ஆர்.கே.நகரில் எத்தனை முறை தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெற போவதில்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓகி புயலால் வரலாறு காணாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி வருவதாக தெரிவித்தார். மேலும் எத்தனை முறை ஆர்.கே.நகர் தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெறாது என்றும், அந்த காலம் வரப்போவதில்லை எனவும் திருநாவுக்கரசர் விமர்சித்தார். இந்நிலையில், ஓகி புயலால் […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்கமிசனில் 10.30 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில் ஜெ.தீபா தற்போது வரை ஆஜராகவில்லை நீதிபதி ஆறுமுகசாமி ஜெ.தீபாவை விசாரிக்க இன்னும் காத்துகொண்டிருக்கிறார்….??
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் பற்றியும், எதிர்காலத்தில் புயல் பாதிப்புக்களை உயிர்ச்சேதமின்றி எதிர்கொள்வது பற்றியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ,நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டி.கே.ரெங்கராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் இந்திய கடற்படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுவ்ரோஜோதி ராய் அவர்களை நேரில் சந்தித்து விவாதித்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 1,947 போலி வாக்காளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆய்வாளர் பெரியபாண்டியை சுட்டுக்கொன்ற கொள்ளையர்கள் தப்பிக்க முடியாது குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஆய்வாளர் பெரியபாண்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று ஒப்படைக்கப்பட வாய்ப்பு – இணை ஆணையர் சந்தோஷ்குமார்.
அடுத்த ஆண்டு(2018) தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்
ஆர்.கே.நகர் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக, தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்.ஏற்கனவே தினகரனுக்கும் அமைச்சர்களுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க காரணம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மா தான் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள்,விவசாயிகள்,மலைவாழ் மக்கள்,மண்பாண்ட தொழிலாளர்கள் ,சிறு குறு தொழிலாளர்கள், வீடு இழந்தோர், புயலினால் உயிரிழந்தோர் ஆகிய அனைத்துக்கும் வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் குறித்து கோரிக்கை வைத்தார். ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க கப்பற்படை மூலம் தேடுதல் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளேன் எனவும் தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை காலை 7.15க்கு புறப்பட வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 9.15க்கு புறப்படும்.அதேபோன்று நெல்லையிலிருந்து நாளை காலை 7.20க்கு புறப்பட வேண்டிய தாதர் வாராந்திர விரைவு ரயில் 8.50க்கு புறப்படும். கோவை – சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில் நாளை மாலை 3.25க்கு பதில் மாலை 5.25க்கு புறப்படும் .மேலும் கோவை விரைவு ரயில் நாளை பிற்பகல் 2.55க்கு பதில் மாலை 5.10க்கு சென்னைக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது
ஆர்.கே.நகரில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக – டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் நடைபெற்றுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட டி.டி.வி.தினகரன் மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் தங்களுக்குள் மாறிமாறி கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனையடுத்து இருதரப்பினரில் பலரும் காயமடைந்துள்ளனர்.பலருக்கும் மண்டை உடைந்து உள்ளது.
ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் போதாது;அந்த நிவாரண தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசிடம் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்து ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் எனவும் மேலும் அவர் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்
இந்த வருடம் ஜல்லிகட்டு நடத்த தமிழகம் முழுவதும் மாணவர்களின் மாபெரும் போராட்டதுக்குபிறகு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து, இந்த வருடம் ஜல்லிகட்டு வெகு கோலாகலமாக நடைபெற்றது. இதனை எதிர்த்து, பீட்டா அமைப்பும், விலங்குகள் நலவாரிய அமைப்பும் உச்சீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதன் இறுதிகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவிதித்துள்ளது. தமிழக அரசு விதித்த ஜல்லிகட்டு அனுமதி சட்டத்தை தடை செய்ய பீட்டா அமைப்ப்புக்கும், விலங்குகள் அமைப்புக்கும் […]
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான வழக்கு * உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். மத்திய அரசின் சட்டத்தை மீறும் வகையில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியுமா என நீதிபதிகள் கேள்வி?
ஜல்லிகட்டுக்கு எதிராக விலங்குகள் நலவாரிய அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதன் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் இன்று அதன் இறுதிகட்ட விசாரணை நீதிபதி முன்பு தொடர்ந்தது. ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தமிழகம் சார்பில் முகுல் ரோகத்தி, ராஜேஷ் திவேதி, சேகர் நப்தே ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஆஜராகினர்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக விலங்குகள் நல அமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை தொடங்கியது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் நடைபெறும் விசாரணையில் தமிழக அரசு சார்பில் முகுல் ரோகத்கி, ராஜேஷ் திவேதி, சேகர் நாப்தே ஆஜர்.
இந்தியாவிலேயே ஆணவக்கொலைக்கு தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை- அரசு வழக்கறிஞர் சங்கர நாரயணன்