ஜெயலலிதா கைரேகை பதிவுகளை தடயவியல் சோதனைக்கு அனுப்பக்கோரி திமுக சார்பில் டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு – சென்னை உயர் நீதிமன்றம்.
நடப்பாண்டில் செம்மரம் கடத்தியதாக 10,558 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் – ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல்.
படுக்கை நிலையில்தான் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் – அப்பல்லோ மருத்துவமனை துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேச்சு.
கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு மேற்கொள்ள வந்ததற்காக எதிர்ப்பு கிளம்பியது. திமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
ஆர் கே நகரில் அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனன் அவர்களை ஆதரித்து கொருக்குப்பேட்டை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் இரட்டைஇலைக்கு வாக்கு சேகரிக்க 10,000-பேர் பங்கேற்ற மாபெரும் பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் பிரச்சார கூட்டத்தை உடைத்தெரியும் அளவுக்கு பண்மடங்கு கூட்டத்தை கடல் அலைப்போல் காட்சியளிக்கும் அளவுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தன் பலத்தை காட்டி அசத்திவிட்டார். திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் வேட்பாளர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் மாவட்ட ஆண்கள் சிறையிலிருந்து தப்பிய சகாதேவன் என்ற விசாரணை கைதி கிருஷ்ணகிரி பர்கூரில் சிக்கினார்.. சிறையின் பின்பக்க மரத்தில் லுங்கியை கட்டி சுவர் ஏறி சகாதேவன் தப்பியதாக போலீசார் தகவல் கிடைத்துள்ளது.
வேரிஜோன் (Verizon) என்கிற தமிழகத்தில் சென்னையில் செயல்படக்கூடிய அமெரிக்க ஐடி கம்பெனி 1250 பேரை ஆட்குறைப்பு செய்திருக்கிறது.ராஜினாமா செய்ய மறுத்தோரை ஆள் வைத்து அடித்திருக்கிறது. இதுதான்தொழிற்புரட்சியா…?? இது போன்றுதான் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு சாதாரண தொழிலாளியின் நிலையாகும் .இங்கு பல தொழிலாளிகளின் நிலைமை இதுதான்,மேலும் முதலாளிகளின் அடிமையாக இவர்கள் இப்பொது மாறியிருக்கிறார்கள். முதலாளித்துவம் எத்தனை கொடூரமானது என்பதை அம்மணமாய் காட்டி நிற்கும் மற்றொரு நிறுவனம்.இதனை கண்டித்து ஐடி மற்றும் ஐடிஎஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன. […]
ஓகி புயலால் தென்மாவட்ட மீனவர்கள் பலர் காணமல் போயினர். இவர்கள் ஓகி புயலால் அடித்து செல்லப்பட்டனர். அதலால் அவர்களை தேடும் பணியில் அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வரை மொத்தம் 619 மீனவர்கள் காணவில்லை எனவும், அதில் 186 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும், மீதம் உள்ளவர்கள் தமிழர்கள் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை தமிழக மீனவர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது அதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டு அதன் மீதான விசாரணை தீவிரபடுத்தபட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதுவரை விசாரணை ஆணையம் முன்பு தி.மு.க. மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன், மருத்துவ கல்வி இயக்குனராக இருந்த விமலா, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு, சென்னை மருத்துவ […]
கொளத்தூர் கொள்ளையர்களை பற்றி துப்பறிந்து ராஜாஸ்தான் வரை சென்று போராடிய ரியல் தீரன் பெரியபாண்டியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்போது, விமான நிலையத்தின் 5வது கேட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பேன்ட் வாத்தியங்கள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மாஃபா பாண்டிய ராஜன், ராஜலட்சுமி, தலைமை செயலாளர் அதிகாரிகள் […]
விமான நிலையத்தில் உள்ள பெரிய பாண்டியனின் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் அஞ்சலி. * கையில் கருப்புப்பட்டை அணிந்த வண்ணம் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அஞ்சலி.
விமான நிலையத்தில் உள்ள பெரிய பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வருகை
ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டது.
வேட்டியை மடித்து கட்டினால் நானும் ரவுடி தான் – ஹெச். ராஜா திருமாவளவன், மணிசங்கர் அய்யர் ஆகியோரை கண்டித்து, பாஜக சார்பில் காரைக்குடியில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய அக்கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா, வேட்டியை மடித்து கட்டினால் தானும் ரவுடி தான் என்றார்.
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்தை சந்தித்து கூடுதல் ஆணையர் ஷேச சாயி ஆறுதல் காவல்துறை சார்பில் ரூ.55,000 நிதியை குடும்பத்தினரிடம் வழங்கி
ஆர்.கே.நகர் தொகுதிக்குள் உரிய ஆவணங்களின்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – தனியார் கால் டாக்சி நிறுவனங்களுக்கு தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை
ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் இருந்த அனைத்து நபர்களையும் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது ஜெயலலிதா வீட்டில் இருந்த ஒரு நபர் பல்வேறு தகவல்களை எங்களுக்கு தந்துள்ளார் தீபா
ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு, மகன்கள் கல்விச்செலவு அரசு ஏற்பு, காயமடைந்த காவலர்கள் மருத்துவச்செலவை அரசே ஏற்பு உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒரு மாத தேடுதல் […]
கோயிலை இடிப்போம் என்பது அப்பட்டமான இந்து விரோத செயல்; திருமாவளவனை உடனே கைது செய்ய வேண்டும்” -ஹெச். ராஜா
2017 அக். வரை டெங்கு காய்ச்சலால் 16,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 52 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை.அக். மாதத்திற்கு பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜன.4-க்கு வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிய வழக்கில் சுகாதாரத்துறை பதில் மனு. கடந்த 5 ஆண்டுகளில் இந்தாண்டு தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது – பதில் மனுவில் சுகாதாரத்துறை தகவல்.