குரங்கணி காட்டுத்தீக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மலையேற்றப் பயிற்சிக்கு செல்வோர் அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோடைக்காலத்தில் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதால், மலையேற அனுமதிப்பதில்லை அரசின் அனுமதி பெற்றுச் சென்றால் தான் பாதுகாப்பு அளிக்க வசதி செய்யப்படும் என்று கூறினார். குரங்கிணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூற மாலையில் மதுரை செல்கிறேன் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். #TheniForestFire #Theni #TheniFire
திருமணமாகி 100 நாட்களில் ஈரோட்டை சேர்ந்த திவ்யா, விவேக் தம்பதியர் குரங்கணியில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர் குரங்கணி மலை பகுதியில் பலியாகிவிட்டனர். அவர்களுள் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் என 36 பேர் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி […]
குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காகவும், சுற்றுலாவிற்காகவும் சென்ற ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக்கள் அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் குரங்கணி காட்டுத்தீயில் இறந்தவர்களில் 5 பேரின் உடல்கள் ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்டன. குரங்கணியில் இருந்து 2 வது உடல்களுடன் ஹெலிகாப்டர் தேனி அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் காட்டுத்தீ ஏற்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, திருப்பூரில் இருந்து 12 பேரும், சென்னையில் இருந்து 24 பேரும் டிரெக்கிங் சென்றிருந்தனர். குரங்கணி மலையில் காட்டுத்தீயில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க 6 மருத்துவ குழுக்கள், 13 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் உள்ளன என தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. இது சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியாகும். குரங்கணியில் […]
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மீட்கப்பட்ட 27 பேரில் 10 பேருக்கு எந்த காயமும் இல்லை.மேலும் காயமடைந்த 17 பேருக்கு 40% க்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளது; பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். இதற்கு முன் , 8 பேர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது. 17 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குரங்கணி காட்டுத் தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 21 பேர் தேனி குரங்கணி தீ விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவர்களில்,சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பூஜா குப்தா, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சகானா, சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மோனிஷா,சென்னை முடிச்சூரைச் சேர்ந்த விஜயலட்சுமி மற்றும் வட பழனியைச் சேர்ந்த நிவேதா ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த அனுநித்யா 30 சதவிகித தீ […]
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி படுகாயம் அடைந்த அனுவித்யா, கண்ணன், நிஷா, தேவி, திவ்யா, கேரளாவை சேர்ந்த மீனா, ஜெயஸ்ரீக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையை சேர்ந்த சுவேதா, பார்கவி, நெல்லையை சேர்ந்த நிவ்யரெஹ்ருதிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில், 10 பேர் நலமாக உள்ளனர் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தகவல். காயமடைந்த 17 பேரில், 5 பேர் தேனியிலும், 8 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதி செய்திருப்பதாக […]
சென்னையைச் சேர்ந்த பெண் ஐடி ஊழியர்களும் கொழுக்கு மலையில் காட்டுத் தீயில் சிக்கி இருப்பதாக தெரியவந்தது. சென்னையைச் சேர்ந்த மினார் ஜார்ஜ்,பூஜா, நிஷா, நிவேதா, திவ்யா, சிரதா ஸ்ரீராமன், அனு வித்யா, ஹேமலதா, புனிதா, சாய் வசுமதி, சுபா, தேவி, இலக்கியா சந்திரன், சுகானா, அகிலா, ஸ்வேதா, ஜெயஸ்ரீ, லேகா, நிவ்யா பிரக்குருதி, அருண், விபின் ஆகியோர் நேற்று முன்தினம் கொழுக்கு மலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். இவர்கள் நேற்று மாலை அடிவாரத்துக்கு வந்திருக்க வேண்டும். நேற்று இரவு […]
21 பேர் தேனி குரங்கணி தீ விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவர்களில்,சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பூஜா குப்தா, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சகானா, சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மோனிஷா,சென்னை முடிச்சூரைச் சேர்ந்த விஜயலட்சுமி மற்றும் வட பழனியைச் சேர்ந்த நிவேதா ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த அனுநித்யா 30 சதவிகித தீ காயங்களுடனும், போரூரைச் சேர்ந்த இலக்கியா 40 சதவிகித தீ காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் […]
9 பேர் தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.அதில் சென்னையை சேர்ந்த ஐந்து பேர், கோவையை சேர்ந்த மூன்று பேர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழப்பு எனத் தகவல். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பிரேமலதா விஜயகாந்த், தேனி மாவட்டம் குரங்கணி காட்டு தீயில் சிக்கி தவிக்கும் மாணவிகளை போர் கால அடிப்படையில் மத்திய- மாநில அரசு அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலைக்குள் சிக்கி இருக்கும் 40 மாணவிகளை காப்பாற்றி அவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நேற்று தேனி மாவட்டம் அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 25 பேர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே குரங்கணி மலைப்பகுதி உள்ளது. கடந்த ஒரு வார காலமாக அங்கு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதை அறியாது, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளும், சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும், இருபிரிவுகளாக குரங்கணிக்குச் சென்று அங்கிருந்து கொழுக்கு மலைக்குச் சென்றனர். சனிக்கிழமை இரவு குரங்கணியில் தனியார் ரிசார்டுகளில் தங்கி […]
வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், மன்னார் வளைகுடா முதல் குமரி வரையிலான மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்னிலங்கையை ஒட்டி நிலவுகிறது. இது 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடலை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் வலுவான காற்றழுத்த பகுதியாக உருமாறும் என்றும், அதற்குப் பிந்தைய 24 மணி நேத்தில் […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என உறுதியளித்திருக்கிறார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரங்கணி கொழுக்கு மலைப்பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என கூறியிருக்கிறார். தேனியை ஒட்டியுள்ள மாவட்டங்களிலிருந்து, தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் தேவையான உபகரணங்களுடன் நிகழ்விடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் இருந்து, தமிழ்நாடு அரசு ஹெலிகாப்டர்களை கோரியுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். இதனிடையே, […]
8 பேர் தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே குரங்கணி மலைப்பகுதி உள்ளது. கடந்த ஒரு வார காலமாக அங்கு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதை அறியாது, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளும், சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும், இருபிரிவுகளாக குரங்கணிக்குச் சென்று அங்கிருந்து கொழுக்கு மலைக்குச் சென்றனர். சனிக்கிழமை இரவு […]
கமாண்டோ வீரர்கள், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்டு வருவதற்காக, வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி என்ற இடத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் கொழுக்கு மலைப்பகுதி இது சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியாகும். போடியில் இருந்து குரங்கணிக்கு வாகனங்களில் சென்று, பின்னர் டாப் ஸ்டேசனுக்கு மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக, சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இரண்டு குழுக்களாக 36 பேர் […]
45 அரசு பேருந்துகள், 7 அரசு வாகனங்களை இன்ஸ்பெக்டர் காமராஜைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தற்போது புதிதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள சூலமங்களத்தைச் சேர்ந்தவர் ராஜா(37). இவர் கடந்த 7-ம் தேதி இரவு, 3 மாத கர்ப்பிணியான தனது மனைவி உஷாவுடன் (34) மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்காக, துவாக்குடி அருகே போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை […]
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக என்ற பெயர், கொடி, சின்னம் ஆகியவை எங்கு இருக்கிறதோ அங்குதான் உண்மையான தொண்டர்கள் இருப்பார்கள் என்று கூறினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
விமானப்படை தேனி மாவட்டம் போடி அருகே காட்டுத் தீயில் சிக்கியுள்ள விரைகிறது. தமிழக முதலமைச்சரின் கோரிக்கையின்பேரில் விமானப்படையை மீட்பு பணிக்கு அனுப்ப பாதுகாப்பு துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். குரங்கணி வனப்பகுதியில் கோவை, ஈரோடை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காட்டுத் தீயில் சிக்கித்தவிப்பு.ஏற்கனவே வனத்துறை, மாவட்ட ஆட்சியர், தீயணைப்பு துறை சம்பவ இடத்தில் மீட்பு பணி ஈடுபட்டுவருகின்றனர்.மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற மாணவி ஒருவர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழப்பு எனத் தகவல். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தேனி மாவட்டம் போடி குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் 40 மாணவிகள் சிக்கியுள்ளதாக தகவல். மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஊர்மக்கள், வனக்காவலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளன எனத்தகவல். மேலும் போடி அருகே குரங்கணியில் 40 கல்லூரி மாணவர்கள் காட்டுத்தீயில் சிக்கிய பகுதிக்கு ஆட்சியர் விரைந்தார் எனத் தகவல். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.