சமூக வலைத்தளங்களில்,நாட்டையே உலுக்கிய குரங்கணி தீவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று , உயிரிழந்த 11 பேருக்கு இரங்கல் கூட தெரிவிக்க மனமில்லாத ரஜினியால் தமிழத்தில் என்ன மாற்றம் கொண்டு வந்துவிட முடியும் என விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன. தேனி மாவட்டம், குரங்கணி வனப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியை திவ்யா (25) செவ்வாய்க்கிழமை இறந்தார். இதையடுத்து, இந்த […]
இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுக்குறையும் என்றும், இதனால் தென்மாவட்டங்களில் பெய்துவரும் மழையும் குறையும் என தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் நேற்று, கன்னியாகுமரி மற்றும் மினிக்காய் தீவுகள் அருகே நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று தென் கிழக்கு அரபிக்கடல்,மினிக்காய் தீவில் இருந்து தென் கிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் இன்று பொதுத்தேர்வு இல்லாத பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த விடுமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் வழக்கம்போல் தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை உயர் நீதிமன்றம், வன்முறையைத் தூண்டிவிட்டு, பொது அமைதியை சிதைக்கும் வகையில் செயல்படுவதாக எச்.ராஜாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை கோரி புகார் தாரர் தொடர்ந்த வழக்கில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா முக நூலில் பதிவிட்டார். இதைத்தொடர்ந்து, அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அந்தப் பதிவை நீக்கினார். ஆனாலும் பதற்றமான சூழ்நிலை […]
தூத்துக்குடி அதிமுக எம்.பி ஜெயசிங் நட்டர்ஜி ஸ்டெர்லைட் ஆலையை, எவ்வித தாமதமும் இன்றி, உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார். மக்களவையில் பேசிய அவர்,தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூட ஏற்கனவே, உத்தரவிட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால், போபால் விஷவாயு கசிவு போன்ற சம்பவம், தூத்துக்குடியிலும் நிகழக்கூடும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். எந்தவித பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாமல், லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு ஸ்டெர்லைட் ஆலையை விளையாடிக் கொண்டிருப்பதாகவும், எனவே, […]
மலையேற்றத்திற்கு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஏற்காட்டிலும் மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 60 அடி பாலம் பகுதியில் இருந்து, 6 கிலோ மீட்டர் தூரம் மலை ஏறி, ஏற்காட்டிற்கு செல்வது வழக்கம். இனி இந்த பாதையில் மலையேறுபவர்கள் செல்ல முடியாது. வனத்துறை சோதனை சாவடி அருகில் […]
முதல்வர் பழனிச்சாமி இனி அனுமதி பெற்றுதான் மலை மேல் ஏற முடியும். குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீ குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சேலத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் சிக்கி கொண்டனர். 10 பேர் காயமின்றி வீடு திரும்பும் நிலையில் உள்ளனர். 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் 11 பேர், தேனியில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ ஏற்பட்டதன் காரணம் குறித்தும் […]
சென்னை கலைவாணர் அரங்கத்தில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அனைத்து மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக்கூட்டம் மற்றும் புத்தக்கப் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் புத்தகத்தின் பயிற்சி வகுப்பு மற்றும் அதன் பயன் பற்றியும் கூறினார்.
சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று முன்தினம் பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்தன. இந்த சம்பவத்தில் ஆண் மற்றும் பெண் என […]
முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் தமிழ்நாட்டின் மீன்வளம் & நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசிற்கும், ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு ஏற்பாடு பரிமாறப்பட்டது. இந்த ஒப்பந்தம் தமிழ்நாடு மீன்வளம் & நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்படும் என்று அவர் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் , மக்கள் நீதி மய்யத்தில் சேர யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் இணையத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே மெயில் வரும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மிஸ்ட் கால் கொடுத்து கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்தவர்கள் பாஜகவினர். இந்த வரலாறு ஊரறியும். இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் […]
மலையேற்றத்துக்கு அழைத்துச் சென்ற சென்னை டிரெக்கிங் கிளப் விவசாயிகள் புற்களை எரித்ததே குரங்கணி மலையில் காட்டுத்தீ ஏற்பட காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். 39 பேர் கொண்ட குழுவில் 3 பேர் நீங்கலாக 36 பேர் வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றம் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். காட்டுத் தீ விபத்தில் சிக்கி […]
சென்னையைச் சேர்ந்த 27 பேர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த 12 பேர், தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கினார்கள். இவர்களில் 10 பேர் தீயில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக வனக்காப்பளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இதுதொடரப்பாக விபத்தில் சிக்கியவர்களை மலையேற்றப் பயிற்சிக்கு அழைத்து சென்ற சென்னையை சேர்ந்த டிரக்கிங் கிளப் நிர்வாகி […]
ஐ.எஃப்.எஸ். அதிகாரி முருகானந்தம் தேனி மாவட்டம் குரங்கணியில் வனத்தீ ஏற்பட்டது குறித்து ஆய்வு நடத்தினார். மத்திய அரசின் சார்பில் டெல்லியில் இருந்து குரங்கணி வந்த வனத்துறை உதவி ஐ.ஜி. முருகானந்தம், குரங்கணி உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனுடன் ஆய்வு மேற்கொண்டார். தீவிபத்துக்கான காரணம், டிரெக்கிங் வசதி உள்ளதா? எப்படி அனுமதி வழங்கப்படுகிறது? என்பது தொடர்பாக ஆய்வு நடைபெற்றது. அப்போது மழை பெய்ய தொடங்கியதால் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தீவிபத்து ஏற்பட்ட காரணத்தால் மே மாதம் வரை டிரெக்கிங் செல்ல […]
தமிழக அரசக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் குரங்கணி விபத்தைப் பாடமாகக் கொண்டு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளார். அனைத்து மையங்களிலும் தீக்காய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் வலியுறுத்தினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெலிகாப்டருடன் குரங்கணி தீ விபத்து மீட்பு பணிகளுக்காக , அங்கிருந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் செல்ஃபி எடுத்துக் கொண்ட விவகாரம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மலையேற்றப் பயிற்சியில் தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் அருகே உள்ள குரங்கணி வனப் பகுதியில் ஈடுபடச் சென்ற 36 பேர், ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகளுக்காக இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் […]
வக்கீலை தாக்கி செல்பி எடுத்த சப்-இன்ஸ்பெக்டரின் செயலை மன்னிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் ஆஜராகி ஒரு கோரிக்கை முன்வைத்தார். அவர், ‘தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் போலீஸ் நிலையத்துக்கு வக்கீல் பெரியசாமி என்பவர் தன்னுடைய கட்சிக்காரருடன் புகார் செய்ய சென்றுள்ளார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை நொளம்பூரில் 28 கோடியே 35 லட்சம் ரூபாயில் பதாளச் சாக்கடைத் திட்டம் 18 கோடி ரூபாயில் குடிநீர் திட்டம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மேலும் சென்னை, தேனி, பெரியகுளம், கம்பம், உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 189 கோடியே 81 லட்சம் ரூபாயில் குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், சமுதாய நலக்கூடம் வகுப்பறைக் கட்டிடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]