இன்று கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர் , காட்டுமன்னார் கோவில், குமராட்சி, லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் தூத்துக்குடியில் லேசான தூரல் மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் 60 சதவீத பேருந்துகள் இயக்கம். மாவட்டத்தில் 380 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள 1,150 அரசுப் பேருந்துகளில் 590 பேருந்துகள் இயக்கம். மாநகர் பகுதியில் 56 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கம். புறநகர் பகுதிகளில் 53 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன மதுரை மாவட்டத்தில் 70 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கம். 16 பணிமனைகளில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கம். 920 பேருந்துகளில் […]
மாநிலத்தின் 13 கடலோர மாவட்டங்களில் 3.42 லட்சம் குடியிருப்புகளை கட்டுவதற்காக ரூ.26,575 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்கள் இழப்பு ஏற்படாமல் இருக்க,அங்கு வாழும் குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக குடிசை சுத்திகரிப்பு சபையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு படி 5.85 லட்ச குடியிருப்புகள் அமைக்க வேண்டும் என்றும் இதில் 1.89 லட்ச குடியிருப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. இதற்காக ரூ.7,499 கோடி […]
ஜனவரி 12ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து கேரளா கொச்சுவேலிக்கு, முழுவதும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கம் எனவும்,ஜனவரி 12ம் தேதி காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில் கொச்சுவேலியை இரவு 10.50க்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை :தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தமிழக போக்குவரத்துத்துறை தங்களுக்கு கொடுக்கிற ஊதியத்தை உயர்திகொடுக்க வேண்டும், அதேபோல தங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர் தமிழக போக்குவரத்து ஊழியர்கள். இந்நிலையில் குடும்பத்துடன் போக்குவரத்து தொழிலாளர்கள் வண்ணார் பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வியாசர்பாடி திடீர் நகரில் 2 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு 4 ரவுடிகள் தப்பியோடியுள்ளனர். கணவன் கழுத்தில் கத்தியை வைத்து மனைவி மற்றும் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த 4 ரவுடிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தமிழக போக்குவரத்துத்துறை தங்களுக்கு கொடுக்கிற ஊதியத்தை உயர்திகொடுக்க வேண்டும், அதேபோல தங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர் தமிழக போக்குவரத்து ஊழியர்கள். இந்நிலையில் இன்று தமிழக அரசை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அருகே 23 தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிமுக கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நாளாக இன்று நடந்து வரும் சட்டமன்ற பேரவை கூட்டத்தில் இருந்து ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்துள்ளார். இது குறித்து வெளியில் வந்த தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தற்போதுள்ள அரசு மெஜாரிட்டி அரசு என அமைச்சர் தங்கமணியின் பேச்சுக்கு பதில் கூற முயன்ற போது எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் நான் தி.மு.கவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க முயன்றேன். தகுதி நீக்கம் குறித்தும் பேச முற்பட்டேன். ஆனால் […]
நாகைப்பட்டினம் : வேதாரண்யம் விவசாயிகளின் 22நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். விவசாயிகளுடன் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைதுறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து விவசாயிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு சுமுகத் தீர்வு காணவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒத்துழைப்பு அளிக்குமாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கேட்டுக்கொண்டார். ஒத்துழைப்பு தரத் தயார் என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட வலியுறுத்தினார். அதற்கு, தனது ஆலோசனையின் பேரிலேயே ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டதாகத் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, […]
ஸ்மார்ட் சிட்டி மிஷன் மற்றும் ஏ.எம்.ஆர்.யூ.டி (மறுமலர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றம் பற்றிய ஆடல் மிஷன்) முதல் மறுஆய்வு கூட்டத்தில் பேசினார் உள்ளூர் நிர்வாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அப்பொழுது ஸ்மார்ட் சிட்டி திட்டம் சென்னை மற்றும் 9 முக்கிய நகரங்களில் செயல் அமைக்கவில்லை என்று கூறினார். இதற்கு விதிமுறைகளை நிதானப்படுத்த மத்திய அரசு விருப்பமின்மையே கரணம் என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசின் அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு நடந்த பின்னும் இன்னும் எந்த வேலைகளும் நடைபெறவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதற்காக ரூ.13,425 […]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றதையடுத்து, அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், அவர் சட்டசபைக்கு செல்ல தடை விதிக்க வேண்டுமென்றும் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த […]
செங்கல்பட்டில் உள்ள அரசாங்க நிலத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடர்ந்த காடுகளை கொண்ட இந்த இடம் பொதுமக்களின் பார்வையில் படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. ஏனெனில் இந்த இடத்திற்கு அருகில் உள்ள மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எல்.டி.ஆர்.ஐ) மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த கூடுதல் இயக்குனர் டாக்டர் எஸ். எவரவாசன், இதை தாங்கள் செய்ய வாய்ப்புகள் இல்லை என்றும் அரசாங்க விதிமுறைகள் படியே தாங்கள் கழிவுகளை கொட்டுவதாகவும் கூறியுள்ளார். இதனை சீர் செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு […]
ஒக்கி புயல் குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் பிரின்ஸ் பேச்சுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார் . அவர் கூறிய பதில் , புயல் சின்னம் உருவாகும் முன்பே மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.30.11.2017 வானிலை ஆய்வு மையத்தில் புயல் சின்னம் குறித்த தகவல் பெறப்பட்டது. புயல் சின்னம் குறித்த தகவல் பெறப்பட்ட பின்னர் மீனவ மாவட்டங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது . அரசின் நடவடிக்கையின் மூலம் பல்வேறு மாநிலங்களில் கரை சேர்ந்த 1,124 […]
தமிழகத்தில் இன்றுடன் ஆறாவது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து இதன் வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என உயர் நீதி மன்ற நீதிபதி தெரிவித்துள்ளார் . போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்த காரணம்பற்றி நீதிபதி மணிகுமாரிடம் முறையிட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை அரசு தராததால் பிரச்சனை நீடித்து வருகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி உத்தரவின்படி நீதிபதிகள் மணிகுமார், கோவிந்தராஜ் அமர்வு […]
சென்னையில் கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு புதிய கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். அதன் முதல்கட்டமாக ரசிகர் மன்றங்களை இணைக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்காக தனி இணையதளத்தையும் தொடங்கியுள் ளார் இந்நிலையில், மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவில் கலந்துகொண்ட ரஜினி, ‘‘என்னை வாழ வைத்த தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதே என் […]
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் -பாளையத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள பிரஸ்காலனி பகுதியில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்திய அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து அச்சக ஊழியர்கள், மற்றும் அரசியல் கட்சியினர் கடந்த 6 மாதங்களாக பல்வேறு கட்ட போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அச்சகத்தை மூட எதிர்ப்புத் தெரிவித்து, பெரியநாயக்கன்பாளையம், பிரிக்கால் பிரிவு, வண்ணாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நகரில் உள்ள […]
தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகர்வதால் அடுத்து வரும் இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மற்றும் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோ […]
முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேரந்த 15 மீனவர்கள் ஈரான் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த மீனவர்கள் ஈரானில் உள்ள கீஸ் தீவில் தங்களின் படகுகளிலேயே கடந்த இரண்டு மாதமாகச் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு ஈரானிய நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த மீனவர்களில் கன்னியாகுமரியைச் சேர்ந்த வினிஸ்டன் சர்க்கரை நோயாளி என்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிரோஸ்டின் இருதயக் கோளாறு உடையவர் என்றும் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை […]
தமிழகம் முழுவதும் இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், ஊதிய உயர்வு தொடர்பாக தமிழக அரசு இதற்கு முன்பு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, தொழிற்சங்கங்களை அழைத்து மீண்டும் பேச வேண்டும் என கேட்டுக் கொண்டார். போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், அந்த நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றார். தமிழகம் முழுவதும், […]