சென்னை : தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசைப்படகுகள், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் […]
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடியவிடிய மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக நன்னிலம் 6 செ.மீ., திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அடுத்த 2 மணி மணி நேரத்திற்குமழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி, […]
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சி ஆரம்பித்து தனது முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27இல் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இதுவரை திரையில் கண்ட தங்கள் ஆஸ்தான ஹீரோவை கட்சித் தலைவராக காண மாநாட்டிற்கு ரசிகர்கள் தொண்டர்களாக வெள்ளம் போல திரண்டனர். சுமார் 13 லட்சம் பேர் தவெக முதல் மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாநாட்டில் விஜய் பேசிய திராவிடம், […]
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் என்பவரை கடந்த நவம்பர் 13ஆம் தேதி விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தினார். தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் கூறியதாக தகவல்கள் வெளியாகின. தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் குற்றவாளி விக்னேஷ் கைது கிண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தென்மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரேசில், ரியோவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், நேற்று உரையாற்றிய மோடி, ‘பல்வேறு நாடுகளிடையே நீண்ட காலமாக நீடிக்கும் போர்கள் மற்றும் போர் பதற்றத்தால் தெற்கு நாடுகள் மிகக் […]
சென்னை : வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்களும் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வலி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக ஒரு சில தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு […]
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில் யானை பாகன் மற்றும் பாகனின் உறவினர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 வயதுடைய தெய்வானை எனும் பெண் யானை திருச்செந்தூர் முருகன் கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த யானையை பராமரிக்கும் பொறுப்பை பாகன் உதயகுமார் என்பவர் மேற்கொண்டு வந்துள்ளார். இவரது உறவினர் சிசுபாலன் என்பவர் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்துள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் […]
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேத்திற்கு (இரவு 7 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், […]
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் தெய்வானை எனும் 25 வயது மதிக்கதக்க யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் பாகனாக உதயகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். இன்று இவரை காண பாகனின் உறவினர் சிசுபாலன் என்பவர் களியக்காவிளை பகுதியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணியளவில், திடீரென கோயில் […]
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி இடம் மாற்ற மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக பிராட்வே – முகப்பேர் (7M), வடபழனி – தரமணி (5T) ஆகிய இரு வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டு சென்னை மாநகராட்சியிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக சிக்னல் […]
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக கட்சிகள் குறித்தும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை கூறினார். திமுக ஆட்சி பற்றி சீமான் கூறுகையில், “எங்கு போனாலும் மக்கள் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என மக்கள் கூறுவதாக முதல்வர் கூறுகிறார். அப்படியே என்னோடு வாருங்கள். மனுவோடும் கண்ணீரோடும் காத்திருக்கும் மக்களை காட்டுகிறன். ஆட்சி சூப்பர் […]
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு […]
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் தாக்கி பேசி இருந்தார். அதில், குறிப்பாக, “அப்பா மகனைப் புகழ்ந்து பேசுகிறார். மகன் அப்பாவைப் புகழ்ந்து பேசுகிறார். இது தான் திமுக ஆட்சியின் வேடிக்கை” எனப் பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்து உதயநிதி ஸ்டாலினும் தனது எக்ஸ் தளத்தில் […]
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் தவெ.க கட்சியுடன் எந்த காட்சிகள் கூட்டணி வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சமீப நாட்களாக, கூட்டணி கட்சி தொடர்பான தகவல் பரவி வந்தது. அந்த தகவலின்படி, அதிமுகவுக்கு 154, தவெகவுக்கு 80 என தொகுதி பங்கீடு செய்து, 2026 தேர்தலை கூட்டாக சந்திக்க […]
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில் 15.2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (பிற்பகல் 1 மணி வரை) எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் […]
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று அவர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். அதன் பின், இன்று காலை சென்னையில் நிதிக்குழு தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், “பல முக்கியமான திட்டங்களைத் தீட்டி அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநிலங்களிடம் தான் இருக்கிறது. […]
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில் தற்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், அரசுப் பேருந்துகள் முன்பதிவை தொடங்குவதால் பொங்கல் நேர பயணத்திற்கு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் தற்பொழுது மக்களுக்கு ஏதுவாக சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயணம் செய்ய ஏதுவாக, தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே […]
சென்னை : ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த கைலாஷ் கேலோட். நேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகி, ஒரே நாளில் பாஜகவில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில், அதிமுக தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என பேசப்பட்டு வந்த நிலையில், ‘திமுகவுடன் கூட்டணி இல்லை எனவும் அதிமுகவுடன் கூட்டணி குறித்த இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது எனவும்’, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தீவிரமடையும் என்று தெரிவித்தது போல தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி இருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை 10 […]