தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிப்பு…! யார் யாருக்கு தெரியுமா..?
இந்த ஆண்டு 128 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படவுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம் ,விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த முறையில் பணி புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு 128 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுளோர் விபரம் பின்வருமாறு,
- சிற்பி சுப்பிரமணியம் (இலக்கியம், கல்வி),
- நடராஜன் (கலை),
- முத்துக்கண்ணம்மாள் (கலை),
- சவுகார் ஜானகி (கலை),
- எஸ்.தாமோதரன் (சமூக சேவை),
- வீராசுவாமி சேஷையா (மருத்துவம்),
- எஸ்.பல்லெஸ் பஜந்திரி