார்பதிவாளரிடம் திருமண பதிவுக்காக விண்ணப்பம் செய்துள்ளார் இரோம் சர்மிளா. மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா. அவரின் உண்ணாவிரதப் போராட்டம் 17 ஆண்டுகளாக நடந்தது. உலகில் வேறு யாரும் அகிம்சை போராட்டத்தை இவ்வளவு ஆண்டுகளாக நடத்தியிருப்பார்களா என்பது கேள்விக்குறியே. இந்நிலையில், தனது […]

5 Min Read
Default Image