பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் குறித்து பிஎஸ்பிபி பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜரான 2 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது. ஆசிரியர் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலாவிடம் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இணையத்தில் புகார்கள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலன் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர், ராஜகோபாலனை ஜூன் 8-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் ராஜகோபாலன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…