சென்னை : தனியார் பள்ளிகளுக்கான கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய முறைகளுக்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் இன்று (ஜூலை 14) தாக்கல் செய்யப்பட உள்ளது.தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்களும், அதன் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தப்பட்டதை அடுத்து 2009 ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதலின் பேரில் கட்டண நிர்ணயம் செய்ய புதிய […]
புதுதில்லி: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு வழக்கினை ஜூலை 18-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007- இல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இந்த விசாரணையானது தொடர்ந்து 15 வேலை நாள்களுக்கு நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி […]
புதுடில்லி: இரட்டைஇலை விவகாரத்தில் சசிகலா தரப்பு தேர்தல் ஆணையத்தில் போலி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும், இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ்., தரப்பினர் புகார் கூறியுள்ளனர்.இது குறித்து ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறியதாவது: இரட்டை இலை குறித்து சசிகலா தரப்பினர் போலி கையெழுத்திட்ட பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாக கூறினார். போலி ஆவணங்கள் தந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோஜ் பாண்டியன் கூறினார்.