ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் “பிரஷர் குக்கர் காய்லாங்கடைக்கு போகும்” என மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை.
ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீன் நாயர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஒகி புயலால் திசை மாறிச் சென்று காணாமல் போன 2 மீனவர்களின் உடல்கள் கொச்சி, விழிஞ்சம் துறைமுகம் அருகே மீட்பு
மீனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது . வெளிநாடுகளிலும் மீனவர்களை தேட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது – அமைச்சர் ஜெயக்குமார்…
காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது; தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
நடுக்கடலில் அழுகிய நிலையில் மிதந்த சடலங்களை படம்பிடித்த மீனவர்கள்… மீட்புப்பணியின்போது சடலங்கள் ஏதும் கிடைக்கவில்லை என பாதுகாப்புத்துறை தகவல்.
ரூ.2000 பணத்திற்காக தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டதாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் கொலைக்குற்றவாளி தஷ்வந்த் வாக்குமூலம்.தன் தாய் திட்டிக்கொண்டே இருந்ததுடன், பணம் தரவும் மறுத்ததால் கொலை செய்தாக கொலைக்குற்றவாளி தஷ்வந்த் வாக்குமூலம்.மேலும் தஷ்வந்த் தப்பியோட பயன்படுத்திய பைக் பறிமுதல்… சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஜனவரி மாதத்தில் தீர்ப்பு வரும் என தகவல்…
ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக் கோரி பல்வேறு பகுதியில் மீனவர்கள் போராட்டம். திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் போராட்டம்.
வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறவில்லையெனக் கூறி ஆர்.கே.நகர் மக்கள் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
தோல்வி பயம் காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய கோருகிறது பாஜக காவல்துறை நடுநிலையுடன் நடக்க வேண்டும்;இல்லாவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவார் என நம்புகிறேன் – டிடிவி தினகரன்
பிற பிற்படுத்தப்பட்டோருக்கு முழுமையான சமூகநீதியை வழங்க சிறப்புத் திட்டத்தை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்
விஷால் வேட்புமனு நிராகரிப்பு கேள்விக்குறியாகவே உள்ளது ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றியும் பயனில்லை .ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளைஞர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பார்கள் – சீமான் பேச்சு .
ஒகி புயல் பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பப்படும் என ராஜ்நாத் உறுதி என மக்களவை துணை சபா நாயகர் தம்பிதுரை தகவல்.
தனது தாய் சரளாவை சுத்தியால் அடித்து கொலை செய்தததை ஒப்புக்கொண்டார் தஷ்வந்த் சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து 12 மணி நேரத்திற்கும் மேல் தஷ்வந்திடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் தகவல்.
சென்னை வந்தடைந்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்பு.
இந்த வருடம் செங்கரும்பு விளைச்சல் நன்றாக அமைந்ததால், வேலூரில் விற்பனைக்கு குவிந்துள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த வருடமும் வேலூரில் பண்ருட்டி செங்கரும்பு ஒரு கட்டு ரூ.350 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் பண்டிகை காலத்தில் அந்தந்த பண்டிகை சீசனுக்கு ஏற்ற பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வேலூர் மார்கெட்டில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் தற்போது செங்கரும்பு சீசன் களைகட்டியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் கரும்பு வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்திக்கு செல்வதாலும், கடினத்தன்மை உடையதாலும் […]
டிசம்பர் 14, 15ம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தொ.மு.ச போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவிப்பு.போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. போராட்டத்திற்கு பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் – தொ.மு.ச. போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் சண்முகம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.பி.,க்கள் கூட்டம் தொடங்கியது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதிமுக எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெறுகிறது.அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.பி.க்களுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை; நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை