அமைச்சர் ஜெயக்குமார், நாஞ்சில் சம்பத் வெளியேறியதுபோல் தினகரனுடன் இருக்கும் மற்றவர்களும் வெளியேறுவார்கள் என்று கூறியுள்ளார். சென்னை மந்தை வெளியில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான இறகுப் பந்துப் போட்டியைத் தொடங்கி வைத்த அவர், இறகுப் பந்து விளையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு நிகராக கட் அவுட் வைக்கும் தகுதி தினகரனுக்கு இல்லை என்றும் பில்டப் கொடுப்பவர்கள் நீண்டநாள் நிலைக்க முடியாது என்றும் கூறினார். நாஞ்சில் சம்பத்தை தொடர்ந்து நெல்லிக்காய் உதிர்வதை போல் […]
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கட்சியில் காலியாக உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பதவிகளை உடனே நிரப்பக்கோரி மூத்த நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார். சசிகலா கட்சியை வழிநடத்தி வந்தார். பின்னர், சசிகலா முதல்வர் ஆக ஆசைப்பட்டதால், ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார். இதனால், ஓபிஎஸ் அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வந்தார். இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். […]
இஸ்ரோ இயக்குனர் சிவன் இயற்கை சீற்றங்களின் போது மீனவர்கள் திசை மற்றும் இடம் அறிந்து கரை திரும்ப உதவும் செல்போன் செயலி விரைவில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் சென்ற அவர் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிவன், இஸ்ரோ இயக்குனராக பதவியேற்ற பின்னர் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ஜி சாட் 11 சந்திரயான், போன்ற பெரிய பெரிய திட்டங்கள் காத்திருப்பதால் சுவாமி வழிபாடு நடத்தியதாக தெரிவித்தார். […]
ஆர்கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன், கேசி பழனிச்சாமி இன்னும் என்னை தொடர்பு கொள்ளவில்லை, அவர் தொடர்பு கொள்ளட்டும் பின்னர் பார்க்கலாம் என்று தெரிவித்தார். கடந்த 15-ஆம் தேதி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். அந்த அமைப்பின் கொடியில் ஜெயலலிதா படம் இருப்பதற்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கேசி பழனிச்சாமி தெரிவித்ததால் அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து […]
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தர்மபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் சாய்ந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதுபோல் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்துள்ளது. ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் […]
நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் ஆரம்பித்த ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ அணியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டனர். இரு அணிகளும் கட்சியின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரிய நிலையில் தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கப்பட்டது. அப்போது அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இருஅணிகளின் வேட்பாளர்களும் சுயேச்சை சின்னங்களில் போட்டியிட்ட நிலையில், அத் […]
திருச்சியில் வரும் 24-ஆம் தேதி டிடிவி தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை வாழ வைக்கவும், அதிமுகவை மீட்டெடுக்கின்ற லட்சியத்தோடும், மேலூர் பொதுக் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 24-ஆம் தேதி திருச்சி பெமினா ஹோட்டல் காவிரி அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறும். […]
நடிகர் ரஜினிகாந்த், ரிஷிகேஷ், தர்மசாலா உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமது ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்து உடல் நலப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தர்மசாலாவில் பாபாஜி தியான மையத்தில் இமாச்சலப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் தூமலுடன் காட்சியளித்த ரஜினி அடுத்த சில நாட்களில் தமது ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். விரைவில் ரஜினி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இம்மாத இறுதியில் அவர் […]
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திரைப்படங்களில் தனித்தனியாக செயல்பட்டதுபோல, அரசியலிலும் ரஜினியுடனும்,மற்ற கட்சிகளுடனும் தாம் வேறுபடுவதாக தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள கமல்ஹாசன், ரஜினி குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ஆன்மீகத்தில் நாட்டமுடைய ரஜினி குறிப்பிட்ட ஒரு கொள்கையில் உறுதியாக இருந்தால்,ஆன்மீக அரசியலில் உறுதியாக இருந்தால் தமக்கும் அவருக்கும் வேறுபாடு எழுவதைத் தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அரசியலில் தாங்கள் தனித்தனியாகப் பிரிவதும் தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், தமக்கு எந்த மதமும் கிடையாது […]
கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு தீடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தர்மபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் சாய்ந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளானார்கள்.அதுபோல் ஊத்தங்கரை மற்றும் […]
மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் முதலில் உள்ள திருக்குறளை தவிர, பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலாக உள்ளதாக, தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், அடுத்தாண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு முதலீட்டாளர்களை அழைப்பதற்கு முன், தமிழ்நாட்டில் தொழில் புரிவோருக்கு ஊழலும், தாமதமும் இன்றி உரிமங்கள் வழங்கட்டும் என்று தெரிவித்திருக்கிறார். தன் பகுத்தறிவு ஒருபுறம் இருந்தாலும், இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை பற்றி எந்த அறிவிப்பும் இல்லையே […]
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி வேலைவாய்ப்பு செய்திகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரில் நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் chennaimetrorail.org என்ற இணையதளம் மற்றும் செய்தித்தாள்களில் அவ்வப்போது வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் போலியான வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அவ்வாறு ஏற்படும் தனிநபர் இழப்புகளுக்கு நிறுவனம் […]
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, தாய்மொழிக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், அதன்பிறகே, மற்ற மொழியை கற்று கொள்ளுமாறும் தெரிவித்திருக்கிறார். சென்னை கிண்டியிலுள்ள தனியார் விடுதியில், ஹிந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் 50ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது, வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி குறித்தெல்லாம் இளைய தலைமுறைக்கு தெரிவதில்லை என்றார். தாய் மொழியை ஒருபோதும் […]
முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அதிமுகவில் 19 அமைப்புச் செயலாளாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்துள்ளனர் அதிமுகவில் ஏற்கனவே நிரப்பபட வேண்டிய நிர்வாகிகள் மற்றும் கூடுதல் நிர்வாகிகள் பட்டியலை அதிமுக வழி நடத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அறிவித்துள்ளனர் அதன்படி பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், சீனிவாசன், செங்கோட்டையன், ராஜகண்ணப்பன், நத்தம் விஸ்வநாதன், சி.வி,சண்முகம்,மைத்ரேயன், ஜெயக்குமார், சேவூர் ராமசந்திரன் உள்ளிட்ட 19 பேர் புதிய […]
மாணவ – மாணவிகள் 10-ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். தேர்வில் 1 மற்றும் 2 மதிப்பெண் கேள்விகள் பாடப்புத்தகங்களில் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் கேட்கப்படும் கேள்விகளில் இருந்து கேட்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு அந்த கேள்விப் பட்டியலில் இல்லாமல் பாடத்துக்குள் இருந்து வேறு சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால் விடையளிக்க கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வேலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்த 2 வீடுகளில் பூட்டை உடைத்து வாணியம்பாடி அருகே 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராமநாயக்கன்பேட்டையில் சாந்தி என்பவர் வீட்டில் 15 சவரன், 4 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேகொண்டு வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை உயர்நீதிமன்றம் கிரானைட் முறைகேடு குறித்த சகாயம் விசாரணை ஆணையத்தை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. மதுரை கிரானைட் முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைகோரிய வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணைக்குழுவை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணை, முறைகேட்டுக்கு துணை போன அதிகாரிகளை தண்டித்தல் உள்ளிட்ட 212 பரிந்துரைகளை சகாயம் ஆணையம் அளித்தது. தமிழக அரசின் பதில் மனுவில் சகாயம் குழுவின் 131 பரிந்துரைகள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்து பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதால் சி.பி.ஐ. […]
அதிமுக டிடிவி.தினகரன் துவக்கியுள்ள புதிய அமைப்பின் கொடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. ஜெயலலிதா படத்துடன் கூடிய டிடிவி அமைப்பின் கொடி, அதிமுக கொடியை போல் உள்ளதால் தடை விதிக்க வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் சுயேட்சை எம்எல்ஏ (MLA)-வான டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பையும், அதற்கான கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கொடியில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட […]
டி.டி.வி.தினகரன் மதுரை மேலூரில் கடந்த 15-ம் தேதி, `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை அறிவித்தார். 108 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றியபோதும் மேடையில் கட்சியின் நிர்வாகிகள் பேசியபோதும், அந்தக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்தின் முகம் தென்படவில்லை. திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்ட காலத்திலிருந்து மாவட்டம்தோறும் கூட்டங்களை நடத்தி வந்த சம்பத், புதிய கட்சியின் தொடக்க விழாவில் தென்படாமல் இருந்ததை ஆச்சர்யத்துடன் கவனித்தனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் […]
தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்துள்ளது. இந்தியா என்னும் துணைக் கண்டத்தில் தோன்றிய முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாடு மலை வாழ் மக்களை சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது . இவருடைய மரபணு தான் இந்தியாவில் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் தோன்றிய […]