பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுதேர்வு போல் பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. இதனையடுத்து இறுதி தேர்வுக்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு அனைத்து அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்குகபட்டது. அரையாண்டு தேர்வு முதல் நாளான […]
ஆர்கே நகர் இடைதேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபித்து கொண்டிருக்கிறது. நேற்று விஷால் வேட்புமனுவை தாமத்திது பரிசீலனை செய்துவிட்டு ரத்து செய்துவிட்டு, பிறகு அவர் போராட்டம் நடத்தி அதன் பின் ஏற்றுகொள்ளபட்டு அதன் பின் இரவு 11 மணிக்கு அவரது வேட்புமனு ரத்து செய்து அறிவிவிப்பு வெளியாகி தேர்தல் ஆணையம் மீது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கிடையில் தீபா அதரவாளர்களுக்க்கும் அதிமுக கட்சிகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என ஆர்கே நகர் தேர்தல் அலுவலகம் பரபரப்பாகவே […]
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர் ஒருவரை தாக்கியதாக கூறி அவர் மீது வழக்குபதிவு செய்யபட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த் அவர்களுக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிரப்பித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை சற்றுமுன் விசாரித்த நீதிபதி அவருக்கு பிறப்பித்திருந்த பிடிவாரன்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிடபட்டுள்ளது.
ஆர்கே நகர் இடைதேர்தலில் நேற்று வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாளில் நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இன்று அவரது வேட்புமனு தாக்கலானது பரிசீலனை செய்யப்பட்டது.அவரது வேட்புமனுவில் அவரை முன்மொழிந்த 10 ஆர்கே நகர் வாக்காளர்களில் 2 வாக்காளர்கள் தங்களது கையெழுத்து போலி என கூறியதால் விஷால் மனு நிராகரிக்கப்பட்டது. மாலை 5 மணியளவில் நடிகர் விஷால் இடைதேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து முன்மொழிந்து கையெழுத்திட்ட வேலு என்பவரது கையெழுத்து பொய் […]
ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்ற்றது தேர்தல் ஆணையம்…. மாலை 5 மணியளவில் நடிகர் விஷால் இடைதேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து முன்மொழிந்து கையெழுத்திட்ட வேலு என்பவரது கையெழுத்து பொய் எனக்கூறி அவரது வேட்புமனு செல்லாது எனகூறி தள்ளுபடி செய்தது தேர்தல் ஆணையம் இதனையடுத்து,தனக்கு ஆதரவாக முன்மொழிந்து கையெழுத்திட்ட நபரது குடும்பத்தை ஆளும்கட்சியை சேர்ந்த சிலரின் மிரட்டல் காரணமாக நான் எனது கையெழுத்து போலி எனக்கூறி எழுதி கொடுக்க வேண்டிய […]
ஓகி புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளானது. மேலும் இன்னுமும் சில கிராமங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரபட்ட வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓகி புயலால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட […]
முன்னள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இறந்தார். உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். ஆனாலும் அவர் இறப்பில் பல மர்மங்கள் இருப்பதாக கூறி அதனை விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா இறந்தநாளாக அறிவிக்கப்பட்ட இன்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சாமாதியில் அதிமுக தொண்டர்கள், மக்கள் ஏராளமானோர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காரைக்கால் மாவட்ட திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.கீதா ஆனந்தன் புது வகை மதுவை அறிமுகம் செய்துவைத்து மக்களின் தாகத்தை தீர்த்தார். அதிமுகவிற்கும் திமுகவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை திரும்பத்திரும்ப இது மாதிரியான செயல்கள் நமக்கு உணர்த்துகின்றன.மது ஒழிப்பில் தன்னுடைய தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களை வெட்டி விழ்த்திய பெரியாரின் வழிவந்தவர்கள் இவர்கள் தானா என்ற கேள்வியை அதிமுக ,திமுக நம்மை கேட்க வைக்கிறது.
ஹெலிகாப்டர் மூலம் மீட்கபட்டு திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜில் அனுமதிக்கப்பட்டிடிருக்கும் நாட்டு படகு மீனவர்களின் விபரம்.. 1. ஷாலோ – தூத்தூர் 2. ஜோஸபாத் – தூத்தூர் இவர்களுடன் சென்ற மற்ற இருவரை காணவில்லை.. 3. கார்லோஸ் – சின்னத்துறை இவருடன் சென்ற மற்றொருவரை காணவில்லை 4. ஜஸ்டின் பால் – இனயம் புத்தன்துறை 5. வர்கீஸ் – முள்ளூர்துறை 6. ராஜ் – வள்ளவிளை இவருடன் சென்ற 3 பேரை காணவில்லை மேலே குறிப்பிட்ட அனைவரும் நாட்டு […]
சென்னையில் நகர்புற ஏழைகள், குடிசைவாழ் மக்களை வெளியேற்றுவதை கைவிடுக! தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜி. ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்! அன்புடையீர்!, வணக்கம். தமிழக அரசு நீர்வழிக்கரையோர மக்களையும், இதர குடிசைப் பகுதி மக்களையும் வெளியேற்றி, புறநகர் பகுதியின் வெகுதூரத்தில் மறு குடியமர்த்தி வருகிறது. 01.12.2017 அன்று காலை பல்லாவரம் அனகாபுத்தூர் பகுதியிலும், சேப்பாக்கம் 62வது வட்டத்தில் ஐந்து குடிசை பகுதிகளையும் நான் பார்வையிட்டேன். இங்கு பல அத்துமீறல்கள் நடைபெறுவதை அறிய முடிந்தது. அனகாபுத்தூர் 18வது வார்டில், […]
கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தடை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 100 பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது நடைபெற்று வருகிறது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரது படம் போட்டு பல பெரிய பெரிய பேனர்களும்,தோரண வாயில்களும் மக்கள் அனுதினமும் பயணிக்கும் சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கபட்டிருந்தன.இந்நிலையில் உயர் நீதிமன்றமானது உயிரோடு […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி ஆறு கூடுதல் நீதிபதிகளுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார். எஸ். ராமதிலகம், திருமதி. ஆர்.தரணி, ஸ்ரீ பி.ராஜமணியம், எஸ்.டி.கிருஷ்ணவள்ளி, ஸ்ரீ.ஆர்.பொங்கியாப்பன், எஸ்.எம்.ஹேமலதா ஆகிய நீதிபதிகள் பதவி ஏற்றுள்ளனர்.
தமிழகத்தில் நிஸான் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வரிச்சலுகை, ஊக்கத்தொகை தருவதாக உறுதி அளித்தபடி தமிழகஅரசு தராததால், ரூ.5000 கோடி இழப்பீடு கேட்டு நிசான் கார் நிறுவனம் பிரதமருக்கு தமிழக அரசின் மீதான புகார் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.மேலும் நிஸான் நிறுவனம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையானது தொடர்ந்து நீடித்து கொண்டே இருந்தால் தமிழக தொழில்துறை சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
தினகரனை போட்டியாளராக கூட கருதவில்லை. தினகரன் என்பவர் ஒரு சுயேட்சை வேட்பாளர் அவர் எந்த கட்சியையும் சாரதவராகத்தான்,அவர் எந்த கட்சி சார்பில் போட்டியிடுகிறார் என்பது இன்னும் அறிவிக்கவில்லை.மேலும்அவர் தேர்தல் ஆணைய விதிகளை மீறி மனுதாக்கலின் போது கூட்டத்தை கூட்டினார் டிடிவி தினகரன் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
கடலுக்குள் 29 படகுகளில் 106 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை மற்றும் கடலோர காவல் படையினர் இணைந்து 18 படகுகளில் இருந்த 76 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். மீதமுள்ள 11 படகுகளில் இருக்கும் 30 மீனவர்களை துரிதமாக மீட்க மாண்புமிகு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தினார்கள். கடலோரக் காவல் படையின் இரண்டு கப்பல்களான ‘வைபவ்’ மற்றும் ‘ஆதேஷ்’ ஆகியன இப்பணியில் ஈடுபட்டுள்ளன என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஓகி புயல் காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தென் மாவட்டங்களில் போதிய அளவில் மீட்புகுழுக்களை அனுப்பிவைக்குமாறு மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜுவிடம் கூறினார். மேலும் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பற்றியும் விளக்கினார். இந்நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் மழையால் நாகர்கோயிலில் நம்பியார் பாலம் இடிந்து விழுந்துள்ளது.
கனமழை காரணமாக மதுரை,நெல்லை ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி 4 மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!