அமலாக்கத்துறை 2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இது திமுகவினருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. அந்நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியோரின் தரப்பின் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ராசா மற்றும் கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து டெல்லி […]
இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாட சட்ட விதிகளில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் தொடர்ந்த வழக்கில் வெளியுறவுத்துறை இலங்கைக்கான துணைச் செயலர் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க கடந்த 34 ஆண்டுகளாக மத்திய அரசு தவறிவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.கடல் எல்லையில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர் என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
வழக்கறிஞர் அசோகன் சசிகலாவுக்கு பரோல் கேட்டு ஓரிரு நாட்களில் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் பரோல் பெறுவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளது என்றும் சிக்கல்கள் தொடர்பாக ஆலோசித்து மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். சசிகலாவுக்கு பரோல் பெறுவது தொடர்பாக சிறை அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு ஆன்லைன் பத்திர பதிவில் உள்ள பிரச்சினைகள் இன்னும் 10 நாட்களில் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. ஆன்லைன் பத்திரப்பதிவில் நிலவி வரும் குளறுபடிகள் தொடர்பாக, சிவகாசியைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த மாதம் 12 ஆம் தேதி முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் முறையில் உடனடியாக பத்திரப் பதிவை மேற்கொள்ள முடியவில்லை என மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. ஆன்லைன் பத்திரப்பதிவின் […]
கழுகுமலை அருகேயுள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சரஸ்வதி(45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான சங்கர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி, குழந்தைகளை அடித்து உதைத்தார். இந்நிலையில் நேற்று குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த இரும்பு கம்பியால் சரஸ்வதியின் தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் கழுகுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் […]
கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். உயரதிகாரி, ஆய்வு செய்யாமல் சென்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இம்மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகளும், 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்துக்களில் படுகாயமடைவோருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் போதிய டாக்டர், செவிலியர் மற்றும் பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். சிகிச்சைக்கு […]
கடும் அமளியால் கடந்த 5-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் 11 நாட்களும் முடங்கியுள்ளது.அ.தி.மு.க எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபடுகின்றனர். ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஆந்திர மாநில எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால், அவை சுமூகமாக நடக்காத நிலையில், இந்த நோட்டீஸை விவாதிக்க முடியாது […]
சென்னையில் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தின் ஜீயர் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் மாரடைப்பு காரணமாக காலமானார். ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையோரம் அமைந்துள்ள ஆண்டவன் ஆசிரமத்தின் ஜீயரான அவருக்கு 83 வயதாகிறது. மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பிற்பகல் 12.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று மக்களவை துணை சபாநாயகர் மற்றும் அதிமுக எம்பி தம்பித்துரை கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் தமிழகம் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. அதிமுக எம்பிக்கள் வெளிப்படையாக மத்தியா அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக சட்டசபையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுக […]
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம், காவல்துறையினர் பிரச்சனைகளை தீர்க்க நிபுணர் குழு அமைக்க ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டும் இன்னும் ஏன் அமைக்கவில்லை? என கண்டனம் தெரிவித்துள்ளது. சுப்பு என்ற ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளர் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், குற்றவாளிகளுக்கு மட்டும்தான் மனித உரிமையா? காவலர்களுக்கு இல்லையா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. காவலர்களுக்கு பணி நேரம் எவ்வளவு என்ற கேள்விக்கு, குறிப்பிட்ட நேரம் ஏதும் இல்லை என அரசு பதில் அளித்துள்ளதாக சுட்டிக்காட்டி […]
கமல்ஹாசனுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி சமூக சேவைகளையும் செய்து வரும் செயல்பாட்டாளர்கள் பலர் மேற்பட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற சுமார் 60-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காவல்துறையினர் பிரச்சினைகளை தீர்க்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்.?. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நிபுணர் குழுவினர் பட்டியலை வரும் 22 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். பட்டியலை சமர்பிக்க்கவிட்டால் உள்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் அதிகாரிகள் வீட்டில் எவ்வளவு காவலர்கள் வேலை பார்க்கின்றனர்.?. குற்றவாளிகளுக்கு மட்டும் தான் மனித உரிமையா.? காவலர்களுக்கு இல்லையா.? : நீதிபதி கிருபாகரன் கேள்வி.
தமிழகத்தில் நடந்த காவலர்கள் தற்கொலை என்பது குடும்ப, உடல்நிலை, காதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நிகழ்கிறது. காவலர்கள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணிச்சுமையை கருத்தில் கொண்டு காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடல்நலத்தை பேணிக்காக்க யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. காவலர்கள் தற்கொலை தொடர்பாக தமிழக சட்டமன்ற பேரவையில் முதலமைச்சர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லையை விரிவுபடுத்துவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லையை ஆயிரத்து 189 சதுர கிலோமீட்டரில் இருந்து 8 ஆயிரத்து 878 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஏற்கனவே, சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் பணிச்சுமையால் தவித்து வருவதாகவும், எல்லைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எல்லைகளை […]
காவல்துறையினர், புதுச்சேரி வில்லியனூரில் திராவிடர் கழகத்தினருக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருபிரிவிலும் 20பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். புதுச்சேரி வில்லியனூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேச்சாளர் ஒருவர் கடவுள் குறித்துப் பேசியபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் மேடையை நோக்கிக் காலணி வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. அங்குத் திரண்டு வந்த பா.ஜ.க.வினர், தொடர்ந்து கூட்டம் நடத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் இருபிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு சமாதானப்படுத்தினர். இந்த மோதல் […]
புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராசனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக குளோபல் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூரில் உள்ள அந்த மருத்துவமனையில் கடந்த 16ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும் நடராசனுக்கு தீவிர மார்பக தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவிகள் அவருக்கு பொருத்தப்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே நடராசனை கவிஞர் வைரமுத்து […]
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. கேரள கடற்பகுதி மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாகவும், கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேகம் மற்றும் திசை மாறுபாடு காரனமாகவும் தமிழகத்தில் மழைப் பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் உதகையில் 5 செண்டி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையத்தில் 4 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி […]
சிறை நிர்வாகம் சொத்து குவிப்பு வழக்கில்,பெங்களூரு அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிற்கு பரோல் வழங்க மறுத்து உள்ளது. கடந்த 16ம் தேதி இரவு சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று கூறியது இதனை தொடர்ந்து பரோல் கேட்டு சசிகலாமனு கொடுத்திருந்தார். இந்நிலையில் நடராஜன் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் உள்ளது என மருத்துவர்கள் கூறியதால்,சசிகலாவிற்கு பரோல் மறுக்கப்பட்டது சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாராசிறையில் […]
மு.க.ஸ்டாலின் , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில்,துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் காவிரி விவகாரத்திற்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பதில் அளித்துள்ளார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் தாக்கல் செய்து பேசிய ஸ்டாலின், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் எனச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு […]
வீட்டில் நகை, பணம் கிடைக்காத அதிருப்தியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சித்த மர்மநபர்கள், தீவைத்து விட்டு தப்பிச் சென்றனர். தேவகோட்டை ராம்நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதனால் இவரது வீட்டில் கொள்ளை அடிக்க திட்டமிட்ட மர்மநபர்கள், நேற்றிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் நகை, பணத்தை தேடியுள்ளனர். ஆனால் எதுவும் கிடைக்காத நிலையில் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் தீ வைத்து விட்டு தப்பினர். வீட்டிற்குள் இருந்து புகை […]