நான் கடந்த 2 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராக கட்சிப் பணி செய்து வந்தேன் . பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். இருப்பினும், எனக்கு கடந்த சில மாதங்களாக கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் […]
நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் போக்குவரத்து பணிமனையில் எட்டு போக்குவரத்து தொழிலாளிகள் தூங்கிக்கொண்டிருந்தபோதுகட்டிடம் இடிந்து சம்பவ இடத்திலேயே 8 பேர் மரணமடைந்து விட்டனர்.1943ம் ஆண்டு அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியரால் திறக்கப்பட்ட கட்டிடம். சுண்ணாம்பு காரையால் கட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த ராமசந்திரன் என்ற பொறியாளர் 3-2-15 அன்று கட்டிடத்தை ஆய்வு செய்து மேற்கண்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் கட்டிடஉறுதிக்கு சான்றழித்துள்ளார். ஆனால் நேற்று விடியற்காலை 3.45மணிக்கு இந்த துயரம் நடந்து தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இரவு பகலாக உழைத்து […]
அக்டோபர் 19 1888 விடுதலை போராட்ட வீரரும், தமிழறிஞருமான நாமக்கல் இராமலிங்கனார் பிறந்த தினம் மக்கள் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” ”தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு” ”கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள்” போன்ற பாடல்களைப் பாடிய இவர் தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் […]
தகவல் தொடர்புக்கு பயன் படும் தபால் கார்டு 1869 ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டினரால் வெளியிடப்பட்டது .வியன்னா ராணுவ கழகத்தை சேர்ந்த, டாக்டர் இம்மானுவேல் ஹெர்மன் என்பவர் உலகின் முதல் தபால் அட்டையை வடிவமைத்தார். 1875–ல் சர்வதேச தபால் யூனியன் உருவனது . அப்போது இந்திய தபால் துறை உயர் அதிகாரியாக இருந்த மோன்டீத் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியால் 1879–ல் தபால்கார்டு முறை இந்தியாவில் அறிமுகமாகியது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நற்சாந்துபட்டியில் இயங்கி வருகிற அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவி சுபலேகா, ஆசிரியை தாக்கியதில் மயங்கி விழுந்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நற்சாந்துபட்டி அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவி சுபலேகா. சுபலேகாவின் தம்பியும் அதேபள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் சுபலேகாவின் தம்பியை அடித்துள்ளனர். இதனால் சுபலேகா, பள்ளி ஆசிரியையிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். […]
ஸ்ரீரங்கம்:இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் கொண்டு வர இருக்கிறோம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிணி முறையில் கல்வி வழங்க 486 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.