வக்கீலை தாக்கி செல்பி எடுத்த சப்-இன்ஸ்பெக்டரின் செயலை மன்னிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் ஆஜராகி ஒரு கோரிக்கை முன்வைத்தார். அவர், ‘தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் போலீஸ் நிலையத்துக்கு வக்கீல் பெரியசாமி என்பவர் தன்னுடைய கட்சிக்காரருடன் புகார் செய்ய சென்றுள்ளார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை நொளம்பூரில் 28 கோடியே 35 லட்சம் ரூபாயில் பதாளச் சாக்கடைத் திட்டம் 18 கோடி ரூபாயில் குடிநீர் திட்டம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மேலும் சென்னை, தேனி, பெரியகுளம், கம்பம், உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 189 கோடியே 81 லட்சம் ரூபாயில் குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், சமுதாய நலக்கூடம் வகுப்பறைக் கட்டிடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்ட ஆம்புலன்ஸ் குழுவில் இருந்த இரண்டு இளைஞர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்க மீட்புக் குழுவினருடன், மலைவாழ் கிராம மக்களும் பொதுமக்களும் அதிக ஒத்துழைப்பு அளித்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் 3 பேருக்கு மட்டுமே […]
முறைதவறிய உறவை கண்டித்த கணவனை காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே அடியாட்களை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கம் வ.வு.சி.நகரைச் சேர்ந்த லோடு ஆட்டோ உரிமையாளரான செல்வம், நேற்று காலை பூந்தண்டலம் கிளையாறு அருகே வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கொலை குறித்து போலீசார் நடத்தி விசாரணையில், செல்வத்தின் மனைவியான சந்திரமதி, தனது கணவர் செல்வத்தை ஆட்களை வைத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து சந்திரமதி, […]
தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 33 பேர் கொண்ட உயர்மட்ட மருத்துவக் குழுவினர் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாக, தெரிவித்தார். தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி, அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாவுக்காகவும் சென்ற 10 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் இன்று (செவ்வாய் கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், […]
ஆந்திர மாநிலத்தின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. ராமுலு என்பவரை தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தருக்கான தேடுதல் குழுவின் உறுப்பினராக நியமனம் செய்துள்ளார். முன்னாள் நீதிபதி ராமுலு அவர்கள் ஆந்திர பிரதேச உயர்நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். தமிழக ஆளுநரால் தேர்வு செய்யப்பட்ட அந்த தேர்வு குழுவில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், முனைவர் ஊ.தங்கமுத்து, பல்கலைக்கழக பேரவை பிரதிநிதியாகவும், திரு.எஸ்.பி.இளங்கோவன், இ.ஆ.ப., […]
அமைச்சர் ஜெயக்குமார், கடலுக்குச் சென்ற மீனவர்களை காக்க அவர்களை ரேடியோ, மற்றும் விமானங்கள் மூலம் எச்சரிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மீனவர் அமைப்புகள், கடற்படை, கடலோரக் காவல் படை உள்ளிட்டோர் மூலம் மீனவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பத்து பேர் உயிரிழக்க காரணம், குரங்கணி மலையில் டிரக்கிங் செல்ல அனுமதிக்கப்படாத கொழுக்கு மலைக்கு சென்றதே என்கிற தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் இருந்து டாப் ஸ்லிப் எனும் பகுதிக்கு டிரெக்கிங் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நபர் ஒருவருக்கு 200 ரூபாய் வசூலித்துக் கொள்ள குரங்கணி பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஈரோட்டில் இருந்து வந்த 12 பேர் தலா 200 ரூபாய் செலுத்தி சனிக்கிழமை […]
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குரங்கணி தீ விபத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் நேற்று வார விடுமுறையை கழிப்பதற்காக சென்ற சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந்த 39 பெரும் தீயில் சிக்கி படுகாயமடைந்தனர். இதில் 12 பேர் உயிரிழந்ததோடு, சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெரும் வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]
15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் சட்டக் கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பிரச்சனையிலும் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது. போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு .
புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் சுமார் 4,600க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. தென்மேற்கு வங்க கடலில், இலங்கையின் தெற்கு பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் 3 […]
தேனி குரங்கணி காட்டுத்தீயில் மீட்கப்பட்ட ஐடி பெண் ஊழியர், சில நிமிடங்களில் தீ தங்களை சூழ்ந்து கொண்டதாக கூறியுள்ளார். காட்டுத் தீயில் சென்னையை அடுத்த முடிச்சூரை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். சென்னை திரும்பிய அவர், காட்டுத் தீ பரவிய தினத்தன்று மதியமே தாங்கள் புகையை பார்த்ததாக கூறினார். பின்னர் தங்களுக்கு அருகே தீ ஏற்பட்டதை அறிந்தவுடன், உடனடியாக கீழே இறங்கியதாகவும், கீழ்ப்பகுதியிலும் தீ பரவியிருந்ததால் சிக்கி தவித்ததாக தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இராமேஸ்வரத்தில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. எனவே மறுஅறிவிப்பு வரும் வரை இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லக்கூடாது என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் துறைமுகங்களில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 5 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ள நிலையில் […]
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாகக் கூறி, சென்னை செங்குன்றம் அருகே டாஸ்மாக் கடையில் , மேற்பார்வையாளரின் மண்டையை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சோழவரம் – அம்பேத்கர் நகரில் உள்ள அந்த டாஸ்மாக் கடையில், மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாக அவ்வப்போது புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு மது வாங்க வந்த ஒருவரிடம், டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் ராமன் கூடுதலாகப் பணம் கேட்டதாகவும், அதற்கு அந்த நபர் மறுத்ததால் மேற்பார்வையாளர் தகாத வார்த்தைகளால் […]
வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள நகைக்கடையில் சோதனை நடத்தினர்.அசோக் ஜூவல்லர்ஸ் என்ற சூளைமேட்டில் உள்ள நகைக்கடைக்கு சவுகார்பேட்டையிலும் கிளை உள்ளது. இந்த நகைக்கடையின் உரிமையாளர் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரையடுத்து நேற்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சூளைமேட்டில் உள்ள கடையில் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை நடைபெற்ற இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உயிரிழந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களின் உடல் சொந்த ஊர்களுக்கு எடுத்து வரப்பட்டன.தேனி குரங்கணி தீ விபத்தில் கவுந்தப்பாடி அருகே மகாத்மா நகரைச் சேர்ந்த விவேக், அவரின் நண்பர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஈரோடு மாவட்டம் வட்டக்கல்வலசை சேர்ந்த திவ்யா ஆகியோர் உயிரிழந்தவர்கள். இவர்களின் உடல்கள் நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு எடுத்து வரப்பட்டன. விவேக் மற்றும் தமிழ்ச்செல்வன் உடல்களுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். உறவினர்களின் அஞ்சலிக்கு பிறகு உடல்கள் இன்று அடக்கம் செய்யப்படுகின்றன. […]
அரசு குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தேனி மாவட்டம், போடி வட்டம், குரங்கணி மலைப்பகுதியில், 11-ந் தேதியன்று கொழுக்குமலை கிராமத்தில் இருந்து குரங்கணி கிராமம் நோக்கி கீழிறங்கிக்கொண்டிருந்த, மலையேற்றம் சென்ற 36 நபர்கள் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக்கொண்டனர். இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். இந்த கொடிய விபத்து பற்றிய செய்தி அறிந்தவுடன், மலைப்பகுதியில் […]
வானிலை மையம், குமரிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், கன்னியாகுமரி, மன்னார் வளைகுடா, தென் கேரள கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை, மாலத்தீவுகள் அருகே நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 40ல் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கன்னியாகுமரி , மன்னார் வளைகுடா, தெற்கு கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் […]
மனைவியே காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே முறைதவறிய உறவை கண்டித்த கணவனை அடியாட்களை வைத்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. கல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கம் வ.வு.சி.நகரைச் சேர்ந்த செல்வம் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு சந்திரமதி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். செல்வம் திங்கட்கிழமை காலை பூந்தண்டலம் கிளையாறு அருகே வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். செல்வம் உடலை சதுரங்கப்பட்டினம் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். செல்வத்தின் செல்போனுக்கு வந்த அழைப்புகளையும், அவர் உயிரிழந்து […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , குரங்கணியில் தீயைக் அணைக்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை எனவும் நீயூட்ரினோ ஆய்வுக்காக இவர்களே தீயை வைத்திருப்பார்கள் என்று தங்களுக்கு சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலைப் பாதைகளில் சோதனைச் சாவடி இருக்கும் போது இவர்கள் எப்படி போனார்கள் என்றும் காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் என்ன செய்தார்கள், குறிப்பாக இவ்வளவு காலம் இல்லாத பெரும் தீ எப்படி உருவானது என கேள்வி எழுப்பினார். […]