தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சார்பில் கீழ்கண்ட துறைகளுக்கான நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ₹750 கோடி ஒதுக்கீடு மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சானிட்டரி […]
பட்ஜெட்டில் மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா திண்டிவனம் அருகே பெலாக்குப்பத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்றும், 10 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது வேளாண் பொருட்களின் மதிப்பைக் கூட்டி, சேதங்களைக் குறைக்க வலுவான – திறன் மிக்க உணவு பதப்படுத்தும் தொழில் மையங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார். திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பத்தில் 450 ஏக்கரில் மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து […]
துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 4000 மதிப்பில் அம்மா – தாய் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தூய்மை தமிழகத்திற்கான இயக்கத்தின் கீழ் 17 மாவட்டங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.4975.52 கோடியில் தனிநபர் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தற்போது 19.42 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன என்றும் அறிவித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு […]
பட்ஜெட்டில் நெல்லை, மதுரை,கன்னியாகுமரி,கோவை மருத்துவக் கல்லூரிகளில் 345 புதிய இடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ,மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்கள் உருவாக்கப்படும் என்றும் ரூ.34 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும் என அறிவித்தார். ரூ. 48 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் தரம் உயர்த்தப்படும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் […]
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் உரையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்து முடிந்ததும் இன்றைய சட்டசபை அலுவல் நிறைவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், சட்டசபை […]
பரவலாக ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. கடும் வறட்சி மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள அப்பகுதியில் பெய்த திடீர் மழை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்று இரவு மழை பெய்துள்ளது. இதனிடையே, அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கு திசையில் நகர்ந்து, நள்ளிரவில் மினிக்காய் […]
தாழ்வு மண்டலமாக வானிலை மாற்றம் காரணமாக அரபிக்கடல் பகுதியில் மினிக்காய் தீவுப்பகுதியில் கன்னியாகுமரி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மாறியது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, பாபநாசம், செங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. பருவமழை இல்லாத காலத்தில் கன மழை பெய்துள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் மணிக்கு […]
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழக மக்களுக்கு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களை கவரும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தொழில்முனைவோருக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு […]
பல பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல்,மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மாலத்தீவை ஒட்டிய பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டத்தின் காரணமாக வரும் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் குமரி மாவட்ட மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் குறிப்பாக மாலத்தீவுக்கு […]
தமிழகச் சட்டமன்றத்தில் நாளை துணை முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் பதவிகளை வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் 2017-2018 நிதி ஆண்டு வருகின்ற மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் 2018 மார்ச் 15-ம் தேதி 2018-2019 நிதி ஆண்டுக்கான தமிழ் நாடு பட்ஜெட்டினை தாக்கல் செய்ய இருக்கிறார். தமிழக பட்ஜெட் 2018-ஐ வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் தாக்கல் செய்யப்படும் என்று மாநில அரசின் பத்திரிக்கை வெளியீட்டில் மார்ச் 7-ம் தேதி குறிப்பிட்டு இருந்தனர். முன்னால் முதலமைச்சர் […]
ஜெயலலிதாவின் மருத்துவர் சிவக்குமார் 2-வது முறையாக ஆஜராகி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் முன்பே ஜெயலலிதாவுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருந்ததாக விளக்கம் அளித்தார். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினரும், மருத்துவருமான சிவக்குமார் இன்று 2-வது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே ஜெயலலிதாவுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருந்ததாகவும், வீட்டில் திடீரென ஜெயலலிதா மயக்கம் அடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தெரிவித்தார். ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு […]
ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ராவை குரங்கணி சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரிக்க நியமித்துள்ள தமிழக அரசு, டிரக்கிங்கை வரைமுறைபடுத்துவது குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைப் பகுதிக்கு டிரக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் மதுரை, சென்னை, கோவை உள்பட பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொழுக்குமலைப் பகுதிக்கு முறையாக அனுமதி பெறாமல், டிரக்கிங் சென்றதே உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது. இதையடுத்து, […]
கலாநிதி, தயாநிதி பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கலாநிதிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முகாந்திரம் இல்லாததால் 7 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வானிலை மையம் அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, கேரளா, மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மினிக்காய் தீவுகளில் இருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருப்பதாக தெரிவித்தார். குறைந்த […]
திருச்சியில் மேகமூட்டத்துடன் வானம் இருந்த நிலையில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. தமிழகத்தில் வெயில் காலம் துவங்கிய நேரத்தில் வழக்கத்துக்கு மாறாக இந்திய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தீவிரம் அடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் முதல் தூறல் மழை பெய்து வருகிறது. நேற்றும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்கிறது.நேற்றுமுன்தினம் திருச்சியில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை தூறல் […]
மாலத்தீவு பகுதியில் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் நேற்று இரவு கனமழை பெய்தது. நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க […]
சமூக வலைத்தளங்களில்,நாட்டையே உலுக்கிய குரங்கணி தீவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று , உயிரிழந்த 11 பேருக்கு இரங்கல் கூட தெரிவிக்க மனமில்லாத ரஜினியால் தமிழத்தில் என்ன மாற்றம் கொண்டு வந்துவிட முடியும் என விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன. தேனி மாவட்டம், குரங்கணி வனப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியை திவ்யா (25) செவ்வாய்க்கிழமை இறந்தார். இதையடுத்து, இந்த […]
இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுக்குறையும் என்றும், இதனால் தென்மாவட்டங்களில் பெய்துவரும் மழையும் குறையும் என தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் நேற்று, கன்னியாகுமரி மற்றும் மினிக்காய் தீவுகள் அருகே நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று தென் கிழக்கு அரபிக்கடல்,மினிக்காய் தீவில் இருந்து தென் கிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.