ரேஷன் கார்டுதாரர்கள் நெரிசல் இன்றி, பொங்கல் பரிசு தொகுப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், ஞானசேகரன், மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது தொடர்பான அவர் சுற்றறிக்கையில் ‘ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தேவையான பொருட்களை, தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்றும் மண்டல இணை பதிவாளர்கள், தங்கள் மண்டலத்தில் தகுதியுள்ள, ரேஷன் கார்டுதாரர்களின் பட்டியலை, மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் […]
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், எம்.எல்.ஏக்கள் 104 பேர் பங்கேற்றனர். பல்வேறு காரணங்களை கூறி ஏழு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடரில் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவையில் தினகரன் பேசும் போது, அமைதி காக்க வேண்டும் என எம்.எல்.ஏக்களை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரலில் உள்ளாட்சித் […]
ப்ளஸ் 2 பரிட்சை எழுதும் தனிதேர்வாளர்களுக்கு தக்கல் முறையில் தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்க்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சேவை மைய விவரத்தை அறிந்துகொள்ளலாம். ப்ளஸ் 2 தேர்வு காலை 10.15 முதல் மதியம் 1.15 வரை நடைபெறும். source : dinasuvadu.com
அதிமுகவில் அதிரடி மாற்றங்களை கொடுவந்துள்ளனர் அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் .அதிமுக கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தற்போது அறிவித்துள்ள செய்தி தொடர்பாளர்களை தவீர வேறு யாரும் பேட்டி அளிக்கக்கூடாது என்று தலைமை தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக பொன்னையன், கோகுல இந்திரா, வளர்மதி, வைகைச்செல்வன், ஜே.சி.டி.பிரபாகர், சமரசம், மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், பேராசிரியர் தீரன், கே.சி.பழனிசாமி, ஏ.எஸ்.மகேஸ்வரி, பாபு முருகவேல் நியமனம் என்று தெரிவித்துள்ளது … […]
ரஜினி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டாதோடு கூடவே ஆன்மீக அரசியல் என்று கூறியதால் பெரும் சர்சையாகி உள்ளது. இந்நிலையில் தாங்கள் ஏற்கெனவே ஆன்மிக அரசியலில் இருப்பவர்கள் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினியை பா.ஜ.க. இயக்குவதாகவும், ரஜினியுடன் கூட்டணிக்கு ஏங்குவதாகவும் கூறுவதை ஏற்க முடியாது என்றார்.தாங்கள் ஏற்கெனவே ஆன்மிக அரசியலில் இருப்பவர்கள் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோடு சத்யாநகரில் அரசு பேருந்து மோதிய விபத்தில் ஸ்வதிக்கா என்ற 3 வயது குழந்தை பலியாகியுள்ளது.மேலும் இந்த விபத்து குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
பிஜேபி மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணிய சுவாமி அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் அவர்கள் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் . மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மதுரை உட்பட மேலும் 9 விமான நிலையத்திற்கு பெயர்சூட்டுவது குறித்து பரிசீலனையில் உள்ளது . மேலும் மதுரை விமான நிலைய பிரச்சனையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தால் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் .. வெங்கையாநாயுடு அவர்கள் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் […]
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.5 அன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார். இந்நிலையில் அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஒரு நபர் […]
மதுரை விளக்குத்தூண் அருகே உள்ள தனியார் ஜவுளி கடையில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்து காரணமாக கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. சுமார் 7 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றன.
திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசத்திற்கு கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளது.இன்று முதல் வரும் 31ம் தேதி வரையில் இடைவெளி விட்டு அணையைத் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் அருகே உள்ள மணியன் தீவு கடற்கரையில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இப்படகானது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா என கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.
தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள எட்டையாபுரத்தில் ஆசிரியர் வேலை தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்துள்ளனர்.ஆகவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஹரிணிகாஸ்ரீ பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னையில் புத்தாண்டு அன்று குடிப்போதையில் வாகனம் ஒட்டி பிடிபட்ட 125 பேருக்கு பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று கிடைக்காது என தமிழக போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் பாஸ்போர்ட் கிடைக்காது என புத்தாண்டுக்கு முன்பாகவே காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் MCA பட்டப்படிப்பு இரண்டாமாண்டு பயிலும் மாணவி அமலா இரயிலில் அடிபட்டு பலியானார். மேலும் இறந்த அம்மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.மேலும் அம்மாணவியின் இறந்த பின்புலம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஊபர் மற்றும் ஓலா ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து அந்த 2 நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் கண்டித்து இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மீட்டர் கட்டணம், நிலையான வருமானத்திற்கு அரசு வழி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.. திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாக தகவல். கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மும்மரமாக ஈடுபட்டுள்ள நிலையில் சந்திப்பு நடக்கிறது.உடல்நலம் குறித்து விசாரிக்கவும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் கருணாநிதியை ரஜினி சந்திக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனேவே அவர் ஆளுங்கட்சியை விமர்சித்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது …. […]
ஒக்கி புயலில் கேரள கடலில் சிக்கிய 6 தூத்துக்குடி மீனவர்களில் மீனவர் ஜெகன் மட்டும் 2 நாட்கள் ஆழ்கடலில் மரண போராட்டம நடத்திய நிலையில் மீட்கப்பட்டு கேரள அரசின் சிறப்பான சிகிச்சையால் மீட்கப்பட்டார். தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஜுடு உடல் விழிஞ்சம் கடலில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு கேரள அரசின் துணையோடு மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவின் உதவியால் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு டிச 9. ல் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று இரவு […]
ஆங்கில புத்தாண்டு அன்று மதுரையில் அன்னலெட்சுமி என்ற பெண்மணி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரின் சடலத்தை கேட்டு சென்ற அவரது உறவினர்களிடம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டதால் ஊழியர்களுக்கும் இறந்தவரின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஊழியர்கள் ஊழியர்கள் அன்னலெட்சுமியின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒரு சடலத்தை கொடுத்துள்ளனர். source : dinasuvadu.com
தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்கபடவேண்டும் எனவும் பேறுகால விடுப்பின் போது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை விசாரிக்கையில் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தாய்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்க கூடாது எனவும், மேலும், பேறுகால விடுப்பின் போது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்கும் பழக்கம் ஏன் கட்டாயபடுத்தபடகூடாது. எனவும் கேள்வி எழுப்பினார். source : dinasuvadu.com
ஓலா, ஊபர் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்டித்து நாளை வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் போராட்டம் அறிவித்துள்ளது. மீட்டர் கட்டணம், நிலையான வருமானத்திற்கு அரசே வழி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நாளை வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது.ஓலாவால் மற்ற ஓட்டுனர்கள் பாதிப்படைவதால் அதை கண்டித்து போராட்டம் … CITU உட்பட 5 மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு… source: dinasuvadu.com