உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திமுக உள்ளிட்ட எத்தனை கட்சிகள் விமர்சித்தாலும், ஆலமரம் போன்று நிலைத்து நிற்கும் கட்சி அதிமுக என கூறியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக அரசு இதுவரை எந்த அரசும் செய்யாத அளவில் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவதாகக் […]
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கால்வாய்கள் வழியே கொண்டுவரப்படும் தண்ணீர் ஆவியாகி வீணாவதைத் தடுக்கவே, வைகை அணையிலிருந்து மதுரைக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது என தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுடன் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, நிதி நிலைமைக்கு ஏற்ப தமிழக பட்ஜெட்டில் மின்சார வாரியத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நிதி குறைப்பால் வாரியத்துக்கு பாதிப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். நாமக்கல்லில் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வேளாண்மைக் கண்காட்சியினை திறந்து வைத்து அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில், விவசாயிகள் சாகுபடி செய்துவரும் பாரம்பரிய ரகங்களான நெல், கம்பு, திணை, வரகு, காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் மற்றும் அதன் பராமரிப்பு குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. […]
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் டிடிவி தினகரன் திராவிடத்தையும் திராவிட தலைவர்களையும் மறந்து சர்வாதிகாரியாக செயல்படுவதாக கூறியுள்ளார். நாகை மாவட்டம் சின்னங்குடியில் புதிதாக மீன் இறங்குதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகியுள்ள நாஞ்சில் சம்பத்திற்கு காலம் கடந்து ஞானோதயம் ஏற்பட்டுள்ளது என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சியில் 15 கோடி ரூபாய் செலவில் கேன்சர் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் 1 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஸ்கேன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் தலா 15 கோடி ரூபாய் செலவில் கேன்சர் சிகிச்சை மையங்கள் […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படும். வரும் காலங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை 28 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும். அதேபோல் 45-50 நாட்களுக்குள் ஒரு செமஸ்டர் தேர்வை நடத்துவதால் மாணவர்களின் நேரம் விரையமாகிறது என உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் செய்தியாளர்களுக்கு அளித்த தெரிவித்துள்ளார்.
150 சவரன் நகை சென்னை ஈக்காடுதாங்கலில் பட்டப்பகலில் மூதாட்டி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மூதாட்டியான அலமேலு என்பவர் தனது மகளுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அலமேலு வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது அவரது படுக்கை அறைக்குள் நகைகள் சிதறிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. தான் 300 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாயும் பணமும் வைத்திருந்ததாகவும், அதில் சுமார் 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், அலமேலு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வீட்டை […]
டிடிவி.தினகரன் , அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியாரின் மொத்த உருவம் ஜெயலலிதா என கூறியுள்ளார்.கடந்த 15ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தனது அமைப்பிற்கான பெயரையும், கொடியையும் அறிவித்தார். இதற்கிடையில் இன்று நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் அறிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனக்கு உடன்பாடு இல்லை. அண்ணாவும் , திராவிடமும் இல்லாத டிடிவி அணியில் நீடிக்க விரும்பவில்லை.நான் இனிமேல் எந்த அரசியலிலும் இல்லை. […]
நெல்லை: ஏர்வாடியில் அதிக மின்விளக்கு வெளிச்சத்தால் எஸ்.ஏ. இந்து துவக்கப்பள்ளி பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு கண் பாதிப்பு கண் பார்வை பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பள்ளி ஆண்டுவிழாவிற்காக இரவு அமைக்கப்பட்ட மின் விளக்குகளால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளனர் பள்ளி குழந்தைகள் கண் பாதிக்கபட்ட விவகாரம் காரணமாக கவனகுறைவாக செயல்படுதல், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள், பள்ளி நிர்வாகிகள் மீதும் ஏர்வாடி காவல்நிலையத்தில் முதற்கட்ட வழக்கு பதிவு […]
டி.டி.வி தினகரன் தன்னை மிகவும் உயர்வாக பேசி வந்த நாஞ்சில் சம்பத் நிச்சயம் ஒரு நாள் உயரத்தில் இருந்து கீழே தூக்கி போடுவார் என்று நினைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்து விலக காரணம் எதிர்பார்த்து காத்திருந்தவர் அமைப்பின் பெயரை ஒரு காரணமாக கூறியுள்ளதாகவும் தினகரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் திருச்சி விமான நிலையத்தில் பணிக்கு ஆள்தேர்வு நடைபெறுவதாக வரும் பொய்யான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருச்சி விமான நிலைய பணிக்கு ஆள்தேர்வு நடைபெறுவதாக செய்தி தாள்களில் வரும் மோசடி விளம்பரங்களை நம்பி பலர் பணம் கொடுத்து ஏமாந்து வருவதாகவும், மோசடி விளம்பரங்கள் செய்து ஏமாற்றும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் […]
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமிழகத்திலிருந்து அதிகளவில் வருவாய் பெற்ற போதும், தமிழகத்திற்கு தேவையான நிதியை, மத்திய அரசு வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். சென்னை வேளச்சேரியில் 2 நாட்கள் நடைபெறும் விவசாய முதலீட்டாளர்கள் கருத்தரங்கை தொடக்கி வைத்து பேசிய அவர், போதுமான நிதியை பெறவே மத்திய அரசுடன் தமிழக அரசு சுமூகமாக இருப்பதாக விளக்கம் அளித்தார். திமுக செயல் தலைவர் கூறுவது போன்று உடனடியாக ஆட்சியை கலைத்து விட முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
அ.தி.மு.கவுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்றால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து துணிச்சலோடு முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வாக்குறுதிப்படி சிறப்பு அந்தஸ்தை வழங்க மறுத்த மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொண்டதையும், கூட்டணியிலிருந்து விலகியதையும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டிள்ளார். இந்த நிலையில் ஆறு வார காலத்திற்குள் காவிரி […]
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் கர்நாடகத்தை ஒட்டி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு மற்றும் தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஓரிரு முறை இடைவெளி விட்டு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது.
ஆர்.கே. நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன், அண்ணா, திராவிடத்தை புறக்கணிக்கவில்லை. எங்கள் அமைப்பின் பெயர் காரணத்தால் நாஞ்சில் சம்பத் விலகியிருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.இதற்கு முன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், திராவிடத்தை புறக்கணித்து விட்டதாக நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது. அண்ணா, திராவிடத்தை புறக்கணிக்கவில்லை. பெயர் காரணம் கூறி வெளியேறியிருப்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார். மேலும், நாஞ்சில் சம்பத் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம் பெறும் என்றும், பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என கூறியுள்ளார். ஈரோட்டை அடுத்த வெள்ளோட்டில் நாட்டு நல பணித்திட்ட முகாமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் 412 நீட் தேர்வு மையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த முழு விபரம் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தங்களின் கடைசி பட்ஜெட்டை ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் தாக்கல் செய்துள்ளனர். தினகரன் எம்எல்ஏ அடுத்த பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம் என திட்டவட்டமாகத் தெரிவித்தார். மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக பட்ஜெட் பெயரளவிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் தாக்கல் செய்துள்ள கடைசி பட்ஜெட் இது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையுடன் அடுத்த பட்ஜெட்டை தாக்கல் செய்யும். நாங்கள் கொடியை அறிவித்தவுடன் பயந்துபோய் அதிமுக கொடிபோல இருப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர். நாங்கள் பெயரில்லாமல் […]
முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா 15 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் சந்திரபாபு நாயுடு செய்ததை போல முதல்வரால் செய்ய முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினி கூறுவது ஏற்புடையதல்ல என்றும், 18 வயது தொடங்கி 65 வயது […]
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், ராமேஸ்வரம், சேலம், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அமைச்சர் ஜெயக்குமார், நாஞ்சில் சம்பத் வெளியேறியதுபோல் தினகரனுடன் இருக்கும் மற்றவர்களும் வெளியேறுவார்கள் என்று கூறியுள்ளார். சென்னை மந்தை வெளியில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான இறகுப் பந்துப் போட்டியைத் தொடங்கி வைத்த அவர், இறகுப் பந்து விளையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு நிகராக கட் அவுட் வைக்கும் தகுதி தினகரனுக்கு இல்லை என்றும் பில்டப் கொடுப்பவர்கள் நீண்டநாள் நிலைக்க முடியாது என்றும் கூறினார். நாஞ்சில் சம்பத்தை தொடர்ந்து நெல்லிக்காய் உதிர்வதை போல் […]