ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன். பூங்குன்றன் வரும் 9 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் உத்தரவு. அப்பலோவில் ஜெயலலிதாவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம்தொடர் விசாரணை.விசாரணையில் சிகிச்சை முறைகள், பயன்படுத்தப்பட்ட மருந்துகள் குறித்து கேட்டறிவதாக தகவல். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது .எனவே பூங்குன்றன் வரும் 9ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது . மேலும் ஜெயலலிதாவுக்கு […]
ஒகி புயலில் சிக்கி இன்னும் கரை திரும்ப முடியாமலும், கடலில் காணமல் போனவர்களின் உடலை கண்டுபிடிக்க முடியாமலும் மீனவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒகி புயலில் சிக்கியவர்களில் தூத்துக்குடியை சேர்ந்தவர்களில் 6 மீனவர்கள் காணவில்லை. இதில் மீனவர் ஜூடுவின் உடல் விழிஞ்சம் கடலில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு கேரள அரசின் துணையோடு மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவின் உதவியால் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு டிச 9. ல் அடக்கம் செய்யப்பட்டது. அடுத்ததாக […]
கடந்த 31 ஆம் தேதி தனது அரசியல் பிரவேஷம் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார் .அன்று முதல் இன்று வரை வரவேற்ப்பும் சரி சர்ச்சையும் ஏற்படுத்திவருகிறது .இந்நிலையில் இணையதளம் மற்றும் ஆப் மூலம் உறுப்பினராக சேரலாம் என்ற ரஜினியின் அறிவிப்புக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பும், ஆர்வமும் இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் திடீர்திடீரென்று அரசியல் கட்சியை ஆரம்பிப்பார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே கட்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பலர் […]
மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் தேசிய மருத்துவ ஆணையம் செயல்பட கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் . மருத்துவ ஆணைய விவகாரத்தில் தமிழகத்திற்கு பாதிப்பு வராத வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் என மாநில சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் தேசிய மருத்துவ ஆணையம் செயல்பட கூடாது என்றார். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தில் முதல் சித்த மருத்துவ திருநாளை தொடங்கி வைத்து பேசிய […]
சென்னையில் நடந்த அதிமுக கூட்டத்தில் 100 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், சட்டசபை தொடர், எதிர்க்கட்சிகளை சமாளிப்பது, ஆர்கே நகர் தேர்தல் தோல்வி, சட்டசபைக்கு வரும் தினகரனை எதிர்கொள்வது குறிதது ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது. சட்டசபை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். தினகரன் பேசும் போது பிரச்னை செய்யக்கூடாது என்று எம்எல்ஏக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜனவரி 12க்குள் சிகிச்சை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோவுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஜனவரி 12ம் தேதி வரை விசாரணை ஆணையம் கால அவகாசம் அளித்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் கடந்த நவம்பர் 22ம் தேதி முதல் இதுவரை 17 பேரிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். நேற்று இளவரசி […]
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விரைவில் கூடவுள்ள சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பேரவையில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டி.டி.வி. தினகரன் பேசும் போது, பிரச்னை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என தெரிவித்தார். சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், […]
சமூக அநீதியான நீட் தேர்வைக் கைவிடக் கோரி சேலத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.கலியபெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.குழந்தைவேலு, அஇஜ மாதர் சங்க மாவட்ட தலைவர் டி.பரமேஸ்வரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என்.பிரவீன்குமார் ஆகியோர் கண்டனவுரை நிகழ்த்தினர். சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.தங்கவேலு, சேலம் வடக்கு மாநகர செயலாளர் எம்.முருகேசன், மேற்கு மாநகர […]
சென்னை : கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் அவரது மகன் மு.க.அழகிரி சந்திக்கவுள்ளர்.மேலும் இந்த சந்திப்பில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்கவே மு.க.அழகிரி சந்திப்பு நடைபெறப்போவதாக என தகவல் கிடைத்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய தோல்வியை மு.கருணாநதியின் மூத்த மகனும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மு.க.அழகிரி மற்றும் அவரது பேரனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கார்டுதாரர்கள் நெரிசல் இன்றி, பொங்கல் பரிசு தொகுப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், ஞானசேகரன், மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது தொடர்பான அவர் சுற்றறிக்கையில் ‘ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தேவையான பொருட்களை, தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்றும் மண்டல இணை பதிவாளர்கள், தங்கள் மண்டலத்தில் தகுதியுள்ள, ரேஷன் கார்டுதாரர்களின் பட்டியலை, மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் […]
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், எம்.எல்.ஏக்கள் 104 பேர் பங்கேற்றனர். பல்வேறு காரணங்களை கூறி ஏழு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடரில் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவையில் தினகரன் பேசும் போது, அமைதி காக்க வேண்டும் என எம்.எல்.ஏக்களை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரலில் உள்ளாட்சித் […]
ப்ளஸ் 2 பரிட்சை எழுதும் தனிதேர்வாளர்களுக்கு தக்கல் முறையில் தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்க்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சேவை மைய விவரத்தை அறிந்துகொள்ளலாம். ப்ளஸ் 2 தேர்வு காலை 10.15 முதல் மதியம் 1.15 வரை நடைபெறும். source : dinasuvadu.com
அதிமுகவில் அதிரடி மாற்றங்களை கொடுவந்துள்ளனர் அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் .அதிமுக கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தற்போது அறிவித்துள்ள செய்தி தொடர்பாளர்களை தவீர வேறு யாரும் பேட்டி அளிக்கக்கூடாது என்று தலைமை தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக பொன்னையன், கோகுல இந்திரா, வளர்மதி, வைகைச்செல்வன், ஜே.சி.டி.பிரபாகர், சமரசம், மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், பேராசிரியர் தீரன், கே.சி.பழனிசாமி, ஏ.எஸ்.மகேஸ்வரி, பாபு முருகவேல் நியமனம் என்று தெரிவித்துள்ளது … […]
ரஜினி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டாதோடு கூடவே ஆன்மீக அரசியல் என்று கூறியதால் பெரும் சர்சையாகி உள்ளது. இந்நிலையில் தாங்கள் ஏற்கெனவே ஆன்மிக அரசியலில் இருப்பவர்கள் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினியை பா.ஜ.க. இயக்குவதாகவும், ரஜினியுடன் கூட்டணிக்கு ஏங்குவதாகவும் கூறுவதை ஏற்க முடியாது என்றார்.தாங்கள் ஏற்கெனவே ஆன்மிக அரசியலில் இருப்பவர்கள் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோடு சத்யாநகரில் அரசு பேருந்து மோதிய விபத்தில் ஸ்வதிக்கா என்ற 3 வயது குழந்தை பலியாகியுள்ளது.மேலும் இந்த விபத்து குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
பிஜேபி மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணிய சுவாமி அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் அவர்கள் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் . மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மதுரை உட்பட மேலும் 9 விமான நிலையத்திற்கு பெயர்சூட்டுவது குறித்து பரிசீலனையில் உள்ளது . மேலும் மதுரை விமான நிலைய பிரச்சனையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தால் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் .. வெங்கையாநாயுடு அவர்கள் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் […]
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.5 அன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார். இந்நிலையில் அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஒரு நபர் […]
மதுரை விளக்குத்தூண் அருகே உள்ள தனியார் ஜவுளி கடையில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்து காரணமாக கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. சுமார் 7 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றன.
திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசத்திற்கு கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளது.இன்று முதல் வரும் 31ம் தேதி வரையில் இடைவெளி விட்டு அணையைத் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் அருகே உள்ள மணியன் தீவு கடற்கரையில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இப்படகானது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா என கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.