ஆளுநர் உரையில் தீர்க்கமான அறிவிப்புகள் எதுவும் இல்லை.மீத்தேன் திட்டத்தை தடை செய்வது குறித்த அறிவிப்பு இல்லை. கூடங்குளம் அணு உலையின் உதிரி பாகங்கள் தரமற்றவையாக இருப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். ஒக்கி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்கிற வலியுறுத்தலும் இல்லை.தமிழக அரசு முடங்கியுள்ள நிலையில் 2030க்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி எப்படி சாத்தியம்?; ஆளுநர் உரையில் முக்கிய பிரச்னைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் […]
தமிழகம் முழுவதும் இன்று இரவு முதல் விஏஓக்கள் தர்ணா செய்ய முடிவு செய்துள்ளனர் . திருவண்ணாமலை, ஜன.8: தமிழக அரசின் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சான்றுகளுக்கு ஒப்புதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அரசு சார்பில் மடிக்கணினியும், இணையதள சேவைக்கு மோடமும் வழங்கப்பட்டு, அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இணையதளக் கட்டணத்தை அரசு செலுத்தவில்லை. இதையடுத்து, இணையதள கட்டணத்திற்கு பணம் வழங்கக் […]
அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று 5 வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரித்த தலைமை நீதிபதி கூறுகையில், இந்த போக்குவரத்து வேலைநிறுத்த போராட்டத்தால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டது பொதுமக்கள் தான். எனவும், தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளிமாணவர்களும் தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஊழியர்களின் போராட்டம் என்னையும், சொகுசு கார்களில் வரும் அமைச்சர்களையோ பாதிக்க வில்லை. பொதுமக்களை மட்டும் தான் […]
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சட்டபேரவையில் உரையாற்றியது உரையை வாசிப்பதற்கு முன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என தமிழில் கூறினார் ஆளுநர். ஆளுநர் உரையை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரை: ஜிஎஸ்டி வரிமுறை மாற்றத்தை சிக்கலின்றி நடைமுறைப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது.மத்திய அரசு தமிழகத்தில் மத்திய நிதியுடன் கூடிய பல திட்டங்களுக்கான நிதியைக் குறைத்திருக்கிறது என்றும் கூறினார். பின்னர் […]
மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை கட்டணமின்றி வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் . சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 கோடியே 89 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணு மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு மஜ்ஜைகள் பாதிக்கப்படும் என்றும், மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளும் போது 17 லட்சம் ரூபாய் வரை செலவாகும் […]
சென்னை சாந்தோமில் அரசு பேருந்து மோதியதால் பட்டினப்பாக்கம் டுமில்குப்பம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து ஏற்படுத்தியதாக கண்ணகி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற தற்காலிக ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தமுறை நடந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் போது கூட தற்காலிக ஓட்டுனர்களால் இம்மாதிரியான விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் இணைந்திருந்தாலோ, தொடர்பு பெற்றாலோ, கணவன் மனைவி இருவரும் சதா சர்வ காலமும் சண்டை சச்சரவு என இருப்பார்கள், ஆனால் வருடம் தவறாமல் குழந்தை பெற்றுக்கொள்வார்கள். இதுதான் சுக்கிரன், செவ்வாய் எனும் ரகசிய நட்பு. (ஆனால் இதை அறிந்த ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் அதிபதியான சூரியன், தான் படைத்த செவ்வாயை நட்பு கிரகமாக ஏற்காமல் சமம் என்ற பத்தோடு ஒன்று, இத்தோடு இதுவும் ஒன்று என சற்று விலகியே இருக்கிறார்.) எனவேதான் சுக்கிரனின் ஆட்சி […]
ஆளுநர் ஆய்வை வரவேற்கும் தமிழக அரசின் நடவடிக்கை வேதனை அளிப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரும்பானமையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாததால் வெளிநடப்பு செய்ததாக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.பெரும்பான்மை இல்லாமல் அ.தி.மு.க அரசு நீடிப்பதை ஆளுநர் அனுமதிப்பதாக எனவும் குற்றச்சாட்டு.அ.தி.மு.க அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும். பெரும்பான்மை இல்லாத அரசின் கொள்கைகளை உரையாக ஆளுநர் வாசிப்பது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல் எனவும் அ.தி.மு.க அரசுக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தேர்தல் ஆணையம் […]
சார்பதிவாளர் ஆபிஸில் எப்போதும் நிலம் விற்பவர்கள், வாங்குபவர்களை விட அதிகமாக காணப்படுபவர்கள் இடை தரகர்கள் தான். அவர்களின் ஆதிக்கம் அங்கே மட்டுமல்ல மற்ற பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அதிகமாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும் சமயத்தில் தற்போது அவ்வாறான இடை தரகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள் தவிர மற்ற யாரும் உள்ளே இருக்க கூடாது எனவும், அவ்வாறு இடைத்தரகர்கள் இருப்பது கண்டுபிடிக்க பட்டால் காவல்துறை […]
தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், இன்றுடன் 5வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில், சென்னை சிந்தாரிப்பேட்டையில் போக்குவரத்து ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, கூட்டமைப்பின் தலைவர் சவுந்தரராஜன், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என அறிவித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களது தரப்பு வாதத்தை, இன்று முன்வைக்க உள்ளதாகவும், அவர் கூறினார். தற்காலிக ஓட்டுனர்களால் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், தங்களது பிரச்னைகள் தீரும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றார். […]
மறைந்த ஜெயலலிதா வசித்த, வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றப் போவதாக, அரசு அறிவித்து உள்ளது. அதற்காக, பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட குழு, இல்லத்தை ஆய்வு செய்துள்ளது.இது குறித்து, கலெக்டர் அன்புச்செல்வன், நிருபர்களிடம் கூறுகையில், ”ஜெயலலிதா அவர்கள் வசித்த வீட்டை கையகப்படுத்தும் பணி, நான்கு மாதங்களுக்குள் முடிக்கப்படும். இன்றைய தேதியில், அவர்களுக்கு நேரடி வாரிசு யாரும் கிடையாது. ஆய்வுப்பணி முடிந்து, நிலம் கையகப்படுத்தும் போது, பொது அறிவிப்பு வெளியிடுவோம். அப்போது, உரிமை கோருபவர்கள், ஆட்சேபனை […]
விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் திரைத்துறையில் இருந்த போது நடிகர் சங்க கடனை அடைத்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.பின் இவர் தீவிர அரசியலில் ஈடுப்பட்ட போது சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகினார்.இந்நிலையில் அமெரிக்காவில் பொங்கல் பண்டிகையை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, அமெரிக்கா அதிபர் ட்ரெம்ப் அதை நிறைவேற்றியுள்ளார்.இதை எந்த ஒரு நடிகர்களும் கண்டுக்கொள்ளாத நிலையில் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார். https://twitter.com/iVijayakant/status/949558533913133056 […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் நிறைய பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சசிகலா விசாரணை ஆணையத்தில் ஆஜராவது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கப்பல்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் மீனவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களை இலங்கை கப்பல் படையினர் சேதப்படுத்தியதாக மீனவர்கள் கூறினர். இத்தாக்குதலால் மீனவர்கள் இரவோடு இரவாக கரைக்கு திருப்பியதாக கூறப்படுகின்றது.
மதுரை அழகர்கோவிலில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்களுக்கு கறிவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திர மண்டபத்தில் ரசிகர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது கடந்த 28-ம் தேதி கிடா வெட்டி விருந்து வைக்க ஆசை என ரஜினி தெரிவித்திருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக மதுரை அழகர்கோவிலில் ரசிகர் மன்றங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. அப்போது ரசிகர்களிடையே பேசிய ராகவா லாரன்ஸ், […]
தொடர் பேருந்து நிறுத்த காரணத்தினால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று பேருந்து நிலையத்தில் தனித்திருக்கு பயணிகளை கண்ட அதிமுக எம்.எல்.ஏ கே.ஆர். ராதாகிருஷ்ணன் தானே பேருந்து ஓட்டுவதாக முடிவு செய்தார். பின்னர்அந்தியூர் பேருந்து நிலையத்தில் இருந்த கிளை மேலாளரிடம் தனது ட்ரிவிங் லைசென்ஸை காட்டி பரிசோதித்த பின்பு தவித்து கொண்டிருக்கும் மக்களை பேருந்தில் அழைத்து சென்றார். இந்த முயற்சி அனைவராலும் பாராட்டத்தக்கது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நான்காவது நாளாக இன்றும் இயக்கப்படாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய தமிழக அரசு, அதை செய்யாமல் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேலும் சிக்கலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசுப் போக்குவரத்துக்கழக வேலை நிறுத்தத்தால் தமிழ்நாட்டு மக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழக மக்கள் கடந்த 4 நாட்களாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் […]
‘‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நான்காவது நாளாகத் தொடர்கிறது. இதனால் மக்கள் படும் அவதிக்கு அளவில்லை. ஆனால் இதற்குக் காரணம் அதிமுக அரசுதானே தவிர வஞ்சிக்கப்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக நியாயமான அவர்களின் முறையீடுகள் எதுவும் கண்டுகொள்ளப்படாததன் விளைவே இந்த வேலைநிறுத்தப் போராட்டம். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்களின் ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் அதாவது மறுவரையறை செய்யப்படும். ஆனால் அவர்களின் 12ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த […]
இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக செயல்தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், நேற்று (6.1.2018) என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, அவரிடம் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தெரிவித்து, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதியம் குறித்த கோரிக்கைகளை […]
புதுச்சேரி அருகே பொம்மையார்பாளையத்தில் உள்ள டி.டி.வி.தினகரன் பண்ணை வீட்டில் வருமானவரித்துறை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆய்வின் போது சீல் வைத்து சென்ற அறையை திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டி.டி.வி.தினகரனுக்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இங்கு மாட்டுப்பண்ணை, விவசாய தோட்டங்கள் ஆகியவை உள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய பங்களாவும் உள்ளது. source: dinasuvadu.com