டி.டி.வி.தினகரன் மதுரை மேலூரில் கடந்த 15-ம் தேதி, `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை அறிவித்தார். 108 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றியபோதும் மேடையில் கட்சியின் நிர்வாகிகள் பேசியபோதும், அந்தக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்தின் முகம் தென்படவில்லை. திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்ட காலத்திலிருந்து மாவட்டம்தோறும் கூட்டங்களை நடத்தி வந்த சம்பத், புதிய கட்சியின் தொடக்க விழாவில் தென்படாமல் இருந்ததை ஆச்சர்யத்துடன் கவனித்தனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் […]
தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்துள்ளது. இந்தியா என்னும் துணைக் கண்டத்தில் தோன்றிய முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாடு மலை வாழ் மக்களை சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது . இவருடைய மரபணு தான் இந்தியாவில் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் தோன்றிய […]
சமாதான முயற்சி என்பதை கடந்து இதுநாள் வரை ஒரு வரி கூட நாம் பதிவிட வில்லை.தேவை கருதி முதல் முறையாக பதிவிடுகிறோம். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமைக்கு பெரும் சவாலாக முன்னிறுத்தப்பட்டுள்ள சந்தையூர் பிரச்சினையில் சுமூக தீர்வுக்கு எடுத்துக்கொண்ட உளப்பூர்வமான முயற்சிகள் இன்னமும் தொடர்கிறது. எத்தனை நாட்கள் எத்தனை மணி நேரம் நேரடியாக, தொலைபேசி வழியாக செலவு செய்தது எல்லாம் விரயமாகிவிடாது. உண்மை அறியும் குழுக்கள் நிறையவே வந்து கொண்டிக்கிறது.அவரவர் அறிந்த உண்மைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மாநில எல்லையும் கடந்து […]
மு.க.ஸ்டாலின் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருக்கும் உணர்வு ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி அளித்த எந்தவொரு உறுதிமொழியையும், வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, எனவே, இந்தக் கூட்டணியில் இருப்பது முறையல்ல என்பதை அவர் ஏற்கனவே உணர்ந்து கொண்ட காரணத்தினால் தான், அவருடைய கட்சியில் சார்பில் மத்திய அமைச்சர்களாக பொறுப்பில் இருந்தவர்கள், பதவி விலகியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும் அறிவித்து இருக்கிறார்கள். இந்த உணர்வு, தமிழ்நாட்டில் […]
அதிமுக மக்களவை உறுப்பினரும் (MP) மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை ஆந்திரா கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும்போது, யாருக்கு ஆதரவு என்பதை அதிமுக முடிவு செய்யும் என தெரிவித்தார். இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் நிலையில், அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு, தெலுங்கு தேசம் கட்சியும், […]
டெலி கம்யூனிகேசனில் ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா, ஜியோ போன்ற நிறுவனங்கள் பிரபலமானதாக உள்ளன. இதில் ஏர்டெல் மற்றும் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்து வந்தது. மேலும் அதிகமான வாடிக்கையாளர்களும் இதன் நெட்வொர்க்கை பயன்படுத்திவந்தனர்.இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஏர்செல் நிறுவனத்தின் டவர் பல இடங்களில் முடங்கியது.ஸ்டேட் பேங் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பங் ஆப் பரோடா போன்ற வங்கிகளில் வாங்கிய 15 […]
வானிலை ஆய்வு மையம் , அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அ.தி.மு.க சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரனின் கட்சிக்கொடிக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் நேற்று(மார்ச்.15) தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை மதுரை மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அதன்படி கட்சியின் பெயர் “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என அறிவிக்கப்பட்டது. கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களும், மத்தியில் ஜெயலலிதாவின் உருவப்படமும் பொருந்திய கட்சியின் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து தினகரனின் கட்சிக்கொடிக்கு எதிராக அ.தி.மு.க சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று […]
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மத்திய அரசு கூறுவதை எல்லாமல் தமிழக அரசு ஏற்காது என கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தங்கள் கட்சி கொள்கைப்படியே அதிமுக செயல்படும் என கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர்வோம் என அவர் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தியான பீடம் ஆசிரமத்தின் சாமியார் நித்யானந்தா தமிழகத்தின் வீரசிவாஜி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா என புகழாரம் சூட்டியுள்ளார். ஹெச்.ராஜா தொடர்ந்து தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசி வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இதனால் அவருக்கு பலர் கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் தான் மனதில் பட்டதை செய்தியாளர்களிடம் பேசியபோதோ, அல்லது தமது டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமோகொட்டி விடுவார். தமிழகத்தில் மதத்தை தூக்கி பிடித்து கொண்டு ஆடுபவர்களில் […]
சென்னை உயர்நீதிமன்றம் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் விதிக்க வகைசெய்யும் அரசாணையை திரும்பப் பெறக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. திருச்சி திருவெறும்பூரில் இருசக்கர வாகனத்தை காவல் அதிகாரி எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்ததை மேற்கோள் காட்டி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உடனடி அபராதம் விதிக்க எந்த சட்டமும் இல்லை என்றும், சட்டப்படி நோட்டீஸ் கொடுத்து பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரலாமே தவிர தன் தரப்பு நியாயத்தை நிரூபிக்க வாய்ப்பளிக்காமல் உடனடி அபராதம் விதிப்பது […]
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் , தினகரன் இயக்கத்தின் கொடியில் எம்ஜிஆர் படம் தவிர்க்கப்பட்டதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. பிறகு பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிகள் இணைந்து, சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கியது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக என்ற கட்சி ஆகியவற்றை பழனிசாமி-பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட […]
பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அரசுக்கு எதிராக தனி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் முடிவெடுத்திருப்பது துணிச்சலான முடிவு எனவும் மாநில உரிமைகளுக்காக இப்படித்தான் போராட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.காங்கிரஸு- பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது தேசிய சக்தியை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்படியான சூழலில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுப்பதால், மத்திய பாஜக அரசில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகியுள்ளது. மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக […]
மத்திய அரசை வலியுறுத்தி அனைத்து கட்சிகளும் சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. சட்டசபை சிறப்பு கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் துவங்கியதும், வாரியம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்து முதல்வர் பழனிசாமி பேசுகையில், கடந்த […]
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் பட்ஜெட் நேற்று காலையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் பட்ஜெட் உரையை வாசித்தார். தமிழக அரசின் பட்ஜெட், தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தைத்தான் பரிசாக தந்திருக்கிறது என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். பட்ஜெட் குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது ,எடப்பாடி பழனிசாமி அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தைத்தான் பரிசாக தந்திருக்கிறது. தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர் பெரும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான தீர்வு எதுவும் இல்லை. […]
சென்னைக்கு ஹைதராபாத்தில் இருந்து வரும் விமானங்களில் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் 2 ஏர் இண்டியா விமானங்கள், 9 இன்டிகோ விமானங்கள், 3 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள், 4 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள், 3 க்ரூ ஜெட் விமானங்கள் உட்பட 20 விமான சேவைகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட ஹைதராபாத் விமான நிலைய அதிகாரிகள், ஹைதரபாத்தில் இருந்து சென்னை வரும் விமானம் […]
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் , ஸ்டாலின் கிழந்த சட்டை அல்லது கருப்பு சட்டையுடன் சட்டசபைக்கு வருவதை பழக்கமாக வைத்துள்ளார் என தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2018-2019 ஆண்டிற்காக பட்ஜெட்டை தாக்கல் செய்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார். அவருடன் திமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் கருப்பு சட்டையில் வந்திருந்தனர். இது […]
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னை- ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீரப்பின் படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பட்ஜெட் தொடரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் […]
தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் டிரக்கிங் சென்றபோது குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று வரை தீ விபத்தில் படுகாயம் அடைந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது கணவர் விபின் சம்பவதன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று வரை பலி எண்ணிக்கை 12யாக இருந்தது. மேலும் தற்போது […]