சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் , தேனி குரங்கணி தீ விபத்து சம்பவம் தொடர்பாக, பாலவாக்கத்தில் உள்ள சென்னை ட்ரெக்கிங் கிளப் அலுவலகத்தில், ஆய்வு மேற்கொண்டார். தேனி குரங்கணி மலைக்கு, ஈரோடு மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள், இரு பிரிவாக பயணித்துள்ளனர். இவர்களில் சென்னையிலிருந்து 27 பேரை, பாலவாக்கத்தில் உள்ள சென்னை ட்ரெக்கிங் கிளப் நிறுவனம் அழைத்துச் சென்றது. குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், சென்னை ட்ரெக்கிங் கிளப் நிறுவனத்தின் உரிமையாளர் பீட்டர் மற்றும் […]
தேர்வறை கண்காணிப்பாளர் தேனி மாவட்டம் கம்பத்தில் பிளஸ்2 தேர்வெழுதிய மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கணிதத் தேர்வெழுதிக் கொண்டிருந்தனர். இதில் ஒரு அறையில் இராயப்பன்பட்டியைச் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ஜெயராஜ், கண்காணிப்பாளராக இருந்தார். தேர்வின் போது மது போதையில் இருந்த ஜெயராஜ் மாணவிகளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. […]
மதுரையில் இருந்து கோவை தனியார் மருத்துவமனைக்கு ,தேனி குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். 50 சதவீத தீக்காயமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், கோவை கங்கா மருத்துவமனைக்கு ஜெயஸ்ரீ மாற்றப்பட்டார். கங்கா மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து கோவைக்கு 40 நிமிடங்களில் அவர் அழைத்து வரப்பட்டார். தோல் சிகிச்சை சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள ஜெயஸ்ரீக்கு, தனி மருத்துவக்குழுவினர் […]
பிரதமர் நரேந்திர மோடி தேனி குரங்கணி மலை காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியுள்ளார். குரங்கணி காட்டுத்தீயில் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். விமானப்படை, கமாண்டோ வீரர்கள் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகத்தின் துரித செயல்பாட்டையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் தீவிபத்தில் பலியானவர்களில் சுபா என்ற பெண் பணியாற்றி வந்தது தெரியவந்தது.கடலூர் மாவட்டம் திட்டக்குடி சுபாவின் சொந்த ஊர் ஆகும். சுபா உயிரிழந்தது பற்றிய தகவல் அவரது குடும்பத்தினருக்கு இன்று காலையில்தான் தெரிய வந்தது.இதனைக் கேட்டதும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறினர். சுபாவின் மரணம் தொடர்பாக அவரது சகோதரர் கமல்ராஜை கேட்டபோது எதுவும் பேச முடியாமல் தவித்தார். பின்னர் அழுதபடியே அவர் கூறும்போது, எப்படி யார் மூலமாக எனது சகோதரி சென்றார் […]
நாடு முழுவதும் தேனி அருகே குரங்கணி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயர்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி,குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், காட்டுத்தீயால் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன் என்று அவர் ட்வீட் செய்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வாகன சோதனையின் போது திருச்சியில் உயிரிழந்த பெண் உஷா கர்ப்பிணி அல்ல என பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சூரமங்கலத்தைச் சேர்ந்த ராஜா தனது மனைவி உஷாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, வாகன தணிக்கைக்கு நிற்காமல் சென்றதால் காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று உதைத்ததில் கீழே விழுந்து உஷா உயிரிழந்தார். உஷாவின் உடலை மடியில் வைத்துக் கொண்டு கதறியழுத அவரது கணவர் ராஜா, தனது மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறினார். […]
மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற 10 பேர் தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயின் போது, சிதறி ஓடியதால் பள்ளத்தில் விழுந்தவர்கள் நெருப்பில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த மலையேற்ற ஆர்வலர்கள் கிளப் ஒன்று, மலையேற்றப் பயிற்சிக்காக 39 பேர் கொண்ட குழுவை தேனி மாவட்டம் குரங்கணி பகுதிக்கு அழைத்துச் சென்றது. அவர்களில், 27 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 12 பேர் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். 39 பேரில் 3 பேர் […]
தேனி குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்தும் 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 40 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர். இவர்கள் இன்று திங்கள்கிழமை திரும்ப […]
துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் குறித்து தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். குரங்கணி வனப்பகுதியில் 2,000 அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதியில் நேற்று காட்டுத்தீ பற்றியது. இந்தக் காட்டுத்தீயில் சுற்றுலாச் சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்கப் போர்க் கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றது. காட்டுத்தீயில் சிக்கி, சென்னையைச் சேர்ந்த 6 […]
10 பேர் தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலையில் ஏற்பட்ட தீயின்போது, டிரக்கிங் சென்ற உயிரிழந்துள்ள நிலையில் , அந்த ட்ரெக்கிங் குழுவை அனுப்பிவைத்த பீட்டர் தலைமறைவாகியுளார். பீட்டர், சென்னை டிரக்கிங் கிளப் என்ற பெயரில், மலையேற்றப் பயிற்சி அளித்து வந்ததார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு மென்பொருள் நிறுவன ஊழியர்கள் 27 பேரை, கொழுக்குமலைப் பகுதிக்கு டிரக்கிங் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பி வைத்த தனியார் நிறுவன ஊழியர்கள் தான் தற்போது காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டவர்கள்.இரவோடு இரவாக […]
தீயில் சிக்கியவர்களையும், தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களையும், குரங்கணி வனப்பகுதியில் துரிதமாக செயல்பட்டு அதிகாரிகள் மீட்டுள்ளனர். தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் டிரக்கிங் சென்றபோது, குரங்கணி வனப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது. கொழுக்குமலையில் இருந்து மீண்டும் குரங்கணிக்கு அவர்கள் திரும்பியபோது, காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதை பார்த்து, அதனுடன் செல்போன்களில் செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது, அவர்கள் எதிர்பார்க்காத நிலையில், காட்டுத்தீ மளமளவென அவர்களை சூழ்ந்துள்ளது. அப்போது, அலறியடித்து ஓடிய அவர்கள், பள்ளங்களில் […]
குரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு. சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா மருத்துவமனையில் உயிரிழந்தார். ஏற்கனவே தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற 9 பேர் காட்டுத்தீயின் போது, சிதறி ஓடியதால் பள்ளத்தில் விழுந்தவர்கள் நெருப்பில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்க் தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக் கடலில் கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ளதால் கடலில் 50 முதல் 60 கிமீ வேகத்தில் சூறைக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. ஆனால் ஆழ்கடல் மீன் பிடிப்பிற்காக சில நாட்களுக்கு முன் கடலுக்குள் சென்ற மீனவர்களுக்கு […]
ஒன்பது பேர் தேனி மலைப்பகுதிக்கு ட்ரக்கிங் சென்று உயிரிழந்துள்ள நிலையில், டிரெக்கிங் என்றால் என்ன, இளைஞர்களும், இளம் பெண்களும் டிரெக்கிங் செல்ல ஆர்வமாக இருப்பது ஏன் என்பதை பார்க்கலாம். டரக்கிங் என்பது மெதுவாக,கால்நடையாக, கடினமான வழிகளில்,குறிப்பாக மலைப் பகுதிகளில் பயணம் செய்வதைக் குறிப்பதாகும். ட்ரக்கிங் என்பது மிகவும் கடினமான, சவாலான செயல்பாடாகும். கடினமான, மலைப் பகுதிகளில் செல்ல வேண்டும் என்பதால் ட்ரக்கிங் செல்வதற்கு உடல் வலுவும், தாக்குப்பிடிக்கும் திறனும் வேண்டும். அதேநேரத்தில், குறிப்பிட்ட பகுதிகளை தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன், இயற்கைக் […]
அதிகாரப்பூர்வமாக, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சார்பாக சென்னையில் முதற்கட்ட வழித்தடம் 2 வழித்தடங்களுடன் 54 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே இரண்டாம் கட்டமாக சென்னையில் 3 வழித்தடங்களில் 104 ரயில் நிலையங்கள் அமையவுள்ளது. இதற்கான 108 கிமீ தூரத்திற்கான ரயில் திட்ட வரைபடத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் உயர்மட்ட, சுரங்க வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 85 ஆயிரம் […]
21 பேர் தேனி குரங்கணி தீ விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட விவரங்கள் வெளியாகின.தற்போது மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் கைது செய்யபட்டுள்ளார். இந்நிலையில் அங்கு சென்ற சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பூஜா குப்தா, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சகானா, சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மோனிஷா,சென்னை முடிச்சூரைச் சேர்ந்த விஜயலட்சுமி மற்றும் வட பழனியைச் சேர்ந்த நிவேதா ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த அனுநித்யா 30 சதவிகித தீ காயங்களுடனும், போரூரைச் சேர்ந்த இலக்கியா […]
9 பேர் தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்தவர்களில் தற்போது ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மருத்துவக்கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். இதனிடையே, குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்தவர்களின் ஆண்கள் 3 பேர், பெண்கள் 5 பேர் என மொத்தம் 7 பேர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அனுவித்யா 90 சதவீத தீக்காயத்துடனும், கண்ணன், ஸ்வேதா, […]
இலங்கை குமரிக்கடல் மாலத்தீவு பகுதிகளுக்கு அருகே வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் மீனவர்கள் லட்சத்தீவு பகுதிகளில் 15 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. தென் தமிழகப்பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
9 பேர் தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,உயிரிழந்திருக்கின்றனர்.மேலும் 15 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சென்னையை சேர்ந்த ஐந்து பேர், கோவையை சேர்ந்த மூன்று பேர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரும் உயிரிளந்துள்ளனர். இந்நிலையில் தேனி குரங்கணி விபத்து மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகாப்டர் எரிபொருள் இல்லாமல் பாதியில் தரை இறங்கி இருக்கிறது. இதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.