முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் ஆட்சியர், அதிகாரிகள் ஆய்வு செய்யப்போகிறார்கள் எனத் தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வருகை தந்தார்.மேலும் அவருடன் வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடன் உள்ளனர்.இதனால் போயஸ் தோட்டத்தைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் விவசாய நிலத்தில் ONGC நிர்வாகம் எரிவாயு எடுப்பதை கண்டித்தும். ONGC நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும்.ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக நன்னிலம் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
தமிழக போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது மோட்டார் வாகன சட்டத்தில் 5 ஷரத்துகளில் திருத்தங்கள் கோரியுள்ளோம்; கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இன்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க உள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
வருடாவருடம் பொங்கல் பண்டிகை பண்டிகையின் போது பொதுமக்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசாக பச்சரிசி, அச்சுவெல்லம், கரும்பு போன்றவை கொடுக்கப்படும் அதுபோல இந்த வருடமும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி, வருடாவருடம் பொங்கல் பரிசு கொடுப்பது போல பச்சரிசி, சர்க்கரை, 2 அடி நீள கரும்பு உளிட்ட பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும், இதன் மூலம், 1,84,00,000 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறுவார்கள் ஏன முதல்வர் தெரிவிக்கப்பட்டது. source : […]
சென்னை: பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் வி.ஏ.ஓக்கள் தங்களின் சொந்த ஊருக்கே மாற்ற வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று நிறைய சம்பாதித்து நம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என பல இளைஞர்கள் தங்கள் சொந்தங்களை மறந்து அங்கே தங்கி கஷ்டபட்டு வேலைக்கு செல்ல தயாராகி கடன் வாங்கி பணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் சில பொய் வேலைவாய்ப்பு நிறுவனங்களால் பல இளைஞர்கள் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்து தவிக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது புதுகோட்டையில் அரங்கேறியுள்ளது. புதுகோட்டையில் ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் பல இளைஞர்களுக்கு கத்தாரில் வேலை வாங்கி […]
தமிழகத்தில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால் அதன் தன்மை கெட்டுபோய் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் அவர்கள் மக்களவையில் கூறும்போது, ‘தமிழகத்தில் சென்னை , காஞ்சிபுரம், திருச்சி, கோவை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகமாக உரிஞ்சபடுவதால், அங்கே நிலத்தடி நீர் வரத்து குறைந்துள்ளது, மேலும், திருவள்ளூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் அசுத்தமாக உள்ளது.’ கூறினார். source : dinasuvadu.com
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பேட்டியில், தினகரனை மறைமுகமாக திட்டுவதாக கூறி மூட்டைபூச்சிகெல்லாம் பதில் சொல்லமுடியாது என் கூறினார். இதற்க்கு பதிலளிக்கும் வகையில், தினகரன் அளித்த பேட்டியில், ‘அமைச்சர் ஜெயகுமார் பேசுவதை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. என்றும், மூட்டைபூச்சியை விட ஆபத்தானது டெங்கு கொசு. டெங்கு கொசுதான் இன்று அமைச்சரவையில் இருக்கின்றன. மக்களாலும் தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரத்தால் அமைச்சரவையில் இருக்கின்றனர். என்றும் விமர்சனம் ச்வேய்துள்ளார். source : dinasuvadu.com
ஆர்கே.நகர் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்த கடந்த 24 ஆம் தேதி அன்று முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் வெற்றிவேலின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு ஜனவரி 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை இல்லை என தடை கோரி பெண் உரிமை இயக்கம் சார்பில் தொடர்ந்த வழக்கில், ஜன.5-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதியாக உள்ளது என அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் பம்பொழி, வடகரை, அச்சன்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.அதேபோல் கேரள மாநிலம் ஆரியங்காவு, தென்மலை, புனலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சற்று பிதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 6 கல்லூரி மாணவிகள் டெல்லி குடியரசுதின கொண்டாட்ட பேரணியில் பங்கேற்கின்றனர். அதேபோன்று இரு அரசு பள்ளி மாணவி மொத்தம் 7 பேர் தேர்வாகியுள்ளனர். டெல்லியில் குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்துகொள்ள சென்னை பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாணவி ராமலட்சுமி சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மிடாஸ், சாய் காட்டன்ஸ் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து அடையாறு கற்பகம் கார்டனில் உள்ள இளவரசி மருமகன் கார்திகேயன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
கூடங்குளத்தின் முதல் 2 அணு உலைகளின் சார்பற்ற அறிக்கையை வெளியிட வேண்டும். கூடங்குளம் அணு உலை முறைகேடு குறித்து அரசியல் கட்சிகள் பேச மறுக்கின்றன கூடங்குளம் அணு உலை முறைகேடு குறித்து யார்மீது வழக்குப்பதிய உள்ளார்கள் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது 42 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் 11 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணபடுகிறது. இங்கு வரும் வெளியூர் பக்தர்களை சிலர் தாங்கள் கைடு என கூறிக்கொண்டு பழனியை சுற்றிகாட்டுவதாகவும், சாமி தரிசனம் சீக்கிரம் பார்க்க ஏற்பாடு செய்வதாகவும் கூறி பணம் பறித்து ஏமாற்றி விடுகின்றனர். ஆதலால், அவ்வாறான செயல்களை தடுக்கும் விதமாகவும், அவ்வாறு செய்பவர்களை பிடிக்கும் வகையில் காவல்துறை ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அவ்வாறு ஏமாற்றுபவர்களுக்கு கண்டிப்பாக சிறை தண்டனை வழங்கப்படும் என கூறினார். source :dinasuvadu.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடக்கும் விசாரணையில், ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தபடுகின்றனர். அதன்படி T.T.V.தினகரனுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. மேலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, ‘ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை இன்னும் 7 நாட்களுக்குள் T.T.V.தினகரன் சமர்பிக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது. இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பபட்டுள்ள்ளது. source : dinasuvadu.com
ஒவ்வொரு பண்டிகையின் போதும் டாஸ்மாக் ஒரு டார்கெட் வைத்து அதனை முறியடித்தும் வருகிறது. அந்த வகையில் தற்போது ஆங்கில புத்தாண்டுக்கு ரூ.200 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. இந்த டார்கெட்டை நிறைவு செய்ய அதிகமாக பீர்களை கொள்முதல் செய்து கடைகளுக்கு அனுப்பி வருகிறது. அதேபோல் அதிக விலைக்கு மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்துள்ளது. source : dinasuvadu.com
வெங்காய விலை மீண்டும் ஏறுமுகமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சேலத்தில் லீ பஜார் மொத்த வியாபார மார்கெட்டில் நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.57 முதல் ரூ.87 வரை இருந்தது. இந்த சின்ன வெங்காயம் 5 தரமாக பிரித்து விற்பனை நடந்து வருகிறது. இந்த விலை ஏற்றதால் சேலம் சில்லறை மார்கெட்டில் கிலோ 80 முதல் 110 வரை விற்க்கபடுகிறது. source : […]